கல்வி வேலை வாய்ப்பு உரிமை கோரி தமிழ்நாடு மாணவர்க் கழகம் ஆர்ப்பாட்டங்கள்
திருப்பூரில் : திருப்பூர் 02-05 2018 புதன்கிழமை காலை 11 மணி அளவில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக தமிழக மாணவர்களின் கல்வி வேலை வாய்ப்பு உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சியின் முன்பு நடைபெற்றது.
1) தமிழக அரசு இயற்றிய ‘நீட்’ விலக்கு தொடர்பான சட்ட மசோதாவுக்கு இசைவு கோரியும்,
2) கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25ரூ மாணவர் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்தக் கோரியும்,
3) பட்டியலின பழங்குடி மாணவர்களின் பொறியியல் படிப்பைத் தடுக்கும் அரசாணை 51,52 யை இரத்து செய்து முன்பு இருந்ததுபோல அரசாணை92 ஐ நடைமுறைப்படுத்தக் கோரியும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கோரிக்கை மனு ஆட்சியர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் தேன்மொழி (மாவட்ட அமைப்பாளர் – டி.எஸ்.எப்.), தமிழ் செழியன் (டி.எஸ்.எப்.), மதுலதா (டி.எஸ்.எப்.) ஆகியோர் உரையாற்றினர்.
வீ. சிவகாமி (தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம்), முகில் இராசு (மாவட்ட தலைவர் திவிக), நீதிராசன் (மாவட்டச் செயலர் திவிக), பிரசாந்த் (புற நகர் கழக செயலாளர் – டி.எஸ்.எப்.), கனல் மதி (மாநகர செயலாளர் டி.எஸ்.எப்), அரிசுகுமார் (டி.எஸ்.எப்-மாவட்ட அமைப்பாளர்), தினேசுகுமார், சிபு அர்ஜூன், பார்த்திபன், மனோராகுல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
ஈரோட்டில் : தமிழக மாணவர்களின் கல்வி வேலைவாய்ப்பு பறிபோவதை கண்டித்து மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீரப்பன் சத்திரத்தில் 02.05.2018 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.பிரபாகரன் (புறநகர அமைப்பாளர் த.மா.க) தலைமை தாங்கினார். ரா.பிரபு (மாவட்ட அமைப்பாளர் த.மா.க) முன்னிலை வகித்தார். சீரா. சௌந்தர், அ.பிரதாப், பாரதி கண்டன உரைக்குப் பிறகு, இனியன் நன்றி கூறினார்.
பொள்ளாச்சியில் : தமிழக மாணவர்களின் கல்வி, வேலை வாய்ப்புரிமை பறிப்பினைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 5-5-18 மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் சபரிகிரி தலைமையேற்றார். திராவிடர் கழக செயற்குழு உறுப்பினர் தி.பரமசிவம், திமுக நகரத் துணைச் செயலாளர் ந.கார்த்திகேயன், திராவிடர் விடுதலைக் கழகப் பொறுப்பாளர் வெள்ளிங்கிரி, தமிழ்நாடு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் காசு. நாகராசன், நேதாஜி இளைஞர் பேரவைத் தலைவர் வெள்ளை நடராஜ், தென்னை தொழிளாளர் பேரவை ஒருங்கிணைப்பாளர் ர.கருப்புசாமி, தமிழ்நாடு மாணவர் மன்றம் அமைப்பாளர் தினேசு குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சென்னையில் : தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் பறிபோகும் தமிழக மாணவர்களின் கல்வி, வேலை வாய்ப்புரிமை பறிப்பினைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 05.05.2018 மாலை 4 மணிக்கு ,சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் இளவரசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை இராசேந்திரன் (பொதுச் செயலாளர், திவிக) இயக்குனர் கௌதமன், பாரி சிவக்குமார் (மாநில அமைப்பாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்), லயோலா மணி (தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு), அப்துல் ரஹீம் (தமிழ்நாடு மாணவர் முன்னணி), ஜாவித் ஜாபர் (மாநில பொருளாளர்), மாணவர் இந்தியா, காஸ்ஸாலி மீரான் (கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா), செம்பியன் (தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு), குர்ஷீத் (சமூகநீதி மாணவர் இயக்கம்), வி.அன்பழகன் (தமிழ்நாடு தேசிய இயக்கம்), ஷீலா (தமிழ்நாடு மாணவர் இயக்கம்) ஆகியோர் கண்டன உரையாற்றினர். மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், கல்வி, வேலை வாய்ப்புரிமையை மீட்கவும் முழக்கமிட்டனர். தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி சிவக்குமார் ஒருங்கிணைத்தார். ஆர்ப்பாட்டத்தில் சென்னை திவிக தோழர்கள், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகரன், அய்யனார், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், குகன், கரு. அண்ணாமலை, உள்ளிட்ட கழகத் தோழர்கள் 50 க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர். பொதுச்செயலாளர், இயக்குனர் கவுதமன் ஆகியோரின் கண்டன உரையை அடுத்து 7.30.மணிக்கு ஆர்ப்பாட்டம் முடிவுற்றது..
பெரியார் முழக்கம் 10052018 இதழ்