நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ மக்கள் பேராதரவுடன் நடந்த சேலம்-தருமபுரி- கிருட்டிணகிரி மாவட்ட பரப்புரைப் பயணம்
ட பறை இசைப் பாடல்கள்; வீதி நாடகங்களுடன் திராவிட மாடல் மக்களிடம் விளக்கம்.
ட கெலமங்கலம் மண்டல மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் பேச்சு.
ட கழகச் செயல்பாட்டாளர்களுக்கு உற்சாகத்தைத் தந்த பரப்புரை நிகழ்வுகள்.
முதல் நாள் : 01.05.2022 ஞாயிறு காலை 10.00 மணியளவில் சேலம் – தருமபுரி – கிருட்டிணகிரி மாவட்ட திராவிட மாடல் தொடர் பரப்புரைப் பயண தெருமுனைக் கூட்டம் ஏற்காட்டில் தொடங்கியது. கூட்டத்தில் முதல் நிகழ்வாக பறை முழக்கம், பாடல்கள், வீதி நாடகம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. முதல் நிகழ்வு ஏற்காடு ரவுண்டானா, இரண்டாவது நிகழ்வு ஏற்காடு டவுன், மூன்றாவது நிகழ்வு ஏற்காடு பேருந்து நிலையம், நிறைவாக மஞ்சக்குட்டை ஆகிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. மஞ்சக்குட்டை நிகழ்வில் திமுக பொறுப்பாளர் பாபு கலந்து கொண்டு உரையாற்றினார். மாலை 6.00 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது. தெருமுனைக் கூட்டத்தில் ஏற்காடு பெருமாள், தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல், தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், ஆத்தூர் மகேந்திரன் ஆகியோர் பயணத்தை விளக்கி உரையாற்றினர். தோழர்களுக்கு காலை , மதிய உணவு ஏற்பாட்டினை ஏற்காடு தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர். தோழர்களுக்கு தேனீர் மற்றும் குளிர்பானங்கள் ஏற்பாடுகளை தோழர் பிரேம் ஏற்பாடு செய்திருந்தார். பொதுமக்களிடம் துண்டறிக்கைகள் கொடுக்கப் பட்டன.
இரண்டாம் நாள் : 02.05.2022 திங்கள் காலை 11.00 மணிக்கு திராவிட மாடல் பரப்புரைப் பயணம் சின்னப்பம்பட்டி, இளம்பிள்ளை, ஆட்டையாம் பட்டி, கொல்லப்பட்டி, தாரமங்கலம் ஆகிய பகுதி களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பறை முழக்கம், பாடல்கள், வீதி நாடகம் ஆகியவை நடைபெற்றன. பரப்புரைப் பயணத்தை விளக்கி தோழர்கள் ஏற்காடு பெருமாள், ஆத்தூர் மகேந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள். பொதுமக்களுக்கு துன்டறிக்கை கொடுக்கப்பட்டன. பயணத்தில் தலைமை வெளியிட்ட புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.
மூன்றாம் நாள் : 03.05.2022 செவ்வாய் சேலம் – தருமபுரி – கிருட்டிணகிரி மாவட்ட திராவிட மாடல் பரப்புரைப் பயணம் காலை 9.00 மணியளவில் நங்கவள்ளியில் தொடங்கியது. 11.00 மணி வனவாசி, 1.00 மணி ஜலகண்டாபுரம் அரச மரம், 2.00 மணி ஜலகண்டாபுரம் பேருந்து நிலையம், மாலை 5.00 மணி செட்டி மாங்குறிச்சி, 7.00 மணி எடப்பாடி பேருந்து நிலையத்தில் பரப்புரை நடைபெற்றது.
பறை இசை, பாடல்கள், வீதி நாடகம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டது. பரப்புரை நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் கோனூர் கவிஞர் வைரமணி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். தோழர்கள் ஆத்தூர் மகேந்திரன், சேலம் டேவிட், நங்கவள்ளி அன்பு, சேலம் ஆனந்தி ஆகியோர் பயணத்தை விளக்கி உரையாற்றினர். பொது மக்களுக்கு பயணத்தை விளக்கி துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நங்கவள்ளி பொறுப்பாளர்கள் தோழர்கள் கிருஷ்ணன், இராஜேந்திரன், சு.பிரபாகரன், த.கண்ணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நங்கவள்ளி பகுதி தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
நான்காம் நாள் : 04.05.2022 புதன் காலை 10.00 மணியளவில் சேலம் – தருமபுரி – கிருட்டிணகிரி மாவட்ட திராவிட மாடல் பரப்புரைப் பயணம் 4-ம் நாளாக கொளத்தூர் பகுதியில் தொடங்கி கொளத்தூர் தண்டா நான்கு ரோடு, கொளத்தூர் பேருந்து நிலையம், மேட்டூர் சுளு, மேட்டூர் சின்ன பார்க் ஆகிய நான்கு பகுதிகளில் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. பரப்புரை பயணத்தை விளக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சி மேட்டூர் தொகுதி செயலாளர் சிவக்குமார், திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த கோனூர் வைரமணி, தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல், நங்கவள்ளி அன்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேட்டு குமார் ஆகியோர் உரையாற்றினார்கள்.
பயணத்தில் பறை முழக்கம், பாடல்கள், வீதி நாடகம் ஆகியவை நடைபெற்றன. பயணத்தில் பொதுமக்களுக்கு துண்டறிக்கைகள் வினியோகிக்கப் பட்டது. கழக வெளியீடு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது. கொளத்தூர் பரப்புரைப் பயணத்தில் தி.மு.க வை சேர்ந்த கொளத்தூர் ஒன்றிய செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி கலந்து கொண்டார். கொளத்தூர் பேருந்து நிலையத்தில் திரளான பொதுமக்கள் நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
கொளத்தூர் பகுதியில் மதிய உணவு படிப்பகத்தில் அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நகரத் தலைவர் இராமமூர்த்தி மற்றும் நகர செயலாளர் அறிவுச் செல்வன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்
அய்ந்தாம் நாள் : 05.05.2022 வியாழன் காலை 10.00 மணியளவில் சேலம் – தருமபுரி – கிருட்டிணகிரி மாவட்ட 5ம் நாள் திராவிட மாடல் பரப்புரைப் பயணம் தருமபுரி மாவட்டம் ஏரியூரில் தொடங்கியது.
2-வது நிகழ்வாக கூத்தப்பாடியில் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. பயணத்தை விளக்கி விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன், பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் முனியப்பன், மாவட்ட செயலாளர் சந்தோசு ஆகியோர் உரையாற்றினர்.
3-வது நிகழ்வாக பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பரப்புரை பயணம். பயணத்தை விளக்கி மக்கள் அதிகாரம் மாயாண்டி, திமுக அசோகன், மாவட்டச் செயலாளர் சந்தோஷ் குமார் ஆகியோர் உரையாற்றினர். 4-வது பரப்புரை கடமடை பகுதியில் நடை பெற்றது. 5-வது இடமாக பரப்புரை
க்ஷ அக்ராஹரம் பகுதியில் நடைபெற்றது. 6-வது இடமாக பரப்புரை பாப்பாரப்பட்டியில் நடைபெற்றது.
7-வது இடமாக பரப்புரை பாலக்கோட்டில் நடைபெற்றது. அனைத்து தெருமுனை பரப்புரை களிலும் பறை முழக்கம், பரப்புரையை விளக்கி பாடல்கள், விரட்டு கலைக்குழுவின் வீதி நாடகம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. தருமபுரி மாவட்டம் முழுவதும் பரப்புரைப் பயண சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. பாலக்கோட்டில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பாலக்கோடு தி.மு.க. பேரூராட்சித் தலைவர் பி.கே.முரளி கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்டத் தலைவர் வேணுகோபால், மாவட்டச் செயலாளர் சந்தோஷ்குமார், பரமசிவம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். மதிய உணவு ஏற்பாடுகளை க்ஷ அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த இராமசாமி, நஞ்சப்பன் ஆகியோர் மதிய உணவாக அசைவ உணவை ஏற்பாடு செய்திருந்தனர். இரவு உணவினை காரிமங்கலத்தில் தி.மு.க வைச் சேர்ந்த பேருராட்சி தலைவர் க்ஷஊசு மனோகரன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
ஆறாம் நாள் : 06.05.2022 வெள்ளி காலை 10.00 மணியளவில் திராவிட மாடல் பரப்புரைப் பயணம் ராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடை பெற்றது. பயணத்தில் பறை முழக்கம், பாடல்கள், வீதி நாடகம் ஆகியவை நடைபெற்றது. பயணத்தை விளக்கி கே.ஆர்.தோப்பூர் கண்ணன், நங்கவள்ளி அன்பு, கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் ப.வாஞ்சிநாதன் ஆகியோர் உரையாற்றினர். பயணக் குழு தோழர்கள் 5-ம் தேதி இரவு தங்குவதற்கும், உணவு ஏற்பாடுகளையும் கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் ச.கிருஷ்ணன், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் ப.வாஞ்சிநாதன் அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர். தெருமுனைக் கூட்டத்தை முடித்துவிட்டு தோழர்கள் கெலமங்கலம் நோக்கி புறப்பட்டனர். கிருட்டிணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் மாலை 4.00 மணிக்கு நமக்கான அடையாளம் திராவிட மாடல் மண்டல மாநாடு தொடங்கியது.
மாநாடு தொடங்குவதற்கு முன்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின.
முதல் நிகழ்வாக தமிழர்களின் தொன்மை இசையான பறை முழக்கத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழு, விரட்டு கலைக்குழுவைச் சார்ந்த தோழர்கள் சி.கோவிந்தராஜ், முத்துக்குமார், விரட்டு கலைக் குழுவைச் சார்ந்த தோழர்கள் ஆனந்த், பொன்ராஜ், கொடுக்கை லோகநாதன் ஆகியோர் பரப்புரையை விளக்கி ஜாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு பாடல்களையும், வீதி நாடகத்தையும் நடத்தினர்.
மாலை 5.00 மணியளவில் மாநாடு தொடங்கியது. மாநாட்டுக்கு கிருட்டிணகிரி மாவட்டத் தலைவர் ப.வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். வரவேற்புரை கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பாளர் ச.கிருஷ்ணன். அதனைத் தொடர்ந்து தி.மு.க வைச் சார்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் டி.எம். அரியப்பன், ஆந்திர மாநில பிஎஸ்பி. கட்சியின் பொதுச் செயலாளர் பெனுகொண்டா வால்மீகி ரவிக்குமார் ஆகியோரைத் தொடர்ந்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் சிறப்புரையாற்றினர்.
அவர் பெரியாரின் பணிகளால் தமிழகம் பெற்ற நன்மைகளை விளக்கியும், அதனை திராவிட மாடல் ஆட்சி முன்னெடுத்துச் செல்லும் பாங்கினையும் விளக்கி விரிவானதொரு உரையை ஆற்றினார்.
நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி திராவிட மாடல் ஆட்சி இப்போது ஏன் தேவைப்படு கிறது என்பதை விளக்கி உரை நிகழ்த்தினார். குறிப்பாக நாம் நீதிக் கட்சி ஆட்சிக்கு முன்பு கல்வி, வேலைவாய்ப்பில் எப்படி இருந்தோம்; தற்போது எப்படி இருக்கிறோம் என்பதை விளக்கி உரையாற்றினார். இந்தி மொழி அலுவல் மொழியாக மாறியது ஒரு வாக்கு வித்தியாசத்தில் தான் என அறிவர் அம்பேத்கர் கூறியதை நினைவு கூர்ந்தார்.
மாநாட்டுக்கு சேலம், தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்டங்களில் இருந்து தோழர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். குறிப்பாக கிருட்டிணகிரி மாவட்டம் பேரிகை, தேன்கனிக்கோட்டை எல மங்களம், நாகமங்கலம், நீலகிரி, அலேசிபம், அனுமந்தபுரம், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து புதியதாக இளைஞர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மதியம் 2.00 மணியளவில் மாநாட்டுக்கு வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாடு இரவு 8.00 மணியளவில் கெலமங்கலம் ஒன்றியச் செயலாளர் தோழர் செந்தில் நன்றியுரை கூற நிறைவடைந்தது. பரப்புரை பயணத்தில் கலந்து கொண்ட 25 தோழர்களுக்கும் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.
குறிப்பாக ஆறு நாட்கள் பயணத்தில் 28 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப் பட்டது. 950 கி.மீ பயணம் செய்யப்பட்டது. 5000 துண்டறிக்கைகள் மக்களிடம் வழங்கப்பட்டது. பயணத்தில் விற்கப்பட்ட கழக வெளியிட்டு புத்தகங்களை காவல்துறையைச் சார்ந்தவர்கள் அதிகமாக வாங்கியது மகிழ்வாக இருந்தது.
மே-1 முதல் 6 வரை பரப்புரையில் கலந்து கொண்டதோழர்கள் – ஒருங்கிணைப்பாளர்கள் – சி.கோவிந்தராஜ், இரா .டேவிட் தலைமைக்குழு உறுப்பினர்கள் – அ.சக்திவேல், காவை ஈஸ்வரன்.
பேச்சாளர்கள் – நங்கவள்ளி அன்பு, ஏற்காடு பெருமாள், ஆத்தூர் மகேந்திரன். விரட்டு கலைக்குழு – ஆனந்த், பொன்ராஜ், கொடுக்கை லோகநாதன். தோழர்கள் – சு.குமரப்பா, அண்ணாதுரை, முத்துக்குமார், சித்துசாமி, கிருஷ்ணன், ராஜேந்திரன், பிரபாகரன், தங்கதுரை, காளியப்பன், சீனிவாசன், கண்ணன், சுசீந்திரன், நாகராஜ், இளவரசன், மாரிமுத்து, முத்துராஜ், இராமச்சந்திரன்.
பெரியார் முழக்கம் 12052022 இதழ்