ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் “இல்லம் தேடி சந்திப்பு”

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி தோழர்களின் ‘இல்லம் தேடி சந்திப்பு’ நிகழ்வின் முதல் நிகழ்வாக 30.10.2022 ஞாயிறு அன்று, கவுந்தாபாடி இளமதி செல்வம் வீட்டிற்கு தோழர்கள் சென்றனர். தோழர்களின் இல்லத்தில்  அவர்களது குடுபத்தினரோடு கலந்துரையாடல் நடைபெற்றது . அந்த பகுதியில் அமைப்பை கட்டமைப்பது, தோழர்களுக்கு அவர்களது வாழ்வியலில் பகுதியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அனைவருக்கும்  அசைவ விருந்தினை தோழர் செல்வம் குடுபத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

இரண்டாவது வார நிகழ்வாக 6.11.2022 அன்று அந்தியூர் தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொறுப்பாளர் வீரா கார்த்திக் இல்லம் சென்றனர். தோழரின் குடும்ப அறிமுகத்திற்குப்  பின் அவர்களின் பணியிடங்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து, வருகின்ற மார்ச் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் ஒருங்கிணைந்த குடும்ப விழா நடத்துவது குறித்தும் கலந்துரையாடல் நடைபெறறது. கலந்து கொண்ட அனைவருக்கும் வீரா கார்த்திக் மற்றும் அவரது இணையர் சிறப்பான அசைவ விருந்தை ஏற்பாடு செய்து இருந்தனர்.

மூன்றாவது வார நிகழ்வாக 20.11.2022 காசிபாளையம் தோழர்களின் ஒருங்கிணைப்பில் காசிபாளையம் கிளை கழகத் தோழர்களின் சந்திப்பு மற்றும் இம்மாதத்திற்கான மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் காசிபளையம் கருப்பணன் இல்லத்தில் நடைபெற்றது.  கலந்துரையாடல் கூட்டத்தில் நவம்பர் 26 சாதி ஒழிப்பு மாவீரர்கள் நாளை கோபி பெரியார் சிலை முன் சிறப்பாக நடத்துவது எனவும், நவம்பர் 27இல் கொளத்தூர் நிகழ்வில் பங்கெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. வருகின்ற டிசம்பர் 24 பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் சத்தியில் நடத்துவது எனவும், மாவட்ட கழகத் தோழர்களுக்கு விரைவில் இணையதள பயிற்சி நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  நிகழ்வில் கொளப்பலூர் போக்குவரத்து நகரில் தோழர் ராம் கழகத்தில் புதிதாக இணைத்து கொண்டார். அனைவருக்கு காசிபாளையம் தோழர்கள் அசைவ உணவு ஏற்பாடு செய்து இருந்தனர்.

செய்தி: ம.நிவாசு

பெரியார் முழக்கம் 24112022 இதழ்

 

You may also like...