மொழிப் போர் தியாகிகள், முத்துக்குமார் நினைவிடங்களில் கழகம் மரியாதை
1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பில் வீரமரணம் அடைந்த நடராசன், தாளமுத்து நினைவிடம் வட சென்னை மூல கொத்தளம் பகுதியில் உள்ளது. அதேபோல ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முத்துக்குமார் நினைவிடம் சென்னை கொளத்தூரில் உள்ளது. கழக சார்பில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மயிலை சுகுமார், இராவணன், மனோகரன், பிரவீன், உதயகுமார், ரவி பாரதி, சிவா, கனி, நரேஷ் உள்ளிட்ட தோழர்கள் முறையே ஜன. 25 மற்றும் 30ஆம் தேதிகளில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பெரியார் முழக்கம் 02022023 இதழ்