தூத்துக்குடி படு கொலைகள் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – மேட்டூர் 23052018.

 

தூத்துக்குடியில் மனித உயிர்களைப்பறிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும்,அறவழியில் போராடிய மக்கள் மீது அரச பயங்கர வாதத்தை ஏவி துப்பாக்கிச்சூடு நடத்தி படு கொலைகள் செய்த மத்திய மாநில அரசுகளையும்,காவல்துறையையும் கண்டித்து 23.05.2018 அன்றூ மேட்டூர் பெரியார் பேருந்து நிலையம் முன்பு திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச்செயலாளர் தோழர் சி.கோவிந்த ராசு தலைமை தாங்கினார்.இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரசெயலாளர் தோழர் அப்துல் கபூர்,மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் தோழர் கருப்பண்ணன்,சேலம் மேற்கு மாவட்டத்தலைவர் தோழர் சூரியகுமார்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச்செயலாளர் தோழர் மோகன்ராஜ்,நாம் தமிழர் கட்சியின் நகரசெயலாளர் தோழர் மூர்த்தி,கழகத்தோழர் மா.சுந்தர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இறுதியாக கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தூத்துக்குடி சம்பவம் குறித்து விளக்கி கண்டன உரையாற்றினார்.தோழர் குமரேசன் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் முடிந்தது.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பல்வேறு பகுதிகளிலிருந்து தோழர்களும் பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.

Image may contain: one or more people, people on stage, people standing and outdoor

You may also like...