கோவை இராமகிருட்டிணன் இணையர் வசந்தி முடிவெய்தினார்

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் அவர்களின் இணையர் வசந்தி (வயது 59) 20.01.2023 அன்று காலை 10 மணி அளவில் உடல்நலமின்றி இயற்கை எய்தினார்.

முடிவு செய்தி அறிந்த திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி கழகப் பொருளாளர் துரைசாமி,  தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் கு. இராமகிருட்டிணன் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

கு. இராமகிருட்டிணனின் நீண்ட கால பெரியார் பணிக்கு துணை நின்ற அம்மையாரது இறுதி வணக்க ஊர்வலம் 21.01.2023 காலை 10 மணியளவில் இராமகிருட்டிணன் இல்லத்தில் இருந்து அருகில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது.

இறுதி ஊர்வலத்திலும் கழகத் தலைவர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள், தோழமை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா, அமைச்சர்

வி. செந்தில் பாலாஜி மற்றும் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் கலந்து

கொண்டனர்.

 

பெரியார் முழக்கம் 26012023 இதழ்

You may also like...