சேலம் சங்கரமடத்தைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கழகத் தோழர்கள் விடுதலை

2018ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி எச்.ராஜா திரிபுராவில் லெனின் சிலையை உடைத்தது போல் தமிழ்நாட்டில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்படும் என அவர் டிவிட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

அச்சமயம் சேலம் மரவனேரியில் உள்ள சங்கரமடம் கல்வீசி தாக்கப்பட்டது. முன் விளக்குகள் உடைக்கப்பட்டன அங்கு இருந்த ஜெயேந்திரன் பதாகை கிழித்து எறியப்பட்டது.

எச்.ராஜாவின் பேச்சுக்கு எதிர்வினையாக கழகத் தோழர்கள் கோ. இராஜேந்திரன், த. மனோஜ்குமார் மற்றும் பொ. கிருஷ்ணன் ஆகியோர் இந்தத் தாக்குதலை நடத்தியாகக் கூறி 21.03.2018 அன்று அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தோழர்களைக் கைது செய்தனர்.

2018இல் இருந்து 4 ஆண்டுகள் நடந்த அவ்வழக்கில் 02.12.22 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.கழகத் தோழர்கள் அவ்வழக்கில் இருந்து குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட தோழர்கள் சேலம் பெரியார் சிலைக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தினர்.

இந்த வழக்கில் திறம்பட வாதாடிய வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபனுக்கும் திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்டச் செயலாளர் இரா.டேவிட்டுக்கும் தோழர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்கள்.

பெரியார் முழக்கம் 15122022 இதழ்

You may also like...