திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில செயலவைக்கூட்டம்

kuttam
கழகத்தின் செயலவைக்கூட்டம் 19.07.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு தருமபுரி,பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையிலும்,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
ஆரம்ப உரை நிகழ்த்திய கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் தோழர்கள் பேசவேண்டிய கருத்துக்கள்,இயக்கத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள்.பயிற்சி வகுப்புகள்,செயல்திட்டங்கள்,கழக அமைப்பு முறைகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை செயலவையின் முன் வைத்தனர்.
மேலும் அச்செயலவையில் தனியார் துறை இடஒதுக்கீடு,எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் பயண நோக்கங்களை ஒருங்கிணைத்த பரப்புரை பயணத்தை மேற்கொள்ள – தங்கள் மாவட்டத்தின் பகுதி /ஒன்றிய,கிளைக்கழகங்களுடன் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகளையும், எந்தெந்த பாதை வழியாக பயணம் மேற்கொள்வது,எங்கெங்கு தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்கிற முன்மொழிவுகளையும் தோழர்கள் எடுத்துரைத்தனர்.
இறுதியில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் செயலவையில் எடுக்கப்பட்ட முடிவுகளையும், கழகதோழர்கள் முன்னெடுக்க வேண்டிய செயல் திட்டங்களையும் தொகுத்து வழங்கினார்.
மாலை 6 மனியளவில் செயலவைக் கூட்டம் நிறைவடைந்தது.

You may also like...

Leave a Reply