தருமபுரி மாவட்ட கலந்துரையாடல்

தருமபுரி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 24.4.2018 அன்று நடைபெற்றது. ஈரோடு புதிய கிளைகளுக்கான பொறுப்பாளர்கள் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பிரச்சாரச் செயலாளர் பிரபாகரன் முன்னிலையிலும் தேர்வு செய்யப்பட்டனர். வரும் மே – 9. முதல் 12 வரை நடைபெறும் ஊர்தி பரப்புரைப் பேரணிக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது,  பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ்கள் சந்தா சேர்ப்பது; மாதம் ஒரு முறை தோழர்கள் சந்தித்து கலந்துரையாடல் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. 25 தோழர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கீழ்கண்ட புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்: பாப்பிரெட்டிப்பட்டி – சிவக்குமார், அரூர் – பெருமாள், தர்மபுரி – சுதந்திர குமார், பென்னாகரம் – நஞ்சப்பன், காரிமங்கலம் – செந்தில், நல்லம்பள்ளி – இராமதாசு, மாவட்ட மகளிரணி – பரிமளா, மாவட்ட அறிவியல் மன்றம் – வையாபுரி  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பெரியார் முழக்கம் 03052018 இதழ்

You may also like...