தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி 21032018
தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி.
(21.03.2018)
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் !
நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் மதியம் 12.30 மணிக்கு தொடங்கி சந்தோஸ் குமார்.மடத்துக்குளம் மோகன். கரைக்குடி முத்து உரைக்கு பின் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி அவர்கள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும். ஹைட்ரோகார்ப்பன். மீதேன். TNPSC தேர்வு நிலைபாடுகள் போன்றனவகளை விரிவாக உரையாற்றினர்
இறுதியாக மாவட்ட செயலாளர் பரமசிவம் நன்றியுரையுடன் முடிந்து.
அடுத்து 3.30 மணிக்கு தருமபுரி பூங்கா அருகில் உள்ள பிரபாகரன் சர் கிள் பகுதியில் மாவட்ட தலைவர் வேணுகோபல் தலைமையில் தொடங்கி திமுக தோழர் பச்சியப்பன்.ஆரூர் பகுதி தி வி க தோழர் பெருமாள் அவர்கள் இன்றைய இளைஞர்களின் கல்வி வேலைவாய்ப்பு எவ்வாறு எல்லாம் பதிக்கப்பட்டு உள்ளது TNPSC தேர்வில் வெளி மாநிலத்தவர்களை ‘ தவிர்க கோரியும் விரிவாக உரையாற்றிய பின் சந்தோஸ்குமார் நன்றியுரையுடன் நிறைவுற்றது.
மாலை 5 மணிக்கு காமலபுரம் பகுதியில் மடத்துகுளம் மோகன் மந்திரமா? தந்திரமா? நிகழ்வுடன் நிகழ்வு தொடங்கி, மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி அவர்கள், காவரி மேமலாண்மை ஏமாற்றத்தால் விவசாயம் விளைநிலம் பாழ் ஆவது போன்ற செய்திகளை விரிவாக பேசிய பின்பு பரமசிவம் நன்றியுரையுடன் முடித்தவுடன் உள்ளுர் பெரியார் தொண்டர்கள் அனைவருக்கும் தேனீர் வழங்கி சிறப்பு செய்தார்கள்
அடுத்த நிகழ்வாக 7.30 மணிக்கு,
காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் குமார் உரையுடன் தொடங்கியது.
தோழர் அமுல்ராஜ் கல்வி வேலைவாய்ப்பு பறிபோகும் நிலைகளை விரிவாக உரையாற்றிய பின் பிரச்சாரச் செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்கள் காவேரி மேலாண்மை. ஹைட்ரோகார்பன்,மீதேன், காவி பயங்கரவாதம், பண்ணாட்டுவல்லாதிக்க சுரண்டல்கள்.பண மதிப்பு இழப்பு, GSTவரி விதிப்பு, TNPSC, வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை என எல்லா செய்திகளையும் தொகுத்து விரிவாக உரையாற்றினர்,
பின்,
இறுதியாக மாவட்ட அமைப்பாளர் சந்தோஸ்குமார் நன்றியுரையுடன் முடிவுற்றது இரவு உணவு பி.சி.ஆர் மனோகர் அவர்கள் பள்ளியல் சிறப்பான ஏற்பாடுகள் செய்து கொடுத்து இருந்தார்கள்,