தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி

தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி.

22.03.18 பயணக் குழு காலை தீர்த்தமலை பகுதியில்
முதல் நிகழ்வாக 10.30 மணிக்கு தோழர் பெருமாள் அவர்கள் துவக்கவுரையுடன் தொடங்கி மாநில செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் சிறப்புரையாக இழந்து வரும் உரிமைகளையும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் விரிவாக உரைக்கு பின் நன்றியுரையுடன் முடிந்தது

மதியம்
12.30 மணிக்கு சங்கிலி வாடியில் தோழர் பெருமாள் தொடக்கவுரைக்கு பின்மாநில செயற்கு உறுப்பினர் தோழர் விழுப்புரம் அய்யனர் அவர்கள் விரிவாக மக்களை பாதிக்கும் திட்டங்களை விளக்கியுரையாற்றினார்கள் பின் தோழர் பெருமாள், மனோகர் இருவரின் குடும்பத்தினர்களுடன் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள், நன்றியுடன்முடித்தது.

மதியம் 1.30 க்கு GH கூட்டு ரோடு பகுதியில் தோழர் சந்தோஸ்குமார்தொடங்கி வைத்து உரையற்றினார் பின் சூலூர் பன்னீர்செல்வம், அடுத்து மடத்துக்குளம் மோகன்அந்த பகுதி மக்கள் வாழ்வியலையும் இன்றைய அரசுகளால் ஏற்பட்டு இன்னல்களையும் விரிவாக எடுத்துரைத்தார்கள் 3.00 மணிக்கு முடித்து பாப்பிரெட்டிப்பட்டி நிறைவு நிகழ்வுக்கு பயணம் தொடர்ந்தது,

பாப்பிரெட்டிப்பட்டியில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை கடைவீதி பேருந்து நிலையம் பகுதியிலும் துண்டறிக்கை கொடுத்து வசூலும் செய்யப்பட்டது இரண்டாயிரத்து இருநூற்றி நாற் பத்தி ஒரு ரூபாய் வசூல்= 2241/ பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது முடித்த பின் மாலை 6.30க்கு நிறைவுபொதுக் கூட்டம் ஜீவாதிடலில்தொடங்கியது.

மாவட்ட அமைப்பாளர் சந்தோஸ்குமார் தொடக்கவுரைக்கு பின் தோழர் மடத்துக்குளம் மோகன் மந்திரமல்ல, தந்திரமே, என்ற அறிவியல் நிகழ்ச்சியுடன் இயக்க செய்திகள் பறிபோகும் உரிமைகள் இணைத்து விரிவாக 7.15 வரை நடைபெற்றது தொடந்து மாவட்ட தலைவர் வேணுகோபல் தலைமையில் துவங்கி மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அடுத்து மாநிலபிரச்சாரச் செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்களும் உரையாற்றிய பின் தலைவர் அவர்கள் முன்னிலையில் பொம்மிடி தோழர்கள் சிவக்குமார் தலைமையில் பாலமுருகன், தமிழரசு, பூவரசன், நவீன், பிரவீன், தாமோதரன் ஆகிய புதிய . தோழர்கள் இயக்கத்தில் இணைத்துக் கொண்டு தலைவருக்கு புத்தகம் பரிசு வழங்கினார்கள்

மேலும் பெரியார் பகுத்தறிவு பாசறை சார்ந்த கவிஞர் பெருமுல்லை யரசு, பகுத்தறிவு அணி ஆசிரியர் மா, பூங்குன்றன் ஆசிரியர், முசிலம்பரசன் ஆகியோர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர் பின் 8, 40க்கு தலைவர் உரை தொடங்கி கல்வி வேலைவாய்ப்பு தமிழகத்தில் இழந்து வரும் பறிபோகும் உரிமைகள் ஆதாரங்களுடன் புள்ளி விபரங்களுடன் பட்டியலிட்டு உரை நிகழ்த்தி 9.45க்கு முடித்தார் பிரச்சார குழுவினர்களுக்கு புத்தகங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்து அணைவருடன் குழுவாக படம் எடுத்துக் கொண்டனர்
தோழர் பரமசிவம் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது,

பயணத்தில் கலந்து கொண்டவர்கள்
தலைமை பொறுப்பாளர்கள்
தோழர்கள், ஈரோடு இரத்தினசாமி, துத்துக்குடி.பால் பிரபாகரன் திருப்பூர் துரைசாமி,
செயற்குழு உறுப்பினர்கள்
விழுப்புரம் அய்யனார்
சூலூர் பன்னீர்செல்வம்,
மடத்துக்குளம் மோகன்
காவலாண்டியூர் தோழர்கள்
விக்னேஷ் சந்தோஸ் சென்னப்பன்
கரைக்குடி தோழர்கள்
பெரியார் முத்து, V, ராஜீ
விழுப்புரம் தோழர்கள்
செல்வகுமார், அமுல்ராஜ்,
தருமபுரி மாவட்ட தோழர்கள்
ஆரூர் பெருமாள், பரமசிவம், சந்தோஸ்குமார், வேணேகோபால்
ஒட்டுநர்கள்
காவலாண்டியூர் அவினாசி
திருப் பூர். அய்யப்பன்
தொடக்க நிகழ்வில் மேட்டூர் டி.கே.ஆர் இசைகுழுவினர்கள் கலந்து கொண்டு தொடக்கநிகழ்வுக்கு சிறப்பு.செய்தனர்கள்

Image may contain: one or more people, people standing and people on stage

You may also like...