பொள்ளாச்சியில் சடங்குகள் இன்றி கழகத் தோழர் இல்லத் திறப்பு

பொள்ளாச்சி ஆனைமலையில் 8.4.2018 அன்று கழகத் தோழர்கள் அனுசுயா-கணேசன் இணையரின் இல்லத் திறப்பு விழா எவ்வித சடங்குகளும் இல்லாமல் நடைபெற்றது. இல்லத்தினை கணவரை இழந்த கழகத் தோழரின் உறவுப் பெண் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அனைவரும் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.  மணிமொழி வரவேற்றுப் பேசினார். கழகப் பொறுப்பாளர் பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, “புதுமனை புகு விழா வைதிக முறையில் ஏன் செய்யப்படுகிறது என்பதையும், அதில் நம்மை நாமே இழிவு செய்து கொள்வதையும், சடங்குகள், சாதி, கடவுள் மோசடிகள் குறித்தும் விளக்கினார். தோழர்கள் இசைமதி, வினோதினி, பெண் உரிமைப் பாடல்களைப் பாடினர்.

மடத்துக்குளம் மோகன், ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்ச்சி நடத்தி, அறிவுக் கருத்துகளை பாமரருக்கும் புரியும் வகையில் பேசியது அனைவரையும் கவர்ந்தது. இறுதியாக கணேசன் நன்றி கூறினார்.

ஆனைமலை சட்ட எரிப்புப் போராளி ஆறுமுகம், ஆனைமலை கழகத் தோழர்கள் அரிதாசு, ஆனந்த், மணி, விவேக் சமரன், சிவா, முருகேசன் மற்றும் கோவை மாவட்டப் பொறுப்பாளர்கள், நிர்மல்-இசைமதி இணையர், கிருஷ்ணன்-ராஜு இணையர் மற்றும் பல தோழர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பக்தர்களே பதில் சொல்லுங்கள், இவர்தான் பெரியார், இடஒதுக்கீடு உரிமை, சபாஷ் அம்பேத்கர் நூல்கள் வழங்கப்பட்டன.

கழக வளர்ச்சிக்கு ரூ.500 நன்கொடை வழங்கப் பட்டது.

பெரியார் முழக்கம் 03052018 இதழ்

You may also like...