தலைமை செயலகம் முற்றுகை சென்னை 24042018

தலைமை செயலகம் முற்றுகை

தூத்துக்குடியில் தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து அமைதி வழியில் தன்னெழுச்சியாக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 12 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலை செய்த தமிழக அரசையும், தமிழக காவல்துறையையும், கண்டித்தும்.தமிழக முதல்வரை உடனே பதவி விலக வலியுறுத்தியும்,இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திட வலியுறுத்தியும் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும்

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு, மற்றும் இயக்குனர்,திரு, பாரதிராஜா. அவர்களின் தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை, மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, ஆகியவற்றின் சார்பில் நாளை (24-05-2018) வியாழன், மாலை 3 மணியளவில், சேப்பாக்கம் அண்ணா சிலையிலிருந்து பேரணியாக சென்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற இருக்கிறது,

இதில் திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர் கொளத்தூர் மணி அவர்களும் பங்கேற்கிறார் எனவே தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தபசி குமரன், தி.வி.க

You may also like...