திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

திருப்பூரில்
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாள் விழா 14.04.2018 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அருகே நடைபெற்றது.

கழக பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கவிஞர் தோழர் கனல் மதி அவர்களின் வாசிப்பில் கழகத்தின் ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ ஏற்பு கழகத் தோழர்கள் ஏற்க்கப்பட்டது.

இந்நிகழ்வின் இடையே பெரியார் பிஞ்சுகள் யாழினி, முத்தமிழ் ஆகியோரின் பிறந்த நாள் அவ்விடத்திலேயே கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு,மாநில அறிவியல் மன்ற தலைவர் தோழர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா,மாநகர பொறுப்பாளர் மாதவன், மாணவர் கழகத்தின் தோழர் தேன்மொழி, இணைய தள பொறுப்பாளர் விஜயகுமார், மாநகர அமைப்பாளர் ராமசாமி, பரிமளராஜன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

Image may contain: 25 people, people smiling, people standing

You may also like...