உடல் மற்றும் கண்கள் கொடை
திராவிடர் விடுதலைக் கழக குமாரபாளையம் நகரச் செயலாளர் செ .வடிவேலு தந்தையார் செல்லமுத்து உடல் நலக்குறைவால் 28.11.2022 மதியம் அன்று சுமார் 2.45 மணியளவில் இயற்கை எய்தினார். அவர் இறந்த ஆறுமணி நேரத்திற்குள் அவரின் இரண்டு கண்களும் பார்வை இழந்தவர்களுக்கு பார்வை கிடைக்கும் வகையில் ஈரோடு அரசன் கண் மருத்துமனைக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்டது.
அவரின் உடல் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவும் விதமாக கொடையாக நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் பொறுப்பாளர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது அங்கிருந்து மருத்துவப் பேராசிரியர்கள் மிகுந்த மகிழ்வுடன் பெற்று கொண்டது மட்டுமில்லாமல் இது தான் இந்த மருத்துவக் கல்லூரிக்குக் கிடைத்த முதல் உடற்கொடை ஆகும். தொடர்ச்சியாக பெரியார் இயக்கத்தை சார்ந்தவர்கள் இப்பணியைச் செய்வது பாராட்டத்தக்கது என்று பாராட்டினார்.
தோழர் வடிவேல் மட்டும்தான் அவருடைய குடும்பத்தில் பெரியாரிய கொள்கையை ஏற்றுக் கொண்டவர். இருப்பினும் வடிவேல் மற்றும் கழகத் தோழர்களின் வேண்டு கோளையேற்று அவருடைய குடும்பத்தினர் முன்வந்து உடல் மற்றும் கண்களை கொடையாகக் கொடுத்துள்ளது மிகுந்த பாராட்டத்தக்க முன்னுதாரணமான செயல் ஆகும்.
உடற் மற்றும் கண்கள் கொடை அளிப்பதற்கு மருத்துவமனைகளைத் தொடர்பு கொண்டு அதற்குரிய பணிகளை குமாரபாளையம் திவிக நகர தலைவர் தண்டபாணியும் நாமக்கல் மாவட்ட திவிக தலைவர் சாமிநாதனும் மேற்கொண்டனர்.
பெரியார் முழக்கம் 09022023 இதழ்