“ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்”

நூற்றாண்டைத் தொடங்கி இருக்கிற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதன் கரங்களுக்கு எட்டாக்கனியாக இருந்த தமிழ் மண்ணில் இன்று தடியோடு ஊர்வலம் போகும் அளவிற்கு வந்திருக்கிறது. ஒரு நூறாண்டு கால சமூகநீதி கொள்கைகளுக்கான போராட்ட வரலாறு கொண்ட திராவிட நிலத்தில் தன் விதையினை ஊன்றிவிட ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இதனை ஒரு தொடக்கப்புள்ளியாகவே பார்க்க வேண்டி உள்ளது. முழுக்க முழுக்க சித்பவன பார்ப்பனர்களைத் தலைமையாகக் கொண்ட ஓர் இயக்கம் மதத்தின் பெயரைச்சொல்லி மக்களைப் பிளவுபடுத்த மட்டும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்து இளைஞர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட பின்னணி மற்றும் வரலாறு, ஒட்டு மொத்த இந்தியாவும் விடுலைக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது அவர்களது செயல்பாடு என்னவாக இருந்தது? அந்த அமைப்பின் தலைமை எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது? காந்தியின் கொலை வழக்கில் அவர்களின் பங்கு, வரலாறு முழுக்கவே முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் என ஆர்.எஸ்.எஸ்-ஸைப் பற்றிய முழுமையான தகவல்களைத் தரும் நூல். அனைத்துத் தகவல்களையும் ஆதாரங்களோடு அம்பலப்படுத்திய இந்நூல் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்களால் எழுதப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய தலைமுறைக்கு அறியாத பல செய்திகளைத் தரும் நூலை மலிவு விலையில் நன்செய் பதிப்பகம் வெளியிடுகிறது. விலை – ரூ.50/- – பேச: 9566331195
பெரியார் முழக்கம் 17.10.2024 இதழ்

You may also like...