ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களை படுகொலை செய்த எடப்பாடி அரசையும், காவல்துறையை கண்டித்து சென்னையில் மறியல் 22052018

 சென்னை அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்ட கழகத் தோழர்கள் காவல்துறையால் குண்டு கட்டாக இழுத்து செல்லப்பட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 100 நாட்களாக போராடி வரும் மக்கள் மீது காவல்துறையின் அடக்குமுறையை ஏவி துப்பாக்கி சுடு நடத்தி 10 பேர்களுக்கும் மேற்பட்ட மக்களை படுகொலை செய்த எடப்பாடி அரசையும், காவல்துறையை கண்டித்து….

சென்னை அண்ணா சாலையில் 22.05.2018 மாலை 6.30 மணிக்கு தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்ட செயலாளர்)அவர்கள் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தோழர்கள் அனைவரும் புதுப்பேட்டை சமூகநலக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

Image may contain: one or more people and outdoor

You may also like...