மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் பரப்புரை

மடத்துக்குளம் இரா.மோகன் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தெருமுனைக்கூட்டங்கள்.

மறைந்த மடத்துக்குளம் மோகன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 01.06.25 ஞாயிறு காலை 9.15 மணி அளவில் மடத்துக்குளம் நான்கு சாலை சந்திப்பில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மோகன் அவர்களின் குடும்பத்தினர் ஜோதி, அறிவுமதி, திலீபன் பெரியார் பிஞ்சு எழில் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் மடத்துக்குளம் மோகன் அவர்களின் பணிகளை நினைவு கூர்ந்து அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள்.

முன்னதாக மடத்துக்குளம் மோகன் இல்லத்தில் அவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து புகழ் வணக்க முழக்கங்ளை கழகத் தோழர்கள் எழுப்பினார்கள். இந்நிகழ்வில் திரளாக அனைத்து தோழர்களும் பங்கேற்றனர்.

நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து இன ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற மயிலாடுதுறை மாநாட்டு தீர்மான விளக்க இரண்டாம் கட்ட தெருமுனை கூட்டங்கள் மடத்துக்குளம் பகுதிகளில் நடைபெற்றது.

தெருமுனை கூட்டங்களுக்கு மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் கணக்கன் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் சிவானந்தம், ஒன்றிய அமைப்பாளர் கடத்தூர் ஐயப்பன், சரவணன் இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தெருமுனைக் கூட்டங்கள் குமரலிங்கம், கொழுமம்,காரத்தொழுவு,கனியூர் ஆகிய 4 பகுதிகளில் காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது.

தெருமுனைக் கூட்டங்களில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில் ராசு, அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, இணையதளப் பொறுப்பாளர் பரிமளராசன், மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, ம.தி.மு.க. முகமது சாந்து, சிபிஎம் கிருட்டிணன், விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் சரவணன், தி.வி.க.கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமார் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.
தெருமுனைக் கூட்டங்களில் தி.வி.க. வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், இனியன், வெங்கட், யாழினி, இரமேசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

நினைவேந்தல் நிகழ்வில் பொள்ளாச்சி தி.வி.க.ஆனைமலை பொறுப்பாளர் அரிதாசு மற்றும் ஆனந்த், மணி, அப்பாதுரை, நடராசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் 01062025இதழ்

You may also like...