தருமபுரியில் கழகப் பரப்புரைப் பயணம்

20.03.2018 காலை 10.30 மணிக்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பரப்புரைப் பயணம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் ஜிரிஸி இசைக் குழுவின் பறை முழக்கத்துடன் துவங்கியது.

நிகழ்வின் நோக்கத்தைத் தொடக்க வுரையாக மாவட்ட அமைப்பாளர் சந்தோசுக்குமார் விளக்கினார். அடுத்து மடத்துக்குளம் மோகன் மந்திரமல்ல. தந்திரமே என்று அறிவியல் விளக்க  நிகழ்ச்சியுடன் பல்வேறு கருத்துகளை தொகுத்து வழங்கினார். கல்வி

வேலை வாய்ப்பில் பறி போகும் உரிமைகள் பற்றி ஆரூர் பெருமாள் உரையாற்றினார்.

அடுத்து பொருளாளர் திருப்பூர் துரைசாமி – விவசாயிகளின் பறிபோகும் உரிமைகள் பற்றிய உரைக்குப் பின் தருமபுரி மாவட்ட செயலாளர் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது. மதிய உணவு சந்தோசு குமாரின் தொழிலகத்தில் வழங்கப் பட்டது.

பி.அக்ரகாரம் பகுதியில்  சந்தோஸ் குமார் (மாவட்ட அமைப்பாளர்) தொடக்கவுரையாற்றினார். கொளத் தூர் பகுதி மாணவர் அமைப்பாளர் சந்தோஸ் கல்வி வேலை வாய்ப்புகள் பற்றி உரையாற்றினார், ஆருர் பெருமாள் உரையைத் தொடர்ந்து, இறுதியாக காரைக்குடி முத்து விரிவாக சிறப்புரையாற்றினார்.

மாலை 7 மணியளவில் பண்ட அள்ளியில் வேணுகோபால் (மாவட்ட தலைவர்) தலைமையில் பரப்புரை நடந்தது. ‘மந்திரமல்ல, தந்திரமே’ அறிவியல் நிகழ்ச்சியை  மடத்துக்குளம் மோகன் நடத்தினார்.  அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி உரையாற்றினார். பெருமாள் நன்றி கூறினார். மாவட்டத் தலைவர் வேணு கோபால் வீட்டில் இரவு உணவு வழங்கப்பட்டது.

21.03.18 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு இண்டூர் பேருந்து நிலையத் தில் பரப்புரைப் பயணம் தொடங்கியது வேணுகோபால் தலைமை தாங்கினார். தொடக்கவுரையாக, மடத்துக்குளம் மோகன் இயக்க வெளியீடுகளை அறிமுகப்படுத்தினார். அடுத்து சி.பி.அய்.எம். கட்சியைச் சார்ந்த பி.டி. அப்புனு, கழகப் பொருளாளர் துரைசாமி பரப்புரை செயலாளர்

பால் பிரபாகரன் உரையாற்றினர். சந்தோசுகுமார் நன்றி கூறினார்.

காலை 10 மணிக்கு பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் பறை இசையுடன் பரப்புரைப் பயணம் துவங்கியது. கழக மாவட்டத் தலைவர் வேனுகோபால் தலைமை தாங்கினார். அமைப்பாளர் சந்தோசுகுமார் தொகுத்து வழங்கினார். மடத்துக்குளம் மோகன் நிகழ்த்திய ‘மந்திரமா தந்திரமா’ அறிவியல் விளக்க நிகழ்ச்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பெருமாள் உரையாற்றினார். பொருளாளர் திருப்பூர் துரைசாமி சிறப்புறையாற்றினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த

மடம் ஆறுமுகம் குடிதண்ணீர் பாட்டில்களை நன்கொடையாக வழங்கினார்.

பெரியார் முழக்கம் 12042018 இதழ்

You may also like...