SC/ST வன்கொடுமைச் சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய கருத்தரங்கம் ! 19.04.2018 – சென்னை.

SC/ST வன்கொடுமைச் சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய கருத்தரங்கம் !
19.04.2018 – சென்னை.

ஏற்கனவே காவல்துறையின் அக்கறையற்றத் தன்மை, உயர்ஜாதியினரின் பண,ஆட்பலம், ஒடுக்கப்பட்ட மக்களின் அறியாமை, உயர்ஜாதி நிலவுடமையாளர்களைச் சார்ந்திருக்கவேண்டிய அவலநிலை போன்ற எண்ணற்றக் காரணங்களால் சட்டத்தின் நோக்கத்தை ஓரளவுகூட நிறைவு செய்யாதநிலையில் அண்மையில் வன்கொடுமைச் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பு மேலும் சட்டத்தை நீர்க்கச் செய்துள்ளது.

இதுகுறித்து ஆயவும், உரிய தொடர் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஏற்பாட்டி, சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் 19-4-2018 அன்று மாலை 5-00 மணிக்கு அவ்வமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் உதயம் மனோகரனின் தலைமையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இளைஞர் இயக்கம் மருத்துவர் எழிலன், மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, மேனாள் நீதிநாயகம் அரிபரந்தாமன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

Image may contain: 3 people, people smiling, people standing

You may also like...