காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை : திருச்சியில் கழகம் கருத்தரங்கம்
திராவிடர் விடுதலைக் கழகம் திருச்சி, பெரம்பலூர் மாவட்டக் கழகங்களின் சார்பில், காந்தியார் நினைவு நாள் கருத்தரங்கம், “காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை” என்ற தலைப்பில், 28.01.2023 அன்று மாலை 5 மணி யளவில், திருச்சி இரவி மினி அரங்கில் நடைபெற்றது.
கருத்தரங்கத்திற்கு, பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை தாமோதரன் தலைமை வகித்தார். நிகழ்விற்கு, திருச்சி மாவட்டச் செயலாளர் மனோகரன் வரவேற்பு கூறினார். திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி, திருவரங்கம் அசோக், விராலிமலை குமரேசன், திருச்சி ஆறுமுகம், போலீஸ் காலனி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வின் தொடக்கத்தில், மக்கள் கலை இலக்கிய கழகம் மய்யக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மதவெறிக்கு எதிரான பாடல்களை கலைக்குழுவினர் பாடினர். தொடர்ந்து, விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கருத்துரையாற்றினார்.
இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சங் பரிவாரங்களின் மதவெறிக் கலவரங்கள் மற்றும் கொலைகளைப் பற்றி விரிவாக விளக்கி உரையாற்றினார். திருச்சி மாவட்ட பொருளாளர் டார்வின் தாசன் நன்றி கூற கருத்தரங்கம் நிறைவுற்றது. திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட கழகத் தோழர்கள் அனைவரும் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 02022023 இதழ்