எதிர்ப்புகளை புறந்தள்ளி மயிலாடுதுறையில் கழகம் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை!
மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பில் “ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்! மடியட்டும் ஆணவப் படுகொலைகள்” என்ற தலைப்பில் பரப்புரைப் பயணமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. 6 பரப்புரைக் கூட்டங்களை தோழர்கள் நடத்தியுள்ளனர். முதல் நாள்: செப்-2 அன்று மாலை 4.00 மணிக்கு சீர்காழியில் மாவட்டச் செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது. தபெதிக மண்டலச் செயலாளர் பெரியார் செல்வம் கலந்து கொண்டு பயணத்தின் நோக்கங்கள் வெற்றி பெற ஆதரித்து பேசினார். மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சியை துரை.தாமோதரன் செய்து காட்டி மக்களிடையே பரப்புரை பயணத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். தலைமைக் குழு உறுப்பினர் இளையராஜா, மாவட்ட அமைப்பாளர் செந்தில், மாவட்டப் பொருளாளர் விஜயராகவன், தில்லை நாதன், சிதம்பரம் மதன்குமார், பாடாலூர் சுதாகர், மெளனி, வழக்குரைஞர் நன்மாறன், தபெதிக மாவட்டத் தலைவர் பரசுராமன், தமிழர் உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப்பு.மகேசு, தமிழ்மண் தன்னுரிமை இயக்கத்தின் நெறியாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர்...
