தோழர் பண்ருட்டி வேல்முருகன் கைது – கழகம் கண்டனம் !

தோழர் பண்ருட்டி வேல்முருகன் கைது – திராவிடர் விடுதலைக் கழகம் கண்டனம் !

தோழர் பண்ருட்டி வேல்முருகன் அவர்களை விடுதலை செய் !
தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் தலைவர்கள் மீது ஒடுக்குமுறையை கைவிடு !

நீதிமன்றம் உத்தரவிட்டும் பெண்களை இழிவு படுத்திய பார்ப்பான் எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசின் காவல் துறை,

நீதிமன்றம் உத்தரவிட்டும் சோடா பாட்டில் வீச்சு சமூக விரோதி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்க முன்வராத தமிழக அரசின் காவல்துறை,

வழக்குகளை கண்டு அஞ்சாமல், தலைமறைவாகாமல் காவல்துறை விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரும் தோழர் பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் பொது வெளியில் மக்களுக்காக இயங்கி வரும் தலைவர் ஆவார். எப்போதோ போடப்பட்ட வழக்கில் இப்போது அதுவும் தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற நேரத்தில் தடுத்து கைது செய்வதற்கு என்ன அவசர அவசியம் வந்துள்ளது?

மக்களுக்காக போராடுபவர்களையே குறிவைத்து இந்த காவல்துறை கைது செய்கிறது என்றால் இது மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய காவல்துறையா?
அல்லது தனியார் நிறுவன முதலாளிகளின் காக்கி கூலிப்படையா ?

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு அந்த மக்களை காக்கும் கடமையை செய்யாமல் இந்த நன்றி கெட்ட அரசின் காவல் துறை அந்த மக்களையே ரத்த வெறி கொண்டு குதறுகிறது என்றால் தனியார் நிறுவன முதலாளிக்கான கூலிப்படையாக செயல்படுகிறது என்று தான் பொருள்.

அரசு,உளவுத்துறை,காவல் துறை ஆகியவை இணைந்து தமிழர்களின் உரிமைகளுக்காக களத்தில் போராடும் மக்கள் பிரதிநிதிகளை கைது செய்வதன் மூலம் தமிழர்களின் ஒட்டு மொத்த உரிமைகளையும் பறிப்பதை யாரும் கேள்வியே கேட்கக் கூடாது எனும் சர்வாதிகார போக்கில் நடந்து கொள்வது, ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் போக்காகும்.

நீதிமன்றம்,ஜனநாயகம்,அரசு,காவல் துறை ஆகியவற்றின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இது போன்ற அரசின் பாசிச நடவடிக்கைகளால் தகர்க்கப்படுமானால் அது மக்களை பெரும் போராட்டங்களை நோக்கி உந்தித் தள்ளுமே ஒழிய உரிமைப் போராட்டங்களுக்கு பின்னடைவை ஒரு போதும் கொடுத்து விடாது.இப்படியான கைது நடவடிக்கைகள் மூலம் மக்களின் உரிமைப் போராட்டங்களை ஒடுக்கி விடலாம் என்று கருதுகிற மத்திய,மாநில அரசுகளின் கனவு ஒருபோதும் பலிக்காது.

நேற்று (25.05.2018) தூத்துக்குடியில் நாசகர ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது காவல் துறையை ஏவி தமிழக அரசு நடத்திய கொலை வெறித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடிக்கு சென்ற தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவரும், தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் பண்ருட்டி வேல்முருகன் அவர்களை மக்களை சந்திக்க விடாமல் தடுத்த தமிழக காவல் துறை
நீதிமன்ற வழிகாட்டுதல்களையெல்லாம் மீறி, அடிப்படை மனித உரிமைகளையும் மீறி தனிமையில் சிறை வைத்து தண்ணீர், உணவு கூட சரிவர அளிக்காமல் காற்றோட்டம் இல்லாத அறையில் அடைத்து வைத்திருந்தது தமிழின உணர்வாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. அவரை சந்திக்கவே யாருக்கும் அனுமதி மறுத்துள்ளது அச்சுறுத்தும் நோக்கில் செய்துள்ள அப்பட்டமான பாசிச வெறிச்செயல் ஆகும்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள தோழர் பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் இன்று (26.05.2018) காலை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சேதப்படுத்தியதாக முன்பு தொடரப்பட்ட வழக்கில் இப்போது 15 நாள் நீதிமன்ற காவலில் கைது செய்திருப்பதாக அரசு அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள தோழர் பண்ருட்டி வேல்முருகன் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் தலைவர்கள் மீது ஒடுக்குமுறையை தொடர்ந்து ஏவி விடும் மத்திய மதவெறி பா.ஜ.க. அரசின் ஏவலாளிகள் போல் செயல்படும் தமிழர் விரோத தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

You may also like...