தமிழ்க் குடில் இல்லத் திறப்புவிழா
கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். தோழர்கள் கிருஷ்ணவேணி – தேவராஜ் ஆகியோரது புதிய இல்லம் பல்லடம் அருகே வரபாளையம் கிராமத்தில் “தமிழ்க் குடில்” எனும் பெயரில் 04.12 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் திறந்து வைக்கப் பட்டது.
இல்லத்தை தோழர்களின் பெற்றோர்கள் கிட்டாள்- மாறன், இலட்சுமி – பழனிச்சாமி ஆகியோர் திறந்து வைத்தார்கள். இல்லத் திறப்பு விழாவிற்கு ப.மாறன் தலைமை தாங்கினார்கள் தே. சுப்பிரமணியன் – ராதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கற்பி சமூக கல்வி மையத்தின் இரா.விடுதலைச்செல்வன் வரவேற்புரையாற்றினார்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெரம்பலூர் டாக்டர் அம்பேத்கர் சமூகக் கல்விப் பொருளாதார அறக்கட்டளையின் இரா.க.கிருஷ்ணசாமி, பாடகர் மா.பா. கண்ணையன், கழகப் பொருளாளர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர்சிவகாமி, தி.வி.க. திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் மா.தேவராஜ் நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 29122022 இதழ்