சென்னைக் கூட்டத்தில் பால். பிரபாகரன் உரை காந்தியார் கொலை: பெரியார் முன்கூட்டியே எச்சரித்தார்
¨ காந்தியார் கொலை வரலாறு மறைக்கப் படுகிறது. ¨ காந்தியாரிடம் பெரியார் இயக்கத்துக்கு முரண் உண்டு. இரட்டை வாக்குரிமை ஓர் உதாரணம். ¨ அம்பேத்கர் ஒன்றிய அரசுப் பதவிகளில் ஆதிராவிடர் இடஒதுக்கீட்டை 1943லேயே பெற்றுத் தந்தவர் பிப்.6, 2023 அன்று மயிலைப் பகுதியில் கழகம் நடத்திய காந்தி படுகொலைக் கண்டன நாள் பொதுக் கூட்டத்தில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்த்திய உரை. இப்போது எதற்காக திராவிடர் விடுதலைக் கழகம், காந்தியார் படுகொலை நாள் கூட்டத்தை நடத்துகிறது என்று சொன்னால், இப்போது ஆண்டு கொண்டிருக்கிற ஒன்றிய அரசாங்கம், பல்வேறு வரலாற்றுத் திரிபுவாதங்களை செய்து கொண்டிருக்கிறது. குஜராத்தினுடைய பாடப் புத்தகங்களிலே மத்திய அரசினுடைய பாடப் புத்தகங்களிலே 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி காந்தியடிகள் இறந்து போனார் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஏதோ நோய் வாய்ப்பட்டு இறந்தது மாதிரியோ அவர் ஆஸ்பத்திரியில் இருந்து பிழைக்க மாட்டார் என்று சொல்லி அவர்...