தருமபுரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

29-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு, பி.அக்ராகரம், சமுதாயக் கூடத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தருமபுரி மாவட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.
திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் கலந்துரையாடல்களின் இறுதிச் சுற்றுப்பயணம், தர்மபுரி மாவட்டத்திலிருந்து தொடங்கியது. பி. அக்ரகாரம் சமுதாயக்கூடத்தில் பகல் 11 மணியளவில் நடந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, ‘கடவுள் ஆத்மா மறுப்பு’ கூறி அறிமுக உரையாற்றினார்.
கழகத் தோழர்கள் வெ.வேணுகோபால், எம். அசோக்குமார், ம. பரமசிவம்,பேராசிரியர் சீனிவாசன், கு. நாகராஜன், ஆசிரியர் வையாபுரி,சந்தோஷ்குமார், செந்தில்குமார், எம். இராமதாஸ், சுதந்திரகுமார், நதியா தேவி,மு.ஜோதி, நடராஜன், நதிவர்மா ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர்.
தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்; கல்லூரி, பள்ளிகள் முன்மாணவர்களிடையே கொள்கை விளக்க துண்டறிக்கைகளை வழங்க வேண்டும்என்ற கருத்துகளை முன் வைத்த தோழர்கள், பா.ம.க. வளர்த்து விடும் ஜாதி வெறி ஆபத்துகளையும் சுட்டிக் காட்டினர். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமிஉரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் நிறைவுரையாற்றி, பொறுப்பாளர்களை அறிவித்தார்.

பெரியார் முழக்கம் 03092015 இதழ்

IMG_7209 IMG_7211 IMG_7214 IMG_7223

You may also like...

Leave a Reply