டிசம்.24 பெரியார் நினைவு நாள் : தோழர்கள் ஊர்வலம்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் சார்பாக பெரியாரின் 49 ஆவது நினைவு நாளை ஒட்டி, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 9 மணி யளவில் மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, தியாகராயர் நகர் பெரியார் சிலை, எம்.ஜி.ஆர். நகர், ஆலந்தூர், வன்னியம்பதி, மயிலாப்பூர் சென்மேரிஸ் பாலம், சுப்பராயன் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பெரியார் சிலை, உருவபடங்களுக்கு தோழர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர்.

ஒவ்வொரு பகுதியிலும் பெரியார் நினைவு மற்றும் கொள்கை முழக் கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்வுகள் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடை பெற்றது.

தலைமைக் கழக பொறுப் பாளர்கள், மாவட்டம், பகுதி கழக பொறுப்பாளர்கள் மற்றும் சென்னை கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சேலம்: சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் 49ஆவது நினைவு நாள் 24-12-2022 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராஜ் தலைமை யில் நடைபெற்றது.

மேட்டூர் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு மகள் தேன்மொழி – மணிகண்டன் இணையர்களின் பெண் குழந்தைக்கு  தே.ம. மகிழினி என பெயர் சூட்டப்பட்டு கேக் வெட்டி  இனிப்புகள்  வழங்கப்பட்டது. மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா தோழர்களுடன் கொள்கை முழக்க மிட்டனர்.

நிகழ்வில் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் சூரியகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சக்திவேல் மற்றும் நங்கவள்ளி, வனவாசி ஒன்றிய பொறுப்பாளர் களும், தோழர்களும், மேட்டூர் நகரம், மேட்டூர் சுள, கொளத்தூர் பகுதி பொறுப்பாளர்களும், தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

நங்கவள்ளி, வனவாசி, மேட்டூர் சுள, மேட்டூர், கொளத்தூர், காவலாண் டியூர் ஆகிய பகுதிகளில் தந்தை பெரியார் நினைவு நாள் சுவரொட்டி களும், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன் நூல்களை தமிழக அரசு அரசுடமையாக்கியதற்கு நன்றி தெரிவிக்கும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டது.

கள்ளக்குறிச்சி : 24.12.2022  அன்று  பெரியாரின் 49 வது நினைவு நாள் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்  காலை 09 மணியளவில் கடுவனூர் பேருந்து நிலையத்தில் பெரியாரின் உருவப்படத்துக்கு மா. குமார் ரிஷிவந்திய ஒன்றிய தலைவர் தலைமையில் மலர் தூவி மரியாதை  செய்யப்பட்டது.

காலை 11.மாணி அளவில் சங்கராபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு சி.சாமிதுரை மாவட்ட அமைப்பாளர் தலைமையில் மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இதில் மு. நாகராஜ் –   மாவட்ட துணை செயலாளர்,  வீ. முருகன் – அறிவியல் மன்ற அமைப் பாளர், இரா. கார்மேகம் – ரிஷிவந்தியம் ஓன்றிய அமைப்பாளர், மா. குமார் –  ரிஷிவந்தியம் ஓன்றிய தலைவர், கடுவனூர் ஊராட்சி மன்றத்  தலைவர் – அ. ஏழுமலை,   கு. பாபா, ர. ஜீவா, மெ. சுபாஷ், ச. விக்ரம், க.ரமணா, ர. சுபாஷ் மனோ, ச. சச்சின் ஆகிய தோழர்கள்  கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, புதூரியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு காலை 11.30.மணியளவில் திராவிடர் கழகம் ரா. சண்முகம் ஒன்றிய செயலாளர் தலைமையில் மாலை அனிவித்து மரியாதை செலுத்தப் பட்டது இதில் திராவிடர் கழகம் தோழர்கள்

கி. ஆனந்தன் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள்

சி. சாமிதுரை மு.நாகராஜ் மா. குமார் இரா.கார்மேகம் கு. பாபா ர. சுபாஷ் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.

கோவை : பெரியாரின் 49 ஆவது நினைவு நாள் கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் முதலாவதாக இரத்தினபுரி டாட்டாபாத் ஆறுமுக்கு பகுதியில்  பெரியாரின் பொன்மொழிகளுடன் பதாகை வைத்து வெங்கட் தலைமையில் கொள்கை முழக்கங்கள் எழுப்பி சிறப்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்  இரஞ்சித் உறுதிமொழி வாசித்தார். தோழர்கள் சிவராசு, புரட்சித்தமிழன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்ட துணை செயலாளர் குரு உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜீவா மன்ற செயலாளர் சாந்தகுமார் மற்றும் துணைச் செயலாளர் அன்பரசு  அலுவலகம் கொடுத்து உதவினர்.

சித்தாபுதூர் :   லோகு தலைமையில் சித்தாபுதூர் பகுதியில் பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. சித்தாபுதூர் பகுதி தோழர்கள் பெரியார் படத்தை சிறப்பாக அலங்கரித்து வைத்திருந்தனர். மாநகர தோழர்கள் கலந்து கொண்டு கொள்கை முழக்கம் எழுப்பினர்.

காந்திபுரம் :  பெரியார் சிலைக்கு தலைமை தாங்கிய மாதவன் மாலை அணிவித்தார். இசைமதி உறுதிமொழி வாசித்தார். தோழர்கள் வெங்கட், தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், மாதவன் ஆகியோர் உரையாற்றினர். தோழர்கள் கொள்கை முழக்கம் எழுப்பி நிகழ்வு சிறப்பாக நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் கோவை மாநகர கல்விக் குழுத் தலைவர் மாலதி (திமுக) மற்றும் திமுக மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.  அனைவருக்கும் புரட்சித் தமிழன் தேநீரும் சிற்றுண்டியும் வழங்கினார்.

பீளமேடு :  கிருஷ்ணன் தலைமையில் பெரியார் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. பெரியார் பிஞ்சு நிலா அறிவரசு உறுதிமொழி வாசித்தார். சூலூர் பன்னீர்செல்வம் உரையாற்றினார். ஆதரவாளர் அலெக்ஸ் அவர்களின் பெரியாரின் உழைப்பை நினைவு கூறும் கவிதையை சிவராசு வாசித்தார். கொள்கை முழக்கங்களுடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது .

சவுரிபாளையம் :   சிவராசு தலைமையில் பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. பொன்மணி உறுதிமொழி வாசித்தார்.தொடர்ந்து புரட்சித் தமிழன், நிர்மல் குமார் உரையாற்றினர். கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் தேநீரும் சிற்றுண்டியும் சிவராசு வழங்கினார்.

மேட்டுப்பாளையம் : பேருந்து நிலையத்தில் மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன் தலைமையில் பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் திராவிடர் கழகப் பொறுப்பாளர் வேலுச்சாமி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

மாநகரில் கலந்து கொண்ட தோழர்கள் சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார், வெங்கட் , கிருஷ்ணன், லோகு, மாதவன், சிவராசு, இரஞ்சித் இசைமதி, நிலா அறிவரசு, பொன்மணி, புரட்சித் தமிழன், இராஜாமணி, காளிபாளையம் கணேஷ் , அமிலா, சதீஷ், இயல், இரவி, எழிலரசன் (திமுக), பிரபு, சிவா, தமிழேந்தி, பெரியார் பிஞ்சு சுருதி, தமிழினி, அக்ரஜ், கனல்வழி.

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 49 ஆவது நினைவு நாளான 24.12.22 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் திருப்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாநகரச் செயலாளர்  மாதவன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் முகில் இராசு முன்னிலை வகித்தார்.

முதல் நிகழ்வாக கழகப் பொருளாளர்  துரைசாமி  தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்பு மாணவர் கழகத் தோழர் மகிழவன் கொள்கை முழக்கங்கள் எழுப்ப தோழர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். யாழினி, ஜாதி ஒழிப்பு உறுதிமொழியைக் கூற தோழர்கள் அனைவரும் தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கழக இணைய தளப் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டச் செயலாளர் நீதிராசன், தெற்குப பகுதி கழக செயளாளர் இராமசாமி, மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, 15 வேலம்பாளையம் பொறுப்பாளர் மாரிமுத்து, மாணவர் கழகத் தோழர் மகிழவன் தோழர்கள் அய்யப்பன், மோகன், முத்துலட்சுமி, காளியம்மாள் திலகவதி, வசந்தி, சிரிஜா, மதன், திவ்யா ஈழமாறன் பெரியார் பிஞ்சுகள் யாழினி யாழிசை, பிரபன்யா, அர்சிதா ஆசியோர் கலந்து கொண்டனர்.

 

பெரியார் முழக்கம் 29122022 இதழ்

You may also like...