Category: செய்திகள்

நாத்திகர்கள் எண்ணிக்கை உயர்வு!

நாத்திகர்கள் எண்ணிக்கை உயர்வு!

உலகளவில் மத நம்பிக்கையில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது Pew Research Centre நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2010–2020 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் 27 கோடி பேர் தங்கள் மதத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். நாத்திகர்களின் மொத்த மக்கள் தொகை 190 கோடியாக உயர்ந்துள்ளது. அய்ரோப்பா, யு.எஸ்.ஏ., ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள கிறித்தவர்களே பெரும்பாலும் மத நம்பிக்கையில் இருந்து வெளியேறியுள்ளனர். பெரியார் முழக்கம் 19062025இதழ்

அசைவ இந்துக்களை அவமதிக்கும் பார்ப்பனியம்!

அசைவ இந்துக்களை அவமதிக்கும் பார்ப்பனியம்!

திருவண்ணாமலை கோயில் வளாகத்தில் கிராமத்தில் இருந்து வந்த ஒரு தம்பதியினர் முட்டை பிரியாணி சாப்பிட்டார்கள் என்பதற்காக கோயில் தீட்டாகிவிட்டது என்று கூறி, தீட்டு கழிக்கும் சடங்குகளையும் யாகங்களையும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் அசைவம் சாப்பிடுகிறவர்கள்தான்! அவர்களை கடவுள் ஏற்றுகொள்கிறார், ஆனால் அவர்கள் சாப்பிடுகிற அசைவ உணவு ஆண்டவனுக்கு தீட்டு என்று சொல்லி அசைவ உணவுக்காரர்களையே ஆரியம் அவமதிக்கிறது. ஆண்டவனின் உணவு பியூர் வெஜிடேரியன் என்று இவர்களுக்கு யார் சொன்னது? அர்ச்சகராக இருக்கிறவர்கள் சைவ உணவுக்காரர்களாக இருக்கிறார்கள், என்பதற்காக கடவுளையும் சைவத்திற்கு இவர்கள் மாற்றிக் கொண்டு விட்டார்களா? அசைவ உணவுக்காரர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று சொன்னால் கோயில்களை இழுத்து மூடி விட வேண்டியதுதான். பெரும்பான்மை மக்களை இப்படி புண்படுத்துகிறவர்கள்தான் இந்துக்களைப் புண்படுத்துகிறார்கள் என்று அவ்வப்போது கூச்சல் போட்டு வருகிறார்கள். மதக்கலவர நோக்கத்தோடு மதுரையில் முருகன் மாநாட்டை நடத்துகிறது பாரதிய ஜனதா கட்சி. முருகன்...

தமிழ்நாடு முதல்வருடன் கழகத் தலைவர் சந்திப்பு!

தமிழ்நாடு முதல்வருடன் கழகத் தலைவர் சந்திப்பு!

தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் 12.06.25 வியாழன் அன்று மேட்டூரில் மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது “குடியரசு 100” எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்ட 3 புத்தகங்கள் அடங்கிய தொகுதியை கழகத் தலைவர் அவர்கள் முதல்வருக்கு வழங்கினார். மேலும் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் அவர்கள் புரட்சிப் பெரியார் முழக்கத்தில் வெளிவந்த தலையங்கங்களின் தொகுப்பாக கழகம் வெளியிட்ட “ஆரிய மாடலா? திராவிட மாடலா?” நூலை முதல்வருக்கு வழங்கினார். இச்சந்திப்பின் போது மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர், திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் செல்வகணபதி, மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர்கள் காவை ஈஸ்வரன், மேட்டூர் சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், சேலம் மாவட்ட அமைப்பாளர் அன்பு ஆகியோர் உடன் இருந்தனர். பெரியார் முழக்கம் 19062025இதழ்

‘முன்’ மாதிரிமங்கலம்!

‘முன்’ மாதிரிமங்கலம்!

பகுத்தறிவுக் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் ஊர்களைப் பற்றிய பதிவாக ஒரு தொடர். ஆரிய ஆதிக்கத்தின் மீது, திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டாக நிகழ்த்தி வரும் சம்மட்டி அடியால், முந்நூறு ஜாதிகள் சமூக தளத்தில் மூன்று பிரிவுகளாகச் சுருங்கிவிட்டன. உயர் ஜாதி, இடைநிலை ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்ற 3 பிரிவுகள் மட்டுமே மெல்லியதான கோடுகளுடன் மிச்சமிருக்கின்றன. சுயமரியாதைத் திருமணங்கள், சமத்துவபுரங்கள், தீண்டாமையைக் கடைப்பிடிக்காத கிராமங்களுக்குப் பரிசு போன்ற திட்டங்களின் ஊடாக இந்த 3 கோடுகளையும் கரையச் செய்கிற பணியை `திராவிட மாடல்’ அரசு செய்துகொண்டிருக்கிறது. ஆனால், ஓர் அரசு மட்டுமே செய்துவிடக் கூடிய பணி அல்ல இது. சமூகமும் சேர்ந்து எடுக்க வேண்டிய தீர்க்கமான முடிவு அது. அந்த முடிவுக்கு ஆகச்சிறந்த முன் உதாரணம்தான் மாதிரிமங்கலம். மயிலாடுதுறைக்கு அருகே உள்ள அரங்கங்குடியைச் சேர்ந்த துரைசாமி, நீதிக்கட்சிக் கொள்கையின்பால் ஈர்க்கப் பட்டவர். பார்ப்பனிய அதிகார வர்க்கத்துடன் மோதல், தலித் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம்...

தேர்தலில் பாஜகவின் தில்லுமுல்லு     ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார் ராகுல்

தேர்தலில் பாஜகவின் தில்லுமுல்லு ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார் ராகுல்

ராகுல் காந்தியின் இந்தக் கட்டுரையை அனைத்து எதிர்க்கட்சிகளும் உன்னிப்பாகக் கவனித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் – கடுமையான தேர்தல் பரப்புரை செய்ய வேண்டும் – என்பதற்கு இணையானது இதுபோன்ற சதிகளை அறிந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதும் ஆகும். “மராட்டிய மாநிலத் தேர்தல் முடிவுகள் சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கிறது. அதில் நடந்த மோசடியை மறைக்க எடுக்கப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் மீறி, அது தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களில் இருந்தே அப்பட்டமாக தெரிகிறது. அதனை நான் உங்களுக்கு பட்டியலிட்டுச் சொல்கிறேன்” என்ற முன்னோட்டத்துடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அனைத்து எதிர்க்கட்சிகளும் உன்னிப்பாகக் கவனித்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது இந்த கட்டுரை. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் – கடுமையான தேர்தல் பரப்புரை செய்ய வேண்டும் – என்பதற்கு இணையானது இதுபோன்ற சதிகளை அறிந்து எச்சரிக்கையுடன்...

திராவிடம் வென்றே தீரும்!

திராவிடம் வென்றே தீரும்!

பாமகவை மருத்துவர் ராமதாஸ் தொடங்கியபோது பார்ப்பனர்களைக் கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று கூறினார். இப்போது பாமகவில் நடக்கும் குடும்பச் சண்டையை தீர்த்து வைக்க ராஜகுரு குருமூர்த்தி களம் இறக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கு குருமூர்த்தி யார் என்று தெரியாது, ஆனால் அவர்தான் பாஜகவின் அதிகார மய்யம். அதிமுகவை இரண்டாக உடைத்ததில் இவரது பங்கு மிகவும் பெரியது. ஓ.பன்னீர்செல்வத்தை தர்மயுத்தம் செய்ய உத்தரவிட்டவர் இதே ஆடிட்டர்தான். அதிமுகவினர் ஆண்மையற்றவர்கள்; காலில் விழக்கூடியவர்கள் என்று அவமானப்படுத்தினார். ஒரு வழியாக எடப்பாடியின் அதிமுக பாஜகவின் பிடிக்குள் வந்துவிட்டது. தினகரன் ஓபிஎஸ் குழுக்கள் பாஜகவின் உத்தரவுக்காகக் காத்துக் கிடக்கின்றன. இப்போது பாமகவும் பாஜக பிடிக்குள் போகிறது. தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியை எப்படியாவது ஒழித்தாக வேண்டும் என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவில் இருக்கும்”சூத்திர” அண்ணாமலைகளோ, நயினார்களோ, தமிழிசைகளோ சாலை ஓரத்தில் கூவுவதற்குத்தான் உரிமை. ஆனால் கட்சியின் அதிகாரம் மக்களுக்கே தெரியாத...

பாமக, அதிமுகவின் இனத் துரோகங்கள்!

பாமக, அதிமுகவின் இனத் துரோகங்கள்!

தமிழர்களுக்காக போராடி சிறை சென்று தியாகத் தழும்புகளை ஏற்ற இரண்டு தலைவர்கள் தமிழ்நாட்டைக் காப்பாற்ற இப்போது களம் இறங்கி இருக்கிறார்கள். அந்த இரண்டு தலைவர்களுக்கும் நீங்கள் வந்துதான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று பச்சைக்கொடி காட்டிக் கொண்டு நிற்கின்றன சில அரசியல் கட்சிகள். அந்த இரண்டு தலைவர்கள் யார் தெரியுமா? ஒருவர் அமித்ஷா; மற்றொருவர் ஆடிட்டர் குருமூர்த்தி. உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியை மறதி மனநோய்க்காரர் “செலக்ட்டிவ் அம்னீசியா” என்று துணிச்சலாகக் கூறினார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அந்த ஜெயலலிதாவின் தொண்டர்களை நீங்கள்தான் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா-விடம் மன்றாடி மனு போட்டுக் கொண்டிருக்கிறார் தினகரன். ஜெயலலிதாவின் படத்தை அவர் உயிருடன் இருக்கின்ற வரை சட்டையிலும், பேனாவிலும் சொருகிக்கொண்டு இருந்தவர்கள் இவர்கள்தான். தமிழ்நாட்டில் அமையப்போவது பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அடித்துச் சொல்லி எடப்பாடியை வாய் மூட வைத்து விட்டார் அமித்...

பேரன்பும் பெருங்கோபமும்

பேரன்பும் பெருங்கோபமும்

தங்கர்பச்சான் தயாரிப்பில் வெளிவந்துள்ள ‘பேரன்பும் பெரும்கோபமும்’ திரைப்படம் ஜாதி பெருசா? சாமி பெருசா? என்ற முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது. மிகுந்த ஆழமான கேள்வியும் கூட இது. உண்மையில் சாமியை விட ஜாதிதான் பெரிது. அதைத்தான் இப்படம் பேசுகிறது. இதற்கு படம் தேர்ந்தெடுத்திருக்கும் கதைக் கரு வழக்கத்தில் இருக்கும் முத்தாலம்மன் கதை. முத்தாலம்மன் தென்மாவட்டம் முழுவதும் வழிபடக்கூடிய தெய்வமாகும். முத்தாலம்மன் உயர்குடி ஜாதியைச் சேர்ந்தவள். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவனை காதலித்து ஊரை விட்டு ஓடிவிடுகிறாள். வெளியூரில் திருமணம் முடித்து குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறாள். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவள் வாழும் இடம் தெரிந்து சக்கரையாக பேசி ஊருக்கு அழைத்து வருகிறார்கள். ஊர்க்காரர்களின் பேச்சை நம்பி வந்த முத்தாலம்மன் கணவன் குழந்தைகளோடு சேர்த்து படுகொலை செய்யப்படுகிறாள். இன்னும் அந்த சம்பவத்தை நிகழ்த்திக் காட்ட திருவிழாக்களின் போது படுகளம் போடுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் விரதமிருந்து படுகளத்தில் கழுகுமரம் ஏறுவதும், செத்தவர்கள் போல படுத்து கிடக்க, அந்த...

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் பரப்புரை

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் பரப்புரை

மடத்துக்குளம் இரா.மோகன் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தெருமுனைக்கூட்டங்கள். மறைந்த மடத்துக்குளம் மோகன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 01.06.25 ஞாயிறு காலை 9.15 மணி அளவில் மடத்துக்குளம் நான்கு சாலை சந்திப்பில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மோகன் அவர்களின் குடும்பத்தினர் ஜோதி, அறிவுமதி, திலீபன் பெரியார் பிஞ்சு எழில் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் மடத்துக்குளம் மோகன் அவர்களின் பணிகளை நினைவு கூர்ந்து அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள். முன்னதாக மடத்துக்குளம் மோகன் இல்லத்தில் அவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து புகழ் வணக்க முழக்கங்ளை கழகத் தோழர்கள் எழுப்பினார்கள். இந்நிகழ்வில் திரளாக அனைத்து தோழர்களும் பங்கேற்றனர். நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற மயிலாடுதுறை மாநாட்டு தீர்மான விளக்க இரண்டாம்...

குற்றவாளிப் பட்டியலிலிருந்து இராம.இளங்கோவன் விடுவிப்பு!

குற்றவாளிப் பட்டியலிலிருந்து இராம.இளங்கோவன் விடுவிப்பு!

கடந்த 20 ஆண்டுகளாக கழக மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் மீது பொய்யாக சரித்திர குற்றவாளி பதிவேட்டை கோபி காவல் துறையினர் பராமரித்து வருகிறார்கள், அதனால் தான் பெரும் அவதிக்கு ஆளாகியிருப்பதாகவும், தன்னுடைய தனி மனித உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், தன் மீது கடுமையான குற்றப் பின்னணி எதுவும் கிடையாது, நான் விடுதலைப் புலிகளை ஆதரித்த காரணத்திற்காகவும், 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “இனி என்ன செய்யப் போகிறோம்” என்ற குறுந்தகடு வெளியிட்டதற்காகவும் என் மீது வழக்கு பதியப்பட்டு சுமார் மூன்றரை மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். 2009-ஆம் ஆண்டு ஈரோடு மாநகரில் உள்ள ஒரு கோயில் மேல் மேம்பாலம் கட்டக்கூடாது என்று இந்து முன்னணியினர் உண்ணாவிரதம் இருப்பதை எதிர்த்து, நானும் கழகத்தினருடன் இணைந்து உண்ணும் விரதம் மேற்கொண்டதற்காக ஈரோடு போலீசாரால் வழக்கு பதியப்பட்டு அதற்காக 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். 2006 ஆம்...

புதுவையில் பெரியார் கைத்தடி பேரணி

புதுவையில் பெரியார் கைத்தடி பேரணி

புதுவையில் 10-5-25 அன்று பாசிச பாஜகவை வீழ்த்துவோம்! சமூகநீதியைக் காப்போம்! உழைப்பாளர் நாள், அம்பேத்கர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் பெரியார் கைத்தடி பேரணியும்- பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பாக நடைபெற்றது. அரியாங்குப்பத்தில் கலைஞர், சிங்காரவேலர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, பெரியார் கைத்தடி பேரணியை பா.செ.சக்திவேல் (தலைமை பொதுக்குழு உறுப்பினர் திமுக புதுச்சேரி)‌, மகேசு காஞ்சி மக்கள் மன்றம் இருவரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியில்‌ வழிநெடுக கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெரியார் சிலைக்கு கழக மயிலாடுதுறை மகேஷ் மாலை அணிவித்தார். அரியாங்குப்பம் பகுதியில் தொடங்கி சுமார் 3 கிலோமீட்டருக்கு பேரணியாக சென்று பொதுக்கூட்ட மேடைக்கு வந்தனர். காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலைநிகழ்ச்சிகள், பாடல்கள், நாடகங்கள் பொதுமக்கள் மற்றும் தோழர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் தொடர் சொற்பொழிவுகளாக இல்லாமல் பேச்சுக்களுக்கு இடையே பாடல்கள், நாடகங்கள் என‌ கலைத்திருவிழா போல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரா. உமாபதி, (திவிக சார்பாக சென்னை...

திருச்செங்கோடு தோழர்கள் விடுதலை

திருச்செங்கோடு தோழர்கள் விடுதலை

எச்.ராஜா உருவ பொம்மை எரிப்பு வழக்கில் இருந்து கழகத் தோழர்கள் விடுதலை : பெரியார் சிலையை உடைப்பேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பாஜக எச்.ராஜாவைக் கண்டித்து 2018 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி நாமக்கல் மாவட்டக் கழகம் சார்பில் திருச்செங்கோடு பெரியார் சிலை அருகில் எச்.ராஜா உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் நடைபெற்ற போராட்டத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத அதிமுக காவல்துறை, போராடிய கழகத் தோழர்கள் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி திறம்பட வாதாடி வழக்கை ரத்து செய்தார். வழக்கில் விடுதலை பெற்றவர்கள் : மு.சாமிநாதன், வைரவேல், தண்டபாணி, சதீசுகுமார், பூபதி, மணி, பிரகாஷ், சுப்பு என்கிற ராஜசேகர், கோபி, தியாகு, மனோஜ், கவுதம். பெரியார் முழக்கம் 01062025இதழ்

நாமக்கல் மாவட்ட கழகம்‌  “முழக்கத்துக்கு”நன்கொடை

நாமக்கல் மாவட்ட கழகம்‌ “முழக்கத்துக்கு”நன்கொடை

நாமக்கல் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் அ முத்துப்பாண்டி, மாவட்டச் செயலாளர் சரவணன், மாவட்டக் காப்பாளர் கேப்டன் அண்ணாதுரை, குமாரபாளையம் நகரத் தலைவர் எம் டி தண்டபாணி ஆகியோர் முயற்சியில் புரட்சி பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ.10,000 வழங்கப்பட்டது. நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 01062025இதழ்

மதக்கலவரத்தை தூண்டும் ஆதினத்தை கைது செய்-மதுரையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மதக்கலவரத்தை தூண்டும் ஆதினத்தை கைது செய்-மதுரையில் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

மதக்கலவரங்களை தூண்டும் விதமாக பேசி வரும் மதுரை ஆதினத்தை கண்டித்து 16-5-2025 அன்று காலை 10:30 அளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மதுரையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன நிகழ்வில் பால் பிரபாகான் (கழக பரப்புரைச் செயலாளர்) கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி (திவிக) தலைமையில் நிகழ்வு தொடங்கி, கனியமுதன்(விசிக), மீ.த பாண்டியன்(மதநல்லிணக்கக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்), பசும்பொன் பாண்டியன் (அ.தி.ம.மு.க), பேரறிவாளன் (பொதுச் செயலாளர் – தமிழ்ப் புலிகள்), கபீர் நகர் கார்த்திக் (ஆதித்தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர்), வரதராஜன் (பெரியார் நெறியாளர்), தமிழ்ப்பித்தன் (த.பெ.தி.க), ராமலிங்கம் (ம.க.இ.க மாநில ஒருங்கிணைப்பாளர்), அப்பாஸ் (மனிதநேய மக்கள் கட்சி), குமரன் (பு .இ.மு) ஆகியோர் கலந்து கொண்டு ஆதீனத்தைக் கண்டித்தும், அவரை கைது செய்யவும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தோழமை இயக்கங்களுடன் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக்...

கொளத்தூர் குலுங்கியது

கொளத்தூர் குலுங்கியது

சேலம் மாவட்டம் மகளிர்‌ அணி சார்பில் 24.05.2025 அன்று நாத்திகர் விழா அதை ஒட்டி அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம்! மூடநம்பிக்கைகளை ஒழிப்போம் என்கிற முழக்கத்தோடு மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி மற்றும் நாத்திகர் விழா நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து பெண்கள், குழந்தைகள், தோழர்கள் மட்டும் தனி வாகனத்தில் மாநாட்டுக்கு வந்தனர். பெண்கள் மட்டுமே சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கர்ப்பிணிப் பெண்களும், கைக்குழந்தைகளுடனும் பெண்கள் பங்கேற்றனர். குழந்தை பிறந்து 20 நாட்களே ஆன கிருத்திகா அலகு குத்தி பேரணியில் பங்கேற்றார். உக்கம்பருத்திக்காடு சு. கோமதி, காவலாண்டியூர் க.கலைச்செல்வி, கொளத்தூர் அழகேஸ்வரி, உக்கம் பருத்திக்காடு கு.லதா, மாதம்மாள் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்தனர். சேலம் (கொளத்தூர், காவலாண்டியூர், மேட்டூர், மேட்டூர் ஆர்எஸ், மேச்சேரி, நங்கவள்ளி, கொங்கணாபுரம், ஏற்காடு, ஆத்தூர்‌) போன்ற பகுதிகளில் இருந்தும் ஈரோடு வடக்கு, தெற்கு, திருப்பூர், கோவை, நாமக்கல், திருச்சி, பொள்ளாச்சி, மடத்துக்குளம், சென்னை, மதுரை, தஞ்சாவூர், தென்காசி,...

கழகத் தலைவருக்கு கடவுச்சீட்டு புதுப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கழகத் தலைவருக்கு கடவுச்சீட்டு புதுப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு புதிய கடவுச்சீட்டு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளைக் காரணம்காட்டி கடவுச்சீட்டு கோரிக்கையை நிராகரிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி,சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என்னுடைய கடவுச்சீட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலாவதியாகி விட்டதால், அதை புதுப்பிக்க வேண்டும். ஆனால், என் விண்ணப்பத்தை பரிசீலித்த மண்டல கடவுச்சீட்டு அதிகாரி, என் மீது தடா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறி நிராகரித்துவிட்டார்” என முறையிட்டார். இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. கொளத்தூர் மணி தரப்பில் வழக்குரைஞர் வி.இளங்கோவன் ஆஜராகி, ‘‘குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாலேயே கடவுச்சீட்டை புதுப்பிக்காமல் இருப்பது தவறு என்று உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும், ஏற்கெனவே பல வழக்குகளில் தீர்ப்புகளைப் பிறப்பித்துள்ளன’’ என்று வாதிட்டார். ஒன்றிய அரசுத் தரப்பில், மனுதாரர்...

மாணவர்களுக்கு ஆலோசனை மய்யம்,மாணவர் கழகம் முடிவு

மாணவர்களுக்கு ஆலோசனை மய்யம்,மாணவர் கழகம் முடிவு

சென்னை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகத்தின் (04/05/25) சந்திப்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு குறளரசி தலைமை தாங்கினார், இளவரசன் முன்னிலை வகித்தார். சூர்யா, ஷர்மிளா, தோழி, பிரசாந்த், பேரன்பு ஆகியோர் கலந்துகொண்டனர். எடுக்கப்பட்ட முடிவுகள்: 1)கல்லூரி சேர இருக்கும் மாணவ மாணவியருக்கான வழிகாட்டுதல் தருவது. 2)இட ஒதுக்கீடு பற்றிய அறிமுக வகுப்பு இந்த மாதத்தில் நடத்துவது. 3) புதிய இசைக்குழுவை தொடங்குவது. தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக 2025-2026 ஆண்டு பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். தனியார் பள்ளிகளில் 25% பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு RTE முலமும், சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டத்தில் விண்ணப்பித்து தரப்படும். தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கல்லூரி சேரும் மாணவ மாணவியருக்கான ஆலோசனை மையம். தொடர்புக்கு: பேரன்பு(சென்னை): 89731-19313, இளவரசன்(சென்னை): 88382-77257 நாகராஜன்(சேலம்): 90929-04626, ஷர்மிளா(ஈரோடு)-75987-04581 நவீன்(கோவை)-63698-18361, ஷியாம் (தஞ்சாவூர்)-90808-18987 பெரியார் முழக்கம் 22052025இதழ்

நிமிர்வோம் வாசகர் வட்டம் எடுத்த திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு

நிமிர்வோம் வாசகர் வட்டம் எடுத்த திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு

நிமிர்வோம் வாசகர் வட்ட‌த்தின் 27-வது சந்திப்பு 09.05.2025 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில், தென்சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக, மறைந்த திராவிட இயக்க இளம் எழுத்தாளர் சு.விஜயபாஸ்கரின் உருவப் படத்தை, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் திறந்துவைத்தார். கழக வெளியீடுகளான “பெரியாரின் மானுடம்”, “பெரியார் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு” ஆகிய நூல்கள் குறித்து தி.வி.க. தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி.எட்வின் பிரபாகரன் திறனாய்வு செய்தார். “அம்பேத்கர் நம் தலைவர்”, “இறுதிமூச்சு அடங்கும் வரை யாருக்காக உழைத்தார் பெரியார்?” ஆகிய நூல்களை, தாம்பரம் நகரக் கழக அமைப்பாளர் அருண் கோமதி திறனாய்வு செய்தார். அதன்பிறகு, மறைந்த எழுத்தாளர் சு.விஜயபாஸ்கரை நினைவுகூரும்விதமாக, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் கனடாவில் இருந்து காணொளி வாயிலாக உரையாற்றினார். கழகத்துடனான விஜயபாஸ்கரின் தொடர்பு, ஜாதி ஒழிப்புக் களங்களில் ஆற்றிய பணிகள் குறித்து பல்வேறு செய்திகளை தோழர் விஜயகுமார்...

செக்கடிக்குப்பம்-ஓர் பெரியார் மண்!

செக்கடிக்குப்பம்-ஓர் பெரியார் மண்!

தமிழ்நாட்டில் பெரியார் கொள்கைகளை முழுமையாக ஏற்ற கிராமங்கள் பற்றிய தொடர் ஒன்று முரசொலி நாளேட்டில் வாரந்தோறும் வெளிவருகிறது. அந்தத் தொடரை பெரியார் முழக்கம் நன்றியுடன் பதிவு செய்கிறது. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, பார்ப்பனர்களை வைத்து, சடங்குகள் செய்து நடைபெற்றால்தான் அது திருமணம் என்று இன்றும் கருதுவோர் பலர் இருக்க, 1925-ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பெரியார், சுயமரியாதைத் திருமண முறையை, தமிழர்களுக்குத் தந்தார். இந்தத் திருமண முறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்மதம் இருந்தால் போதும், பார்ப்பனர்களை அழைக்கத் தேவையில்லை, சடங்குகள் தேவையில்லை, தாலியும் கட்டாயமில்லை. மாலைமாற்றிக் கொண்டு, உறுதிமொழி எடுத்துக்கொண்டால் போதுமானது. பெரியார் அறிமுகப்படுத்திய இந்த எளிமையான திருமணமுறைக்கு, 1967-இல் அண்ணாவின் ஆட்சி அமையும் வரை சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனாலும், பல ஆயிரக்கணக்கானோர் சுயமரியாதைத் திருமணம் புரிந்தனர். அண்ணா இயற்றிய சட்டத்தால் இத்தகைய சுயமரியாதைத் திருமணங்கள் சர்வ சாதாரணமாகிவிட்ட போதிலும், வைதீகத் திருமணங்களே இப்போதும் அதிகம். ஆனால்,...

மண் சோறு சாப்பிடுவோர் என்‌ ரசிகர்கள் அல்ல – நடிகர் சூரி.

மண் சோறு சாப்பிடுவோர் என்‌ ரசிகர்கள் அல்ல – நடிகர் சூரி.

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள திரைப்படம் `மாமன்’. மே 15-ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் வெற்றியடைய வேண்டுமென்று சூரியின் ரசிகர்கள் மதுரையில் மண் சோறு சாப்பிட்டு, அந்த வீடியோவைப் பகிர்ந்தனர். மண் சோறு உண்பது, நடிகர்களின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம், மொட்டை அடிப்பது. அலகுக் குத்துவது என விதவிதமான பிற்போக்குத்தனங்களை, பல்வேறு நடிகர்களுக்கு ரசிகர்கள் செய்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இத்தகைய பிற்போக்குத்தனங்களை இதுவரை எந்த நடிகரும் கண்டித்ததில்லை. அல்லது அவை, பிற்போக்குத்தனங்கள், இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று வெளிப்படையாகக் கூறியதும் இல்லை. ஆனால், முதன்முறையாக, தனது ரசிகர்களைக் கடுமையாக எச்சரித்து, முன்னுதாரணமாகியிருக்கிறார் நடிகர் சூரி. ‘மாமன்” படம் வெற்றியடைய மண்சோறு சாப்பிட்டவர்களை ‘தம்பிகள்* என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. தம்பிகளா, இது ரொம்ப முட்டாள்தனமானது. படம் நன்றாக இருந்தால், கதை நன்றாக இருந்தால் படம் ஓடும். அதைவிட்டு, மண் சோறு சாப்பிட்டால், படம் எப்படி...

ஆளுநர் அத்துமீறல்களுக்கு துணைபோவதா?

ஆளுநர் அத்துமீறல்களுக்கு துணைபோவதா?

இந்தியாவில் ஒற்றை மதவாத ஆட்சியைத் திணிக்கும் நோக்கத்தோடு செயல்படும் ஒன்றிய ஆட்சியின் அத்துமீறல்களுக்கு எதிராக திராவிட மாடல் ஆட்சி தான்‌ கொள்கைப் போராட்டம் நடத்துகிறது. தொகுதி மறுவரையறை திட்டத்தைப் பயன்படுத்தி தென் மாநிலங்களின் சட்டமன்ற, நாடாளுமன்ற எண்ணிக்கையைக் குறைக்கும் ஆபத்துக்களை முன்கூட்டியே கண்டறிந்து முதலமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர். இப்போது மீண்டும் மாநில முதலமைச்சர்களுக்கு சட்டமன்றஉரிமையை மீட்கும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.ஆளுநரின் அதிகாரப் பிடியில் இருந்து சட்டமன்ற உரிமையை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த உரிமைகளை ஒழிப்பதற்கு குறுக்கு வழியில் குடியரசுத் தலைவருக்கான 143-ஆவது அதிகாரத்தைப் பயன்படுத்த முன் வந்திருக்கிறது ஒன்றிய ஆட்சி. இதில் ஒன்றிய ஆட்சிக்கு என்ன பாதிப்பு வந்துவிட்டது? ஏன் இதை குறுக்கு வழியில் சீர்குலைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்? நாடாளுமன்றம் நிறைவேற்றுகிற மசோதாவுக்கு அடுத்த நாளே குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்து விடுகிறார். பாஜக ஆட்சி செய்யும் மாநில சட்டசபைகள் நிறைவேற்றும் தீர்மானத்திற்கு உடனே...

சென்னையில் சிறப்பாக நடந்த குழந்தைகள் பழகு முகாம்

சென்னையில் சிறப்பாக நடந்த குழந்தைகள் பழகு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் இணைந்து சென்னையில் 17.05.2025 அன்று ‘திராவிட வாரிசுகள்’ ஒரு நாள் குழந்தைகள் பழகு முகாமை நடத்தியது. இந்த பழகு முகாமில் குழந்தைகளுக்கு தலைமைப் பண்பு வளர்த்தல், பாலின சமத்துவம், கலைகள் கற்றல் இது போன்ற தலைப்பில் கலை வடிவத்திலும் விளையாட்டு, பாடல் மூலமாகவும் வகுப்புகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, முத்துராணி, விரட்டு கலைக்குழு ஆனந்த் ஆகியோர் பயிற்சி வழங்கினர். தோழர் சிற்பி ராஜனின் மந்திரமா? தந்திரமா? என்று அறிவியல் விளக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. கழகக் குடும்பங்களைச் சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த பழகு முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கலந்துகொண்ட குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர்...

நாத்திகர் விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

நாத்திகர் விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

வரும் மே 24 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சேலம் மாவட்டம் கொளத்தூரில் நடைபெற உள்ள நாத்திகர் விழா – மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி – பொதுக்கூட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டம் நடத்த அனுமதி கேட்டும் இதுவரை போலீசார் தரப்பில் எந்த உத்தரவும் தராததால் சேலம் மாவட்ட தி.வி.க. மகளிர் அணி அமைப்பாளர் சுதா அவர்கள் கூட்டத்திற்கு அனுமதிகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீது நீதிமன்றம் உத்தரவு. வழக்குரைஞர் திருமூர்த்தி கழக சார்பில் வாதாடினார். பெரியார் முழக்கம் 22052025இதழ்

மேச்சேரியில் பொதுக்கூட்டம்

மேச்சேரியில் பொதுக்கூட்டம்

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்! இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மேச்சேரியில் 20.04.2025 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேட்டூர் டி.கே.ஆர்.இசைக் குழுவின் பறை இசை மற்றும் பகுத்தறிவுப் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை.தாமோதரன் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்வு மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவ சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், திருப்பூர் மகிழவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். நிறைவுரையாக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி அவர்கள் கருத்துரையாற்றினார். இறுதியாக சேலம்...

சங்கராபுரத்தில் தீர்மான விளக்கக் பொதுக்கூட்டம்!

சங்கராபுரத்தில் தீர்மான விளக்கக் பொதுக்கூட்டம்!

28/04/2025 திங்கள் மாலை 5 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் செம்பராம்பட்டு ஊரில் கழக மு.சரத்குமார் தலைமையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாள் மற்றும் மயிலாடுதுறை மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்ட நிகழ்வை கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க.இராமர் ஒருங்கிணைத்தார். மு.நாகராஜ், வீ.முருகன், தே.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை.தாமோதரன் மந்திரமல்ல தந்திரமே என்ற சாமியார்களின் மோசடியையும், சோதிடம் போன்ற புரட்டுகளையும், மூடநம்பிக்கையால் மக்கள் எவ்வளவு ஏமாறுகிறார்கள் என்று தன்னுடைய அறிவியல் விளக்க கலைநிகழ்ச்சி மூலம் விளக்கினார். தொடக்க உரை செ.வே.ராஜேஷ் நிகழ்த்தினார். கழக மாவட்ட தலைவர் க.மதியழகன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ. இளையரசன், தபெதிக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் செ. பிரபு, மக்கள் அதிகார கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஆ.இராமலிங்கம், CPI இவிதொச, கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் க.முருகேசன், அறிவியல் மன்ற தலைவர்...

சனாதன எதிர்ப்புக்கு அடித்தளம் அமைத்தது சுயமரியாதை இயக்கமே!

சனாதன எதிர்ப்புக்கு அடித்தளம் அமைத்தது சுயமரியாதை இயக்கமே!

பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பேச்சு தென்காசி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 03.05.2025 சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு திராவிடம் – பெரியார் யாருக்கு எதிரி? என்ற தலைப்பில் கீழப்பாவூர் சென்ட்ரல் பேங்க் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள சுயமரியாதைச் சுடரொளி கூ.சு.ரா திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குறும்பை. அரு. மாசிலாமணி தலைமை வகித்தார். கீழப்பாவூர் ஒன்றிய தி.வி.க. செயலாளர் செட்டியூர் சேர்மத்துரை திப்பணம்பட்டி தங்கத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட தி.வி.க. செயலாளர் பொ.பெ.சு.அன்பரசு வரவேற்புரையாற்றினார். இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் விடுதலைக்கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றினர். அவர் தனது உரையில் இந்தியா எனும் மதச் சார்ப்பற்ற நாட்டை ஆளும் ஒன்றிய பா.ஜ.க. அரசு RSS ன் கொள்கையான சனாதனக் கொள்கையை இந்தியாவின் சட்டமாக்கிட இந்தியாவை வேத காலத்திற்கு கொண்டு சென்று வேறுபாடு நிறைந்த ஜாதி வேற்றுமை கூடிய நாடாக மாற்றத் துடிக்கிறார்கள்....

திராவிட  மாடல் ஆட்சியும் ஆல்பர்ட்டா மாகாணமும்!

திராவிட மாடல் ஆட்சியும் ஆல்பர்ட்டா மாகாணமும்!

கனடாவில் நடந்து முடிந்த தேர்தலில் நான்காவது முறையாக லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கனடாவில் கூட்டாட்சி அரசியல் அமைப்பு என்ற நடைமுறை இருக்கிறது. ஆல்பர்ட்டா என்ற மாநிலத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி தான் மக்கள் செல்வாக்கோடு ஆட்சியில் இருக்கிறது. கனடா கூட்டாட்சி ஆட்சியை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்று ஆல்பர்ட்டா மாநில ஆட்சி குற்றம் சாட்சி வருகிறது. அதிக வரி செலுத்தும் மாநிலமாகவும், வளர்ச்சி திட்டங்களில் முதலிடம் பெற்ற மாநிலம் ஆல்பர்ட்டா தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து மாநில மக்களும் மாநில ஆட்சியும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். கன்சர் வேட்டிவ் வெற்றி பெற்ற அடுத்த நாளே ஆல்பர்ட்டா சட்டமன்றம் கூடி மசோதா ஒன்றை நிறைவேற்றி உள்ளது. கனடா கூட்டாட்சி அமைப்பிலிருந்து ஆல்பர்ட்டா தனியாக பிரிந்து செல்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இந்த மசோதா கூறுகிறது. ஆல்பர்டடா மாநில பிரிமியர் ஸ்மித் மார்கார்னி இவ்வாறு கூறியுள்ளார்: ஆல்பர்ட்டா மக்கள் பெருமைமிக்க கனடியர்கள் நாங்கள்...

கருத்துச் செறிவுடன் நடந்த சென்னை பயிலரங்கம்!

கருத்துச் செறிவுடன் நடந்த சென்னை பயிலரங்கம்!

தோழர்‌ பத்ரி நாராயணன் நினைவு நாளில்”கற்போம்! களம் காண்போம்!” என்ற தலைப்பில் 30/04/25 அன்று சென்னை இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில், கழக இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர் ப.அருண் தலைமையில் பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்க ஏற்பாடுகளை கழக இளைஞரணி தோழர்கள் நேர்த்தியாக செய்திருந்தனர். பயிற்சி பெற்ற 55 பேரில் 15 க்கு மேற்பட்டவர்கள்‌ பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட இயக்க வரலாற்றில் இடம்பெற்ற தலைவர்களின் படங்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. கழகத்தலைவர் தனது தொடக்க உரையில் சுயமரியாதை இயக்கத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் உள்ள பண்பு ரீதியான வேறுபாடுகளை சுட்டிக்காட்டி இயக்க வரலாறுகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டிய தேவையை வற்புறுத்தினார். நிறைவுரை ஆற்றிய விடுதலை இராசேந்திரன் கழகத் தோழர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமான விடையளித்தார். கருத்துரையாற்றிய அனைவருக்கும் கழக வெளியீடுகள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. “கொள்கை தரும் இன்ப வாழ்வு!” எனும் தலைப்பில் மாவட்டச்...

நீட் தேர்வில் தொடரும் ‘கெடுபிடிகள்’-ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைகிறது

நீட் தேர்வில் தொடரும் ‘கெடுபிடிகள்’-ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைகிறது

ஒன்றிய ஆட்சியின் தேர்வு நிறுவனம் நடத்தும் கெடுபிடிகளால் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது 2021-க்குப் பிறகு 2025 இல் முதல் முறையாக மிக மோசமான அளவுக்கு தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன இந்த ஆண்டு தேர்வு எழுத விண்ணப்பித்த 25 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுத முன் வந்துள்ளனர். ● நீட் நுழைவுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்ய, தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 42 பேர், மூன்று ஆண்டு தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. ● எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்தாண்டு நடந்த நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்ததாகப் புகார் எழுந்தது. ● இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரித்து...

நாத்திகர் விழா! கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நாத்திகர் விழா! கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தோழர்களுக்கு வணக்கம்,வருகிற நாள் 24.05.25 சனிக்கிழமை சேலம் மாவட்டம் கொளத்தூரில் திராவிடர் விடுதலைக் கழக பெண்களே தலைமையேற்று முழுமையாக நடத்தும் “நாத்திகர் விழா “நடைபெற உள்ளது. “நாத்திகர் விழா”வின் முதல் நிகழ்வாக முக்கிய நிகழ்வாக மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது. மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில், 1. முதுகில் அலகு குத்தி கார் இழுப்பது 2. முதுகில் அலகு குத்தி தொங்கும் பறவைக் காவடி 3. தீச்சட்டி ஏந்துதல் 4. ஆணிப் படுக்கையில் படுத்து வருவது 5. அரிவாளின் மீது ஏறி நிற்பது 6. கன்னத்தில் அலகு குத்துவது 7. கன்னத்தில் முதுகில் எலுமிச்சம்பழம் குத்துவது 8. நாக்கில் சூடத்தை எரிய விடுவது 9. நெருப்பை கக்குவது 10. சுருள் வீச்சு 11. தீப்பந்தம் சுற்றுதல் 12. சிலம்பம் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் தங்கள் பெயர்களை கீழ்காணும் அலைபேசி எண்ணில் முன்கூட்டியே பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். “மூடநம்பிக்கைகளை...

மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் இல்லம்‌ சென்று ஆ.ராசா நலம்‌ விசாரித்தார்.

மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் இல்லம்‌ சென்று ஆ.ராசா நலம்‌ விசாரித்தார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் அவர்கள் இல்லத்துக்கு சென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் நலம் விசாரித்தார். உடன் திமுக பொறுப்பாளர்கள் ரோட்ஜ், முனுசாமி தொண்டாமுத்தூர் ரவி, சி.ஆர் இராமச்சந்திரன், அருண், அறிவரசு மற்றும் கழக தோழர்கள் பலர் உடன் இருந்தனர். பெரியார் முழக்கம் 08052025இதழ்

இணையதள பிரிவின் மின்னூல்

இணையதள பிரிவின் மின்னூல்

கழக இணையதள பிரிவு சார்பாக‌ கடந்த ஏப்ரல் 21 தேதி மயிலாடுதுறை மாநாட்டின் தீர்மானத்தை ஒட்டி கழகம்‌ சங்கரச்சாரிக்கு எதிராக பெரியார் முழக்கத்தில் எழுதிய செய்திகளை இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் தொகுத்து “இன‌ ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி” என்ற‌‌ தலைப்பில் மின்னூல் வெளியிடப்பட்டது. அட்டைப்பட‌ வடிவமைப்பு: அருண் இளைஞரணி, நூல் வடிவமைப்பு: பரிதி. மேலும் இந்த மின்னூல் கழக இணையதள பக்கத்தில் இலவசமாக படிக்கலாம். பெரியார் முழக்கம் 15052025இதழ்

தூத்துக்குடியில் பொதுக்கூட்டம்!

தூத்துக்குடியில் பொதுக்கூட்டம்!

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் மற்றும் இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு தருவைகுளம் மெயின் ரோட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக பொருளாளர் கே.சந்திர சேகர் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக அமைப்பாளர் பால். அறிவழகன், ஆழ்வை ஒன்றிய தி.வி.க. செயலாளர் இரா.உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ச.ரவி சங்கர் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு திராவிடர் விடுதலைக்கழக மாநில பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் இன ஒதுக்கல் பேசும் சங்கராச் சாரி மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்வில் திராவிடர் தமிழர் கட்சியின் மாநில நிதிச் செயலாளர் சு.க. சங்கர், மனித நேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கா.மை....

கழக தலைவர் பங்கேற்ற கோவை பொதுக்கூட்டம்!

கழக தலைவர் பங்கேற்ற கோவை பொதுக்கூட்டம்!

03.05.2025 அன்று கோவை சின்னியம்பாளையத்தில் பெரியார் உணர்வார்கள் ஏன் வேண்டும் திராவிட மாடல் ஆட்சி! என்ற தலைப்பில் பொதுக்கூட்டத்தை நடத்தினர். கூட்டத்திற்கு சிவா மொபைல்ஸ் சிவா தலைமை தாங்கினார். சூலூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் அன்பரசு முன்னிலை வகித்தார். கழக மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். நிறைவாக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சிபிஐ(எம்) மாவட்டக் குழு உறுப்பினர் ஸ்டாலின் குமார், தி.மு.க. மருத்துவரணி பெரியார் செல்வி, அ.பா.சிவா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, தி.மு.க. மகளிரணி ஜெயலலிதா, திருப்பூர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் விஷ்ணு நன்றி கூறினார். இப்பொதுக்கூட்டத்தில் கோவை திருப்பூர் மாவட்டக் கழகத் தோழர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுக்கூட்டம் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வை வழக்கறிஞர் சரவணக்குமார் ஒருங்கிணைத்தார். இனியன் கழக தலைவர் முன்னிலையில் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்....

மயிலாடுதுறை, கடலூரில் சங்கராச்சாரி கண்டித்து ஆர்ப்பாடங்கள்

மயிலாடுதுறை, கடலூரில் சங்கராச்சாரி கண்டித்து ஆர்ப்பாடங்கள்

மயிலாடுதுறை: திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 26.04.25 சனி மாலை கிட்டப்பா அங்காடி அருகில் “இன ஒதுக்கல்” பேசும் சங்கராச்சாரியை கண்டித்து மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரையாற்றியோர்: பேராசிரியர் ஜெயராமன் தமிழ்மண் தன்னுரிமை இயக்கம், ராஜசேகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சுப்பு.மகேஷ் தமிழர் உரிமை இயக்கம், இளையராஜா,திராவிடர் விடுதலைக் கழகம். நன்றியுரை: வீரமணி கடலூர்: 21.4.2025 மாலை 6 மணி அளவில் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கடலூரில் மஞ்சகுப்பம் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திவிக அருணாச்சலம் வழக்கறிஞர் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில தேர்தல் பணி குழு செயலாளர் வழக்கறிஞர், இள புகழேந்தி, தமிழ் மீனவர் விடுதலை வேங்கையின் நிறுவனத் தலைவர் தமங்கையர் செல்வன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் தி ச திருமார்பன்,...

விகடனின் ஜாதி ஒழிப்பு நாடகம்!-

விகடனின் ஜாதி ஒழிப்பு நாடகம்!-

விஜய் தொலைக்காட்சி நடத்திய ‘நீயா நானா நிகழ்ச்சியில்’ போடி நாயக்கனூரைச் சேர்ந்த ஒரு தலித் மாணவி ‘காலனி’ என்ற சொல் எப்படி காயப்படுத்துகிறது என்ற வேதனையை உருக்கமுடன் பேசினார். அடுத்த இரண்டு நாட்களில், தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்தில் இனி அரசு பதிவேடுகளில் ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த வாரம் வெளிவந்துள்ள ஆனந்த விகடன் வார ஏடு வார்த்தையை நீக்கி விட்டால் மட்டும் ஜாதி தீண்டாமை ஒழிந்து விடுமா? என்று தமிழ்நாடு அரசை கடுமையாக் கண்டித்து தலையங்கம் தீட்டி இருக்கிறது. ஜாதி ஒழிப்புக் களத்தில் குறியீட்டு ஒழிப்புகளும் ஒரு தேவைதான்; ஜாதி ஒழிப்புக்கு மந்திரக்கோல் எதுவும் கிடையாது.பல்வேறு களங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற வேண்டும். ஜாதி தீண்டாமைகளை முற்றிலும் ஒழித்து விடாமல் இப்படி பெயரை மட்டும் மாற்றுவது சரியா என்று கேட்கும் கேள்விகளில் திமுக எதிர்ப்பு என்ற உள்நோக்கத்தைத் தவிர கொள்கை பார்வை ஏதும் இருப்பதாக நமக்கு...

மே.18 கொண்டாட்ட நிகழ்வு தள்ளிவைப்பு!

மே.18 கொண்டாட்ட நிகழ்வு தள்ளிவைப்பு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மே18 அன்று திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் நட்சத்திர இசை திருவிழா கன்னிகுமரியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி கீழ்க்கண்ட அறிக்கையை விடுத்து இருந்தார். துயர மிகுந்த இந்த நாளில் இவ்வாறான கொண்டாட்டத்தை நடத்துவது இன உணர்வுமிக்க தமிழர்களின் உணர்வுகளைப் பதறவைக்கும் ஒன்றாகும். அந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களை இதனை வேறு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டுமாறு முதற்கட்டமாக கனிவுடன் கோருகிறோம் என்று குறிப்பிட்டுருந்தார். அதனை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்‌ நாசர்‌ இதில் தலையிட்டு நிகழ்ச்சியை தள்ளி வைக்க முயற்சிகளை எடுத்தார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டது. இத்தகவலை திரு நாசர் கழக தலைவருக்கு கடிதமாக எழுதியுள்ளார். இன‌முரசு சத்தியராஜ் இந்த கடிதத்தை கழக தலைவருக்கு அனுப்பியுள்ளார். இதற்கு நன்றி தெரிந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்ட அறிக்கையில்: ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் கழகத்...

கழகத் தலைவருக்கு சீர் விருது

கழகத் தலைவருக்கு சீர் விருது

சீர் வாசகர் வட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு 2025 ஆண்டுக்கான‌ சமூக போராளி விருது வழங்குகிறது. விருது தொகை ரூ. 1,00,000 இது தொடர்பாக சீர் வாசகர் வட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் போராட்ட களங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாய் முதல் வரிசையில் நிற்கும் முன்கள வீரர் என்று பாராட்டி உள்ளது.வாசகர் வட்டத்தின்‌ அறிக்கை: சாதி ஒழிப்பு, சமூகநீதி, பாலின சமத்துவம், பகுத்தறிவுப் பரப்புரை, சுரண்டல் எதிர்ப்பு என மானுட விடுதலைக்கான அனைத்துத் தளங்களிலும் போராட்டக் களங்களிலும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் முதல் வரிசையில் நிற்கும் முன்கள வீரர். இட ஒதுக்கீட்டு வரலாறு, விடுதலை வேட்கை, தமிழர் பண்பாடு, பெரியாரும் தனித்தமிழ்நாடும், பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தமிழர், தமிழ்நாடு நலன்சார்ந்த போராட்டங்களுக்காக எண்ணற்ற முறை சிறை சென்றவர். சட்டத்தை விட நியாயமே மேலானது என்பதை உரத்துச் சொல்பவர். தன் பேச்சையும் மூச்சையும்...

வடகாட்டில் கொடூரமான ஜாதி வெறித் தாக்குதல்!-கழகத் தோழர்கள் கள ஆய்வு

வடகாட்டில் கொடூரமான ஜாதி வெறித் தாக்குதல்!-கழகத் தோழர்கள் கள ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம், வடகாடு கிராமத்தில் அடைக்கலங் காத்தார் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் ‘அண்ணா கைப்பந்துக் கழகம்’ என்ற பெயரில் விளையாட்டுத் திடல் அமைத்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி இளைஞர்கள் விளையாடி வந்துள்ளனர். இந்நிலையில், மேற்படி இடத்தில் தலித் மக்கள் பொங்கல் விழா நடத்துவதற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முயற்சித்த போது, இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, மேற்படி இடம் பட்டியல் இன மக்களுக்குச் சொந்தமானது என்ற தீர்ப்பைப் பெற்றுள்ளனர். அண்ணா கைப்பந்து கழகத்தினர் மேல்முறையீடு செய்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட் களுக்கு முன்பாக மேற்படி அடைக்கலங் காத்தார் அய்யனார் கோவிலில் பொங்கல் வைப்பதற்காக தலித் மக்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். அப்போது பிற சமூகத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். இதில், எந்தக் குற்றமும் செய்யாத பட்டியலின...

அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

அம்பேத்கர் சிலைக்கு கழகம் மரியாதை!

கோவை: சிவானந்தா காலனியில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் 135-வது பிறந்தநாளில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் நவீன் அவர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துகொண்டனர். பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சமத்துவ நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், கோவை மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் டெம்போ சிவா, திவிக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமார், திவிக கோவை மாநகரச் செயலாளர் வெங்கட், திவிக கோவை மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன், முன்னாள் கோவை மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் மதிவாணன், தமிழ்ப்புலிகள் தோழர்கள் தம்பி செந்தில், கோவை குமார், ராமகிருஷ்ணன், திவிக தோழர்கள் ஸ்டாலின், மாதவன், நிலவழகன், ராமகிருஷ்ணன், கீர்த்தீகா, அபிலேஸ் பாண்டியன் மற்றும் மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இறுதியாக ரத்தினபுரி பகுதி திவிக பொறுப்பாளர்...

களப்பணியில் கழகத் தோழர்கள்

களப்பணியில் கழகத் தோழர்கள்

18.03.25: புலியூர், தரங்கம்பட்டியில் “பெரியார் இன்னும் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்?” பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன. பரப்புரையின் போது கரூர் மாவட்ட எல்லையில் நொய்யல் பகுதியில் கரூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் குடியரசு கிருஷ்ணராயபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், பரப்புரைப் பயணத் தோழர்களுக்கு குடிநீர், பிஸ்கட் வழங்கி வழியனுப்பி வைத்தனர். கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி மற்றும் பயணத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் பயனாடை அணிவித்து வரவேற்றனர். 19.03.25: மணப்பாறை காமராஜர் சிலை, இலுப்பூர், அன்னவாசல் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பரப்புரைக் கூட்டங்கள் எழுச்சியோடு நடைபெற்றன. 20.03.25: புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் 4-ரோடு, ஆலங்குடி, விராலிமலை, வடகாடு, கைகாட்டி பகுதிகளில் மக்கள் பேராதரவோடு பரப்புரைக் கூட்டங்கள் சிறப்புடன் நடைபெற்றன. இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சொர்ண குமார், விசிக வழக்கறிஞர் அம்பேத்கர் வளவன், சிபிஜ முருகன் கலந்து கொண்டு உரையாற்றினர்....

வழக்குரைஞர்கள் திருமூர்த்தி, ஜான் இளமாறனுக்கு பாராட்டு!

வழக்குரைஞர்கள் திருமூர்த்தி, ஜான் இளமாறனுக்கு பாராட்டு!

கர்நாடக தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ராஜ் பவன், வெல்கம் ஹோட்டல்களை முற்றுகையிட்டதாக தொடரப்பட்ட வழக்கு, எஸ்.வி.சேகர் வீட்டை முற்றுகையிட்ட வழக்கு, பெரியார் சிலையை உடைப்போம் என ஹெச்.ராஜா கூறியதற்காக சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் எதிர்வினையாற்றியதாக தொடரப்பட்ட வழக்கு, இலங்கை தமிழர் விவகாரத்தில் புத்த மட முற்றுகை வழக்கு என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த பல முக்கிய வழக்குகளில் இருந்து கழகத் தோழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் கழகத் தோழர்கள் சார்பாக ஆஜராகி விடுதலை பெற்றுத் தந்த வழக்குரைஞர்கள் திருமூர்த்தி, இளமாறன், ஜான் ஆகியோருக்கு பாராட்டு விழா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த பாராட்டு நிகழ்வில், கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கழகத்தினர் மீதான வழக்குகளை திறம்பட நடத்திய வழக்கறிஞர்களை பாராட்டிப் புத்தகங்களை வழங்கினார்....

ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் ஒட்டிய ஸ்டிக்கர்-விடுதலை இராசேந்திரன்

ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் ஒட்டிய ஸ்டிக்கர்-விடுதலை இராசேந்திரன்

ஆளுநர் ஆர்.என் ரவி பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் கருத்து. நீதிமன்ற அவமதிப்புச் சின்னமாக இங்கேயே இருக்கட்டும். உச்ச நீதிமன்றம் ஆளுநரின் மீது இரண்டு ஸ்டிக்கர்களை ஒட்டி உள்ளது. சட்ட விரோதமாக முறைகேடாக செயல்பட்டுள்ளார் என்பது ஒன்று anti constitunal and erroneous, நல்ல எண்ணம் கொண்டவராக நடந்து கொள்ளவில்லை என்பது இரண்டு. The conduct exhibited on part of the Governor, as it clearly appears from the events that have transpired even during the course of the present litigation, has been lacking in bonafides. There have been clear instances where the Governor has failed in showing due deference and respect to the judgments and directions of this Court. In...

ஆளுநருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!-சேலத்தில் ரயில் மறியல்! கோவையில் கருப்புக்கொடி! சென்னை மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டங்கள்…

ஆளுநருக்கு எதிர்ப்பு வலுக்கிறது!-சேலத்தில் ரயில் மறியல்! கோவையில் கருப்புக்கொடி! சென்னை மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டங்கள்…

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆளுநர் ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு எனும் முழக்கத்தோடு.. 25.04.2025 வெள்ளி மாலை 4.00 மணியளவில் சேலம் ரயில் நிலையத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை வகித்தார். கழக மாநில வெளியீட்டுச் செயலாளர் கோபி.இராம.இளங்கோவன் முன்னிலை வகித்தார். தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் ராவண பிரபு, CPML மக்கள் விடுதலை ப.செல்வகுமார், உழைப்போர் இயக்கம் கண்ணன், புரட்சிகர இளைஞர் முன்னணி வின்சென்ட் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கலந்து கொண்டவர்கள்: அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், தலைமைக் குழு...

சங்கராச்சாரிக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்!

சங்கராச்சாரிக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்!

கோவை: காஞ்சி விஜயேந்திர சங்கராச்சாரி அரசியல் சட்டத்திற்கு எதிராக இன ஒதுக்கல் பேசியதைக் கண்டித்து கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு, கழகத்தின் கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் இரவிக்குமார், தமிழ்ப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் இளவேனில், புரட்சிகர இளைஞர் முன்னணி மலரவன், Cpi ml ரெட் ஸ்டார் இனியவன், மக்கள் அதிகாரம் கணேஷ், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிக்குமார் மற்றும் தோழமை அமைப்பினரும், திராவிடர் விடுதலைக் கழக மாநகரச் செயலாளர் வெங்கட், மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாதவன், சதீஷ், ஸ்டாலின் ராஜா, மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன், கௌதம், கதிரவன் கலந்து கொண்டனர். நாமக்கல்: குமாரபாளையம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாலை...

சந்துரு பரிந்துரைகளை நிறைவேற்றுக!

சந்துரு பரிந்துரைகளை நிறைவேற்றுக!

“அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சாதி அடையாளங்களைக் குறிக்கும் கயிறுகள், டீ-சர்ட்டுகளை அணிய தடைவிதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பாராட்டி வரவேற்கத்தக்க ஒன்றாகும். கிருஷ்ணகிரி மாவட்டம் சொப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் வீரப்பன் உருவம் மற்றும் ஒரு அரசியல் கட்சியை அடையாளப்படுத்தும் டீ-சர்ட்டுகளையும் அணிந்து திரைப்படப் பாடலுக்கு நடனமாடி உள்ளனர். பெற்றோர்களிடமிருந்து இதற்கு எதிர்ப்புகள் வந்தன. இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரவை மீறிச் செயல்படும் தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவு கூறுகிறது. அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதற்கு அரசு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது. அந்த விழாக்கள் இலக்கியம் மற்றும் பண்பாடுகளைப் போற்றும் விதமாக இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. அதற்கு மாறாக சாதியைப் பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் இடம் பெறக்கூடாது...

ஆட்சிக்கு மதச்சாயம் பூசலாமா? அமைச்சரே?

ஆட்சிக்கு மதச்சாயம் பூசலாமா? அமைச்சரே?

தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படுமா? என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு சட்ட அமைச்சர் ரகுபதி பதிலளிக்கையில், மூடநம்பிக்கை மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறது. எனவே, சட்டம் கொண்டு வர முடியாது என்று பதில் அளித்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதல்வர் பகுத்தறிவும் அறிவியலும் பாடத்திட்டத்தில் முதன்மையாக இருக்க வேண்டும் என்று பேசி உள்ளார்.இந்திய அரசியல் சட்டம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது. மகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் அமலில் இருக்கிறது. கலைஞர் முதல்வராக இருந்தபோது பேராசிரியர் நன்னன் தலைமையில் ‘மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு’ ஒன்றை உருவாக்கினார். ‘பகுத்தறிவு கலை இலக்கிய மன்றம்’ திமுகவின் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறது. இவை எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு ஏற்கெனவே ராமன் சமூக நீதியின் சின்னம் என்று பேசிய அமைச்சர் ரகுபதி இப்போது மூடநம்பிக்கைகளை...

உண்மைக்கு அஞ்சும் கோழைகள்!

உண்மைக்கு அஞ்சும் கோழைகள்!

சமூக சீர்திருத்தவாதிகள் ஜோதிராவ் புலே மற்றும் சாவித்திரிபாய் புலே வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் புலே. இந்தத் திரைப்படத்தை ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தது படக்குழு. இந்த நிலையில், திரைப்படத் தணிக்கை வாரியம், படத்தின் பல காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்து உரையாடல்களை நீக்க வலியுறுத்தியுள்ளது. இதனால் திரைப்படம் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குத் திரையிடத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மையமாக, படத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்டார்கள், ‘மஹர், மாங், பேஷ்வா என சாதிப் பெயர்களைக் குறிப்பிடக்கூடாது. மூன்றாயிரம் ஆண்டுகள் அடிமைத்தனம் என்றெல்லாம் குறிப்பிடக்கூடாது’ எனப் பல இடங்களில் உரையாடல்களை நீக்கச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறார்கள். படத்தின், முன்னோட்டக் காட்சிகளில் பார்ப்பன ஒடுக்குமுறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், திரைப்பட வாரியத்தின் இந்தப் போக்கு குறித்து இயக்குநர் அனுராக் காஷ்யப் “இந்த சாதிய, இன வெறி அரசாங்கம் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்க்க வெட்கப்படுகிறது” என்று விமர்சனம் செய்துள்ளார். “எது அவர்களைத் தொந்தரவு...

பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்?  தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று பரப்புரை!

பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்? தமிழ்நாடெங்கும் சுற்றிச் சுழன்று பரப்புரை!

சென்னை: 18/3/25 செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம், உத்திரமேரூர் பேருந்து நிலையம், வந்தவாசி பழைய பேருந்து நிலையம், செய்யாறு – ஆரணி கூட்டுச் சாலை ஆகிய இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. கருத்துரையாற்றிய தோழர்கள்: இரா. உமாபதி, ரவிபாரதி, சுகுமார், ம.கி. எட்வின் பிரபாகரன், காஞ்சி அமுதன் (தமிழ் உரிமை கூட்டமைப்பு), அருண் கோமதி, திலகவதி (மக்கள் அதிகாரம்) ஆகியோர். பொன்ராஜ் – வீரமணி – கார்மேகம் கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அமீன் (தமுமுக), அ.வெ.முரளி (திக), ஆதித்ய கரிகாலன் ஆகியோர் உணவு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆதித்ய கரிகாலன் தங்கும் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார். சுகுமாறன், குமார், சூர்யா, கோபி, இரண்யா, வீரா, அசோக், முரளி, அருண் கோமதி, அருண் (இளைஞரணி) ஆகியோர் கலந்து கொண்டனர். 19/3/25 மதுராந்தகம் பேருந்து நிலையம், சோத்துப்பாக்கம் சந்திப்பு, திண்டிவனம் காந்தி சிலை, மயிலம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சென்னை அணியின் தெருமுனைக்...

ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்குக் கடிவாளம்!

ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்குக் கடிவாளம்!

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அரசியலமைப்புத் தலைவராக பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கோட்பாடுகளின்படியே நடக்க வேண்டும். அவர்களுக்கென்று தனி அதிகாரம் உள்ளதாகக் கருதக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் 415 பக்க தீர்ப்பில், ஆளுநர்களின் எதேச்சதிகாரப் போக்கிற்குக் கடிவாளம் போடும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தீர்ப்பின் நகல் அனைத்து மாநில உயர்நீதிமன்றங்கள், ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கும் சில முக்கிய அறிவுரைகள் இத்தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புப் பிரிவு 201ன் கீழ் குடியரசுத் தலைவர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்களை பரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு காலதாமதம் ஏற்பட்டால் அந்த மசோதா கொண்டு வந்ததன் நோக்கம் நீர்த்துபோகிவிடும். பிரிவு 201-இன் கீழ் குடியரசுத் தலைவர் தேவையில்லாமல் காலதாமதம் செய்யக்கூடாது. எனவே, மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு பரிசீலனைக்கு அனுப்புவது தொடர்பாக ஒன்றிய அரசு வழிகாட்டுதல்களை...