ரூபாஸ்ரீ – சபரிகிரி ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா

தோழர்கள் ரூபாஸ்ரீ – சபரிகிரி ஆகியோரின் ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி விவாஹா திருமண மண்டபத்தில்  30.10.2022 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.

நிகர் கலை குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியுடன் நிகழ்வுகள் தொடங்கின.

முன்னதாக மணமக்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்பொழுது கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

முதல் நிகழ்வாக பகுத்தறிவு பாடல்களை ஆனைமலை வினோதினி, திருப்பூர் யாழிசை, யாழினி, கண்ணையா ஆகியோர் பாடினர்.

இணையேற்பு விழாவிற்கு கோவை மாவட்டக் கழகச் செயலாளர் வே.வெள்ளிங்கிரி முன்னிலை வகித்தார். கழகத் தோழரும் மணமகனுமான  கோ. சபரிகிரி  வரவேற்பு கூறினார்.  கழகத் தலைவர்  கொளத்தூர் மணி  தலைமையில் மணமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.

மணமக்களை வாழ்த்தி பேராசிரியர் சுந்தரவள்ளி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்), கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பொறியாளர் தி.பரமசிவம், (திராவிடர் கழகம்), காசு.நாகராசன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), செந்தில் (தந்தை பெரியார் திராவிடர் கழகம் – சென்னை), முகில்ராசு (திவிக திருப்பூர் மாவட்டத் தலைவர்), பொள்ளாச்சி விஜயராகவன் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தோழரும், ரூபாஸ்ரீயின் சகோதருமான திருப்பூர் மகிழவன்  நன்றி கூறினார்.

இம்மண விழாவில் கோவை திருப்பூர் சென்னை என பல்வேறு பகுதிகளில் இருந்து கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள், மணமக்களின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 03112022 இதழ்

You may also like...