தோழர் பத்ரி நாராயணன் நினைவுநாள் மாநாட்டில் திருமுருகன் காந்தி உரை சென்னை 30042018
ஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ‘நீர் மறுப்பு’ என்ற தலைப்பில் ஆற்றிய உரை.. நமக்கு நிலம் பாழ்பட்டிருக்கிறது, நீர் மறுக்கப்பட்டிருக்கிறது, நீட் திணிக்கப்பட்டிருக்கிறது. இதிலே நீர் மறுப்பைப் பற்றி என்னுடைய கருத்துக்களை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழ்நாட்டுக்கான நீர் மறுப்பு என்பது இந்திய அரசுடைய சதித் திட்டமாகத்தான் ஒட்டுமொத்த தரவுகளையும் பார்க்கும்போது நாம் உணர முடியும். இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு என்பது நீர்ப் பற்றாக்குறை உள்ள ஒரு மாநிலமாக உள்ளது. வற்றாத நதியான காவிரியிலிருந்து ஒரு பகுதி நீர் நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. காவிரி நீர் உரிமை தொடர்பாக வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்தில் அன்றைய மைசூர் மாகாண அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் முதல்...
