ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கழகம் ஆர்பாட்டம் கல்வி உரிமையை பறிக்காதே
ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி உரிமைகளைப் பறிப்பதை எதிர்த்து தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டுள்ளது. திமுக சார்பில் டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாடடின் முக்கிய நகரங்களில் பிப்.13 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. பல்கலைக் கழக பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிகளை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்த புதிய விதிகளில் பல்கலைக்கழகங்கள் ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆபத்து அடங்கியுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி துண்டறிக்கை அச்சிடப்பட்டு மக்களிடம் வழங்கப்பட்டன. கழகம் ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு… சேலம்: மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் யூஜிசி விதிகளில் திருத்தம் செய்து மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கிற, இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கிற ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து 13.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர்...
