திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் விடுதலை : வழக்கு நடத்திய திராவிடர் கழக வழக்கறிஞர் திருப்பூர் பாண்டியனுக்கு கழகம் நன்றி

2014ஆம் ஆண்டு அறிவுக்கு ஒவ்வாத ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆபாசங்களை விளக்கி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், தோழர்கள் அன்னூர் முருகேசன், முடுக்கந்துறை இரவிச்சந்திரன் துண்டறிக்கை வழங்கி பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தனர்.

இந்து முன்னணி கும்பல் சிலர் துண்டறிக்கை தரக்கூடாது என ஆபாசமாகப் பேசி ரகளையில் ஈடுபட்டு மோதலில் முடிந்த நிலையில் தோழர்கள் அன்னூர் முருகேசன், முடுக்கந்துறை இரவிச்சந்திரன் ஆகியோரை மேட்டுப்பாளையம் காவல்துறை கைது செய்தது.

இந்து முன்னணியினர் சிலரையும் காவல்துறை கைது செய்தனர்.  கழகத் தோழர்கள் 15 நாள் சிறைக்கு பின் பிணையில் வெளிவந்தனர். இந்த வழக்கு 8 வருடமாக நடந்து வந்தது.

திராவிடர் விடுதலைக் கழக தோழர்களுக்காக திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் திருப்பூர் பாண்டியன் வழக்கறிஞராக தொடர்ந்து வாதாடினார். இந்நிலையில்  11.1.2023 இன்று திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.  இந்த வழக்குக்காக தொகை ஏதும் பெறாமல் கொள்கைக்காக தன் சொந்த செலவில் பணியாற்றி வெற்றி பெற்று கொடுத்த வழக்கறிஞர் பாண்டியனுக்கு கழகத் தோழர்கள் நன்றி தெரிவித்தனர்.

விடுதலையான தோழர்களையும் வழக்கறிஞர் பாண்டியனையும் பெரியார் பெருந்தொண்டர் இரும்பொறை சுந்தரமூர்த்தி, திராவிடர் கழக கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் சு. வேலுச்சாமி, தமிழ்ப்புலிகள் மூர்த்தி நேரில் சந்தித்து பாராட்டி வரவேற்றனர்.

 

பெரியார் முழக்கம் 19/01/2023 இதழ்

You may also like...