ஆனைமலையில் – கழகத் தலைவர் நடத்தி வைத்த திருமணம்
பொன்னமராவதி திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஆறுமுகம் – அமுதா ஆகியோரது மகன் அ.ஆ.பாலச்சந்தர் (எ) இனியவன், ஆனைமலை வெல்ஃபேர் கட்சி மாநில துணைத் தலைவர் மணிமாறன் – திலகவதி ஆகியோரது மகள் ம.தி.புனிதா ஆகியோரது “ வாழ்க்கை இணை ஏற்பு விழா” ஆனைமலையில் 25.06.2023 ஞாயிறு அன்று நடைபெற்றது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. ம.தி. பிரபு அம்பேத்கர் வரவேற்புரை ஆற்றினார். இரா அதியமான், நிறுவனத் தலைவர் – ஆதித் தமிழர் பேரவை. கே.எஸ். அப்துல் ரஹ்மான், மாநிலத் தலைவர் – வெல்ஃபேர் கட்சி. பேராசிரியர் சுந்தரவள்ளி, த.மு.எ.க.ச. சி.விசயராகவன், பெரியாரியல் சிந்தனையாளர். காசு.நாகராசன், அமைப்பு செயலாளர் – தி.இ.த.பே. இரா.கருப்புச்சாமி, கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம். முகமது கவுஸ், மாநில செயலாளர் – வெல்ஃபேர் கட்சி. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கழகத் தோழர் ம.ஏ. இளங்கோவன் நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 06072023 இதழ்