கொளத்தூர் மணி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மயூரப்ரியன் உரை மாணவர்களுக்கு சமூக அரசியல் பயிற்சி
இளைய தலைமுறைக்கு சமூக அரசியல் வரலாறுகளைப் புரிய வைக்கும் தேவை உருவாகி இருக்கிறது. இட ஒதுக்கீட்டு உரிமையைப் பயன்படுத்தி கல்வி வேலைவாய்ப்புகளைப் பெறும் மாணவர்களுக்கு அந்த இட ஒதுக்கீட்டின் வரலாறு, நோக்கம் பற்றிய புரிதல் இருப்பது இல்லை! சமூகம் மற்றும் கல்வி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு ஜாதி ஒரு அடையாளமாக ஏன் ஏற்கப்பட்டது என்ற சமூகப் புரிதலை இளைஞர்களிடம் விளக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இட ஒதுக்கீட்டு கொள்கைகள் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பு மனுஸ்மிருதி அடிப்படையிலேயே சமூகத்தில் இட ஒதுக்கீடு இருந்தது. அதன்படி பிராமணர்களே கல்வி கற்கும் உரிமையை பெற்றிருந்தார்கள்; ‘சூத்திரர்கள்’ பிராமணர்களின் அடிமைகளாகவும், அவர்களுக்கு கல்வியே கிடைக்காமல் தடை செய்யப்பட வேண்டும் என்பதுமே எழுதப்படாத சமூக சட்டமாக இருந்தது. சமூகத்தை மனுஸ்மிருதி வழியாக பார்ப்பனர்கள் தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தார்கள். சேர, சோழ, பாண்டியர்கள் மன்னர்களாக இருந்தாலும் அவர்கள் பள்ளிகளைக் கட்டவில்லை; கோயில்களைக் கட்டி பார்ப்பனர்களை அதிகாரத்திற்கு கொண்டு வந்தார்கள்....
