கழக வழக்கறிஞர் திருமூர்த்தி தந்தை இராமையா மறைவு
கழகத்தின் வழக்குகளுக்காக தொடர்ந்து வாதாடி வரும் வழக்கறிஞர் திருமூர்த்தி தந்தை இராமையா முடிவெய்தினார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், கழகத்தின் வழக்குகளுக்காகத் தொடர்ந்து வாதாடி வரும் திருமூர்த்தி அவர்களின் தந்தை கோ.இராமையா (77), 22.12.2022 அன்று கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் கிராமத்தில் முடிவுற்றார். இராமைய்யாவின் இறுதி ஊர்வலம் 23.12.2022 அன்று சிறுப்பாக்கம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு ஆகியோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். உடன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர்கள் அய்யனார், காவை ஈஸ்வரன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் இளையரசன், கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார், கடலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் உட்பட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர் திருமூர்த்தி அவர்களுக்கு கழக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரியார் முழக்கம் 05012023 இதழ்