அம்பேத்கர் நினைவு நாள்: கழக சார்பில் சிலைகளுக்கு மாலை

அம்பேத்கர் நினைவுநாளை யொட்டி கழக சார்பில் பல்வேறு இடங்களில் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

சென்னை : புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி, மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் காலை 9:30 மணியளவில், இரண்யா  கொள்கை முழக்கங்களை எழுப்பி  மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு, கிருத்திகா மாலை அணிவித்தார். இறுதியாக, இராயப்பேட்டை வி.எம். தெரு படிப்பகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர்  படத்திற்கு தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மாலை அணிவித்தார்.

தலைமைக் கழகப் பொறுப் பாளர்கள், மாவட்டப் பொறுப் பாளர்கள், பகுதி கழகப் பொறுப் பாளர்கள் உட்பட கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்.

விழுப்புரம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் 66ஆவது நினைவு நாளை யொட்டி விழுப்புரம் அரசு மருத்து வமனை எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அனிவித்து கொள்கை முழக்கம் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது .

நிகழ்ச்சியில் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார், விழுப்புரம் மாவட்ட கழகத் தலைவர் பூஆ.இளை யரசன், இளைஞரணி செயலாளர், கிருஷ்ணராஜ்,  பெரியார் ஜெயரட் சகன், தமிழரசன், ஜெயபாலன் அய்யா,  வித்யாசேகர்,  விஷ்வா, கலைமணி ஆகியோர் கலந்துகொண்டனர்

தொடர்ந்து ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகம் சார்பில் டாக்டர் அம்பேத்கர் நினைவுநாள் நலத்திட்ட நிகழ்ச்சியை  மாவட்டத் தலைவர் ஜெய்பீம் கமல் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கழக சார்பில் கலந்து கொள்ள ஜெய்பீம் கமல் அழைத்தார்.  விழுப்புரம் சிக்னல் அருகில் நடந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகத் தலைவர் பாலு, வழக்கறிஞர் லூசியா, ஆகியோர் உரைக்கு பின், திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்ட தலைவர் பூஆ.இளையரசன் கலந்து கொண்டு ஜாதியை தீண்டாமையை பாது காக்கும் இந்து மதம் பார்ப்பனியத்தின் கொடுமைகளைக் குறித்தும் மக்கள் சபரிமலைக்கும்  திருப்பதி கோயி லுக்கும் உழைத்த பணத்தை இங்கிருந்து கொண்டுபோய்  கோடி கணக்கில் உண்டியலில் போட்டு வருகிறார்கள். மோடி அரசின் விலை வாசி உயர்வை பற்றி கவலைபடாமல் உழைத்த பணத்தை கோயிலுக்கு செலவு செய்து வருகிறார்கள்

தலைவர் அம்பேத்கர் கோயி லுக்காக பணத்தை செலவு செய்யா தீர்கள் உங்கள் பிள்ளைகளின் கல்விக்கு செலவிடுங்கள் என்று சொன்னார் இதுகுறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் தாழ்த்தப்பட்ட பிற்படுத் தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி  ஜாதி ஒழிந்த சமத்துவ விடுதலைக்கு  உழைத்த  தலைவர்கள் தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கர்  விட்டு சென்ற கொள்கை பணியை  மக்களிடத்தில் கொண்டு செல்வோம் என்று உரையாற்றினார் கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு  ஆர்முடன் கருத்துகளை கேட்டனர்.

கோவை : காந்திபுரம் பெரியார் சிலை அருகில் கோவை மாநகர  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் படத்திற்கு தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம்  தலைமையில் மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன் உரையாற்றினார்கள்.

தோழர்கள் இராமச்சந்திரன், பன்னீர்செல்வம், நிர்மல் குமார், கிருஷ்ணன், வெங்கட், இயல், சிவராசு, மாதவன், துளசி, ஸ்டாலின் ராஜா, இராஜாமணி, சக்கரவர்த்தி, பொன் மணி, மனோகர், முத்தமிழ் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் தோழர் சிவராசு அவர்கள் தேநீர் வழங்கினார் . தோழருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கள்ளக்குறிச்சி : திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரா புரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு, தே.ச  அன்புரவி சங்கராபும் ஒன்றிய செயலாளர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில்,  சி.சாமிதுரை மாவட்ட அமைப்பாளர், மு.நாகராஜ் மாவட்டத் துணைச் செயலாளர், வீ. முருகன் அறிவியல் மன்ற அமைப்பாளர், இரா கார்மேகம் ரிஷிவந்தியம் ஒன்றிய அமைப்பாளர், மா.குமார் ரிஷிவந்திய ஒன்றியத் தலைவர், பிரபு, ரா வீரமணி, கு.பாபா,  ரா. ஜீவா, மு. சாபா, கா.மணி கண்டன், மே. சுபாஷ் , ஏ.தினேஷ், அ. கவியரசு ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை:  அம்பேத் கரின் 66ஆவது நினைவு நாளில்   திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் நாராயணக் குப்பத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு ரா. வீரமணி  தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில்  சி. சாமிதுரை மாவட்ட அமைப்பாளர்,  மு. நாகராஜ் மாவட்டத் துணைச் செயலாளர், இரா கார்மேகம் ரிஷிவந்திய ஒன்றிய  அமைப்பாளர், சு. சிவகுமார், ரா. ரமேஷ், பா. ஜோதிபாஸ்,  நா.முருகன், சுரேஷ், ரா.வினோத், ரா. வானவராயன், பிரபு, கு. பாபா, ரா. ஜீவா, மூ. சபா, ஏ. தினேஷ்,  விக்ரம், அ.கவியரசு ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.

 

பெரியார் முழக்கம் 15122022 இதழ்

You may also like...