சென்னையில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

சென்னையில்,
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக…

டாக்டர்.அம்பேத்கர் பிறந்த நாளான 14.04.2018 அன்று காலை 8 மணிக்கு சேத்துபட்டு பகுதியில் அமைந்துள்ள டாக்டர்.அம்பேத்கர் உருவச்சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதை தொடர்ந்து திருவான்மீயூர், பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்பு, அம்பேத்கர் மணிமண்டபம், மயிலாப்பூர், இராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள டாக்டர்.அம்பேத்கர் திருஉருவச்சிலை, படங்களுக்கு மாலை அணிவித்து, முழக்கங்களோடு மரியாதை செலுத்தப்பட்டது. கழகத் தோழர்கள் பலரும் வந்திருந்து மரியாதை செலுத்தினர்.

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

Image may contain: 6 people, people on stage

You may also like...