மக்கள் கண்காணிப்பகம் நடத்திய பொது உரையாடல் தருமபுரி 07042017

செம்மரக் கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரால், ஆந்திர காவல், வனத்துறை அதிகாரிகளால் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு, ஆந்திர வனப்பகுதிக்குள் கொண்டு சென்று 20 அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் 06042015 அன்று சுட்டுக் கொள்ளப்பட்டனர்.

அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவாய் 07042017 அன்று மாலை, தருமபுரி வள்ளலார் திடலில் மதுரை மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பல்வேறு அமைப்பு, கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து பொது உரையாடல் நடைபெற்றது.

கலை நிகழ்வுகளுடன் தொடங்கிய அந்நிகழ்வில் மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் ஆணைகள், திருப்பதி, ஆந்திர உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் நடந்துகொண்டுள்ள வழக்கின் நிலவரம், தேவைப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக உரையாற்றினார்.

அந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், ம.தி.மு.க.வின் துணைப் பொதுச் செய்லாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் டெல்லி பாபு, இயக்குநர் களஞ்சியம், தமிழர் முன்னேற்றப் படை தலைவர் கி.வீரலட்சுமி, வழக்கறிஞர் அசோகன், து.இசக்கிமுத்து, வழக்கறிஞர் இரவி ஆகியோர் உரையாற்றினர்.

போலி மோதலில் பலியான 20 தமிழர்களின் குடும்பத்தினரும் எராளமான பொது மக்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

img_3718 img_3735 img_3737 img_3744 img_3761 img_3762 img_3766 img_3767 img_3768 img_3777 img_3784 img_3787 img_3793 img_3799 img_3802 img_3804 img_3808 img_3817

You may also like...