Category: வட சென்னை

கழகத்தின் தெருமுனைக் கூட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு! சேலம், திண்டுக்கல், சென்னையில் முழுவீச்சில் பரப்புரை!

கழகத்தின் தெருமுனைக் கூட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு! சேலம், திண்டுக்கல், சென்னையில் முழுவீச்சில் பரப்புரை!

சென்னை : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரைக் கூட்டங்கள் வட சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை, சைதாப்பேட்டை கங்கையம்மன் கோயில் தெரு, சேத்துப்பட்டு அம்பேத்கர் திடல், மங்களாபுரம், ஓட்டேரி அஞ்சு லைட், ஜாயின்ட் அலுவலகம், அயன்புரம் உள்ளிட்ட இடங்களில் பிப்ரவரி 20 முதல் பிப்ரவரி 24 வரை நடைபெற்றது. உமாபதி – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி மற்றும் ஈரோடு பேரன்புவின் ராப் இசை பாடல்களுடன் ஒவ்வொரு கூட்டமும் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், அருண் கோமதி, பெரியார் நம்பி, மக்கள் அதிகாரம் காமராஜ், துணைவேந்தன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். மேற்கண்ட கூட்டங்களை வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி, ஏசு குமார், ராஜன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். திண்டுக்கல் : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!...

களைகட்டிய பொங்கல் நிகழ்ச்சிகள் சென்னையில் மேயர் பிரியாராஜன் பங்கேற்பு

களைகட்டிய பொங்கல் நிகழ்ச்சிகள் சென்னையில் மேயர் பிரியாராஜன் பங்கேற்பு

திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 24-ஆம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் 07.01.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை திமுக இளைஞரணி மேற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் 13.01.2024, சனிக்கிழமை நடைபெற்றது. “மாணவக் கலைஞர்கள் குழுவின்” பறையிசை – ஒயிலாட்டம் – மரக்கால் ஆட்டம் – தீச்சிலம்பம் – மயிலாட்டம் – மாடாட்டம் – புலி ஆட்டம், Dude’z in Madras குழுவின் ராப் இசை, U Won Dance Crewe பகுதி மாணவிகளின் நடனம், கானா சுதாகர்‌ – புரட்சிமணியின் மக்களிசை சங்கமம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரிசளிப்பு விழாவுக்கு மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமை தாங்கினார். இராஜேசு வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் வணக்கத்துக்குரிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, 119வது வார்டு மாமன்ற...

மொழிப்போர் தியாகிகள் நினைவிடங்களில் மரியாதை

மொழிப்போர் தியாகிகள் நினைவிடங்களில் மரியாதை

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளான ஜனவரி 25ஆம் தேதி அன்று சென்னை மூலக்கொத்தலத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் நடராசன் – தாளமுத்து – தருமாம்பாள் அம்மையார் ஆகியோரின் நினைவு இடங்களில் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் இரவி பாரதி, வடசென்னை துரை உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்

வரதம்மாள் படத்திறப்பு நிகழ்வு

வரதம்மாள் படத்திறப்பு நிகழ்வு

சென்னை மாவட்டக் கழகத்தின் வட சென்னை மாவட்ட அமைப் பாளர் தட்சிணாமூர்த்தி தாயார் வரதம்மாள் கடந்த 28.10.2022 அன்று முடிவெய்தினார். வரதம்மாள் படத் திறப்பு நிகழ்வு 20.11.2022 அன்று மாலை 6:30 மணியளவில் சேத்துப்பட்டு தட்சிணாமூர்த்தி இல்லத்தில் நடை பெற்றது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். தொடர்ந்து, தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், திமுக மாவட்ட பிரதிநிதி மாதவன், அம்பேத்வளவன் – விசிக மேற்கு மாவட்ட செயலாளர், சேத்துப்பட்டு இராசேந்திரன் உள்ளிட்டோர் நினைவேந்தல் உரையாற்றினர். பெரியார் முழக்கம் 24112022 இதழ்

கழக ஏடுகளுக்கு நன்கொடை

கழக ஏடுகளுக்கு நன்கொடை

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட வடசென்னை கழக  இணையர்கள் தினகரன்-ஜெயந்தி ஆகியோர் குழந்தைப் பிறந்த மகிழ்வாக கழக ஏடுகளின் வளர்ச்சிக்கு ரூ.10,000/-த்தை பெரியார் பிறந்த நாளான செப். 17 அன்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் வழங்கினர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 03102019 இதழ்

தலைநகரில் தொடங்கி வைத்தது திராவிடர் விடுதலைக் கழகம் மணியம்மையார் நூற்றாண்டு விழா; மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்

தலைநகரில் தொடங்கி வைத்தது திராவிடர் விடுதலைக் கழகம் மணியம்மையார் நூற்றாண்டு விழா; மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு 2019 மார்ச் 10இல் தொடங்குகிறது. மார்ச் 9ஆம் தேதியன்றே சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாட்டில் அன்னையின் நூற்றாண்டு விழாவை முதன்முதலாக தொடங்கி வைத்துள்ளது. வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு மற்றும் மகளிர் தின விழா, பெரம்பூர் பாரதி சாலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இராஜி தலைமை தாங்கினார். இரண்யா வரவேற்புரையாற்றினார். தோழர்கள் தேவி, ஜெயஸ்ரீ, வெண்ணிலா, சங்கவி முன்னிலை வகித்தனர். ‘விரட்டு’ கலைக் குழுவினரின் பறை இசை, நாடகம், கலை நிகழ்வுகளோடு நிகழ்ச்சிகள் நடந்தன. தமிழ்நாடு அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, மணிமேகலை, புதிய குரல் நிறுவனர் ஓவியா, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். அன்னை மணியம்மையாரின் தியாக வாழ்வு,  எளிமை, பெரியாரை 95 ஆண்டுகள் வரை அவர் உடல்நலன் பேணிக் காத்த அர்ப்பணிப்பு, இராவண லீலா...

அன்னை மணியம்மையார்  நூற்றாண்டு விழா மற்றும் மகளிர் தின பொதுக்கூட்டம் பெரம்பூர், சென்னை 09032019

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா மற்றும் மகளிர் தின பொதுக்கூட்டம் பெரம்பூர், சென்னை 09032019

“அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா” மற்றும் “மகளிர் தின பொதுக்கூட்டம்.” வட சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்…. நாள் : 09.03.019. சனிக்கிழமை நேரம் : மாலை 5 மணி இடம் : பாரதி சாலை, பெரம்பூர், சென்னை. சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் ஓவியா, புதிய குரல். தோழர் சிவகாமி, தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். தோழர் மணிமேகலை. “விரட்டு” கலைக்குழுவினரின் பறையாட்டம், வீதி நாடகம் கலை நிகழ்ச்சி நடைபெறும்

கழகத் தலைவர் பங்கேற்றார் இந்திய தேசிய லீக்-கின் பெரியார் கருத்தரங்கம்

கழகத் தலைவர் பங்கேற்றார் இந்திய தேசிய லீக்-கின் பெரியார் கருத்தரங்கம்

03.10.2018 அன்று மாலை 4.30 மணியளவில் செங்குன்றம் மார்கெட், முசாபர் பங்களா பகுதியில் பெரியார் கருத்தரங்கம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் சுந்தரவள்ளி, பெரியார் சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னுரை வழங்கிய இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் அலீம் அல்புகாரி, “பெரியார் அவர்களோடு இசுலாமிய சமுதாய தலைவர்களும் மக்களும் முன்பு மிகவும் இணக்கமாக பயணித்ததை குறிப்பிட்டு தற்போது இசுலாமிய சமுதாயம் பெரியாரிடம் இருந்து சற்று விலகி இருப்பதை சுட்டிக்காட்டி, கடவுள் மறுப்பை மட்டுமே காரணம் காட்டி பெரியாரிடம் இருந்து இசுலாமிய சமுதாயம் தள்ளி இருக்கவேண்டியதில்லை பெரியாரிடம் கற்றுக்கொள்ளவும், பின்பற்றவும் தங்கள் சமுதாயத்திற்கு நிறைய இருக்கிறது” என்று குறிப்பிட்டார். “இன்றைய காலகட்டத்திற்கு பெரியாரின் மிக அவசியத் தேவையை தங்கள் இசுலாமிய சமுதாய மக்களுக்கு எடுத்துச்சொல்லவே இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்ததாகவும்” தோழர் அலீம் அல்புகாரி குறிப்பிட்டார். பெரியார் முழக்கம் 25102018 இதழ்

வடசென்னை  கழகம் நடத்திய கருத்தங்கம்

வடசென்னை கழகம் நடத்திய கருத்தங்கம்

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளில் அடக்குமுறைக்கு எதிரான கருத்தரங்கம் 22.09.2018 அன்று மாலை 6 மணிக்கு தாய் ரமாபாய் பவன், பெரம்பூரில் தட்சணாமூர்த்தி முன்னிலையில், நா.பாஸ்கர் வரவேற்புரையாற்ற, இராஜீ தலைமையில் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி நிகழ்வை ஒருங் கிணைத்தார். இந்த கருத்தரங்கத்தில் “பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்” என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆய்வுரையாற்றினார். “பா.ஜ.க ஆட்சியில் சந்திக்கும் அடக்குமுறைகள்” என்ற தலைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் .ஆளுர் ஷாநவாஸ்  சிறப்புரையாற்றினார். இறுதியாக வட சென்னை மாவட்டத் தலைவர் ஏசுகுமார் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். பெரியார் முழக்கம் 27092018 இதழ்

சென்னை பெரம்பூரில், ”அடக்குமுறைக்கு எதிரான கருத்தரங்கம்.”

சென்னை பெரம்பூரில், ”அடக்குமுறைக்கு எதிரான கருத்தரங்கம்.”

சென்னை பெரம்பூரில், ”அடக்குமுறைக்கு எதிரான கருத்தரங்கம்.” தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு…. நாள் : 22.09.2018 (சனிக்கிழமை) நேரம் : மாலை 6 மணி இடம் : தாய் ராமாபாய் பவன்,சடையப்பதாஸ் தெரு, பெரம்பூர். கருத்துரை: ‘தோழர்.விடுதலை இராசேந்திரன்’ பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் ‘தோழர்.ஆளூர் ஷாநவாஸ்’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #வாருங்கள்_தோழர்களே.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு :7299230363

கழகத் தோழர் ராஜி ஆங்கில பயிற்சிப் பள்ளி திறப்பு விழா

கழகத் தோழர் ராஜி ஆங்கில பயிற்சிப் பள்ளி திறப்பு விழா

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வடசென்னை மாவட்டக் கழகத் தோழர் ராஜி-சாரதி இணையர் களின் ‘கிருஷ்ணா அகாடெமி’ என்ற ஆங்கில வழி பயிற்சிப் பள்ளியை 3.5.2018 அன்று தொடங்கினார். (கிருஷ்ணா என்பது ராஜி அவர்களின் ஆசிரியர் பெயர்) திறப்பு விழா நிகழ்வில் தென் சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா. வேழவேந்தன், தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார், வடசென்னை மாவட்டத் தலைவர் ஏசுகுமார் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். திறப்பு விழா நிகழ்வாக பத்ரி நாராயணன் நினைவுச் சுவடுகள்’ நூலை மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன் வழங்கினார்.  விழா மகிழ்வாக தோழர்கள்  ராஜி-சாரதி, கழக வார ஏட்டிற்கு ரூ.2000/- நன்கொடை வழங்கினர். பெரியார் முழக்கம் 10052018 இதழ்

வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் !

வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் !

வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் ! கலந்துரையாடல் கூட்டம் 25.02.2018 ஞாயிற்றுகிழமையன்று மாலை 6.00 மணியளவில் பெரம்பூரில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட செயலாளர் தோழர் இரா. செந்தில் குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தோழர் ஏசு குமார் முன்னிலை வகிக்க, தோழர்கள் நா.பாஸ்கர், நாகேந்திரன் , ராஜீ, சங்கீதா, சங்கவி , தினேஷ், இரமேசு, பிரசாந்த், மோகன்ராஜ், சதிசு, சரவணன், தீபக், இளவரசன், சாரதி, செல்வம் என அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு அவரவர் கருத்துகளை முன் வைக்க, அத்தனையும் ஆலோசிக்கப் பட்டது. வரும் நாட்களில் வடசென்னை மாவட்ட திவிக செயல்பாடுகள் குறித்து தோழர்களின் கருத்தை கவனத்தில் ஏற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது. வரும் ஏப்ரலில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. துண்டறிக்கைக்கு பதிலாக டாக்டர் அம்பேத்கரின் சட்டங்களால் நாம் பெறும் பலன்களை சிறு புத்தகமாக...

புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல் துறையில் கழகத்தின் சார்பில் சென்னையில் மனு !

புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல் துறையில் கழகத்தின் சார்பில் சென்னையில் மனு !

புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல் துறையில் கழகத்தின் சார்பில் சென்னையில் மனு ! 08.03.2018 அதிகாலை திருவெற்றியூர் கிராம தெருவில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை மீது சில சமூக விரோதிகள் சிவப்பு ( காவி ) நிற பெயின்டை ஊற்றி அவமதித்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு திரிபுராவில் தோழர். லெனின் சிலையை உடைத்த போது, தமிழக பாஜக தேசிய செயலர் H .ராஜா சமூக வலைதளத்தில் அதை ஊக்கப்படுத்தியும் தமிழகத்திலும் இதே போல் ஈவெரா ( தந்தை பெரியார்) உடைபடும் என பதிந்ததால் தமிழகமெங்கும் எதிர்ப்பு போராட்டங்கள் வீரியமானது. அதன் தொடர்ச்சியாய் திருப்பத்தூரிலும், திருவெற்றியூரிலும் மனித விடுதலைக்காக உழைத்த தலைவர்கள் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தியும் டாக்டர் அம்பேத்கர் சிலை பெயின்ட் ஊற்றியும் அவமதிக்கப்பட்டுள்ளது. இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு காவல்துறை தலைமை ஆணையரிடம் மனு தரப்பட்டது . திவிக...

வடசென்னை மாவட்ட  கலந்துரையாடல்

வடசென்னை மாவட்ட கலந்துரையாடல்

வடசென்னை மாவட்ட  திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 25.02.2018  அன்று மாலை 6  மணியளவில் பெரம்பூரில் நடை பெற்றது. கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட செயலாளர் இரா. செந்தில் குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஏசு குமார் முன்னிலை வகிக்க,  நா.பாஸ்கர், நாகேந்திரன் , ராஜீ, சங்கீதா, சங்கவி , தினேஷ், இரமேசு, பிரசாந்த், மோகன்ராஜ், சதிசு, சரவணன், தீபக், இளவரசன், சாரதி, செல்வம் என அனைத்துத் தோழர்களும் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர். ஏப்ரலில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. டாக்டர் அம்பேத்கரின் இட ஒதுக்கீடு சட்டங்களால் கிடைத்த பலன்களை சிறு நூலாக பத்தாயிரம் பிரதிகள் தயாரித்து மக்களிடமும் கல்லூரி மாணவர்களிடமும் பிரச்சாரமாக கொண்டு சேர்ப்பதென முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வட சென்னையில் தெருமுனைக் கூட்டங்கள், கருத்தரங்குகள், பரப்புரைப் பயணம் நடத்துவதென முடிவு செய்யப் பட்டது. நா. பாஸ்கர் நன்றி கூறினார் ....

சென்னை கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு அகில இந்திய தேர்வுகள் தமிழகத்தை வடவர் மயமாக்குகின்றன

சென்னை கூட்டத்தில் கொளத்தூர் மணி பேச்சு அகில இந்திய தேர்வுகள் தமிழகத்தை வடவர் மயமாக்குகின்றன

வட சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் சார்பில் 10.2.2018 சனி மாலை 6 மணியளவில் சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரில், ‘வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’ எனும் தலைப்பில் பொதுக் கூட்டம் நடந்தது. காவை இளவரசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தினார். தொடர்ந்து பெ. முத்துக்குமார்  தலைமையில் பொதுக் கூட்டம் தொடங்கியது. ‘கடலோர மக்கள் களம்’ அமைப்பின் தலைவர் தோம. ஜான்சன், தமிழ் தேசியக் கட்சித் தலைவர் ஆ.கி. ஜோசப் கென்னடி, வழக்கறிஞர் துரை. அருண் ஆகியோர் உரையைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினர். விடுதலை இராசேந்திரன் தனது உரையில், தமிழர்களையும் தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் வஞ்சிப்பது நடுவண் அரசும், பார்ப்பனர்கள் உயிர்ப்புடன் இப்போதும் பாதுகாத்துவரும் பாசிசத் தத்துவமான பார்ப்பனியமும் தான் என்று எடுத்துரைத்து வைரமுத்துவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஆண்டாள் சர்ச்சை, தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த சங்கராச்சாரி, திராவிட ஆட்சிகளை வீழ்த்த...

கூட்ட மேடையில் தமிழர் 
‘பீப்’ பகோடா

கூட்ட மேடையில் தமிழர் 
‘பீப்’ பகோடா

திருவொற்றியூர் பொதுக் கூட்ட மேடையில் ஒரு மேஜை மீது ஸ்டவ் அடுப்பும், அதற்கு மேல் எண்ணெய் சட்டியும் வைக்கப்பட்டு, கீழே அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட் டிருந்தது. மோடியின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் “தமிழர் பீப் பகோடா  இங்கு விற்பனைக்குக் கிடைக்கும். உரிமையாளர் ஜெயா, எம்.ஏ., எம்.பி.எல்., பி.எச்டி.” என்று எழுதப்பட் டிருந்தது. பகோடா விற்று நாளொன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கும் இளைஞர்கள்கூட எங்கள் ஆட்சியின் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பயன் பெற்றவர்கள்தான் என்று பிரதமர் மோடி, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியை கிண்டல் செய்து, இந்தக் காட்சியை மேடையில் தோழர்கள் அரங் கேற்றியிருந்தனர். கூட்டத்தினர் இதை மிகவும் பாராட்டி இரசித்தார்கள். பெரியார் முழக்கம் 15022018 இதழ்

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு விளக்கப் பொதுக்கூட்டம் திருவெற்றியூர் 10022018

திருவெற்றியூர் பெரியார் நகரில் … வரும் சனியன்று ( 10 : 02 : 2018 ) மாலை 5 : 30 மணியளவில் …. ” வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு ” விளக்கப் பொதுக்கூட்டம் பெரியாரின் உழைப்பால் பலன்பெற்ற சிலர் புறக்கணித்தாலும், பலர் தான் பெற்ற பலன் உணர்ந்து கிள்ளியாவது தருகிறார்கள் . ஆனால் இன்னமும் விடியல் கிடைக்காமல் வர்ணத்தாலும், வர்க்கத்தாலும் ஒடுக்கப்பட்ட வீதிக்கடை மக்கள் … தலைவன் பெரியாரின் கூட்டம் என்றவுடன் அள்ளித் தருகிறது. அவர்களின் கண்களில் தேங்கி நிற்கும் விடியல் வேட்கைக்கு இந்த கருஞ்சட்டை கூட்டம் பணி செய்து கிடப்பதையே பதிலாய் தரும் … மக்களிடையே நாம் செய்தியோடு நிற்கையில் தான் உணர்கிறோம் . எங்கள் மகத்தான தலைவர் பெரியாரின் உழைப்பையும், அது நமக்கு பெற்றுத் தரும் மரியாதையும், நம்பிக்கையையும். வாருங்கள் தோழர்களே … சூழ்ந்து வரும் மத இருளை, பெரியார் ஒளி கொண்டு விலக்குவோம் … திராவிடர்...

கழக சார்பில் தமிழர் திருநாள் விழாக்கள்

கழக சார்பில் தமிழர் திருநாள் விழாக்கள்

திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பல்வேறு பகுதிகளில் கழகத் தோழர்கள் தமிழர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு விழாக்களை எழுச்சியுடன் நடத்தினர். சென்னையில் கழகம் நடத்தும் 18ஆம் ஆண்டு பொங்கல் விழா வழக்க மான உற்சாகம், கலை நிகழ்வுகளுடன் ஜன.12ஆம் தேதி இராயப்பேட்டை ‘பத்ரி நாராயணன்’ படிப்பகம் எதிரே வி.எம். சாலையில் நடந்தது. அதிர்வு குழுவினர் பறை இசை பழந்தமிழர்க் கலை நிகழ்வுகள், கிராமியப் பாடல்கள், ஜாதி ஒழிப்புப் பாடல் களோடு சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினர். அதைத் தொடர்ந்து ‘அருண் டிரம்ஸ்’ குழுவினரின் கானா மற்றும் திரையிசை நிகழ்ச்சி நடந்தது. பெரியார், அம்பேத்கர் பாடல்களும், நீட் எதிர்ப்பு, அனிதாவுக்கு வீர வணக்கம் செலுத்தும் கானா பாடல் களும் பாடப்பட்டன. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் என்று அனைத்துக் கட்சிகளையும் கழகத் தோழர்கள் ஒருங்கிணைத்து இந்த விழாவை நடத்தி வருகிறார்கள். பகுதி வாழ் குழந்தைகள், சிறுவர்கள், வெவ்வேறு வேடங்களில் பங்கேற்றுப் பேசும் மாற்றுடைப்...

தமிழக முதலமைச்சர் இல்லம் முற்றுகைப் போராட்டம் ! சென்னை 25112017

தமிழக முதலமைச்சர் இல்லம் முற்றுகைப் போராட்டம் ! சென்னை 25112017

தமிழக முதலமைச்சர் இல்லம் முற்றுகைப் போராட்டம் ! நாள் : 25.11.2017 சனிக் கிழமை நேரம் : காலை 11 மணி இடம் : கிரீன்வேஸ் சாலை, சென்னை. ஆயிரம் விளக்கு, திடீர் நகர் போன்ற பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் ஏழை மக்களை கார்ப்ரெட் நலனுக்காக கட்டாய வெளியேற்றம் செய்யும் தமிழக அரசை கண்டித்து. அனைத்து இயக்க தோழர்களும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்களும் ஒன்றிணைந்து… நாளை 25.11.2017 காலை 11 மணிக்கு கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள தமிழக முதலமைச்சர் இல்லம் முற்றுகைப் போராட்டம். தொடர்புக்கு : தோழர்.இரா.உமாபதி 7299230363 மாவட்டத் தலைவர் திராவிடர் விடுதலைக்கழகம்.

அக் 7 சென்னையில் பெண் போராளிகள் ஒரே மேடையில் போர் முழக்கம்!

தோழர்களே தலைநகர் நோக்கி திரளுவீர்! ஜாதி ஒழிப்புக்களம் – தமிழ்நாட்டில் சூடேறி வருகிறது. இளம் பெண் தோழர்கள் பெண்ணுரிமையோடு ஜாதி ஒழிப்பையும் இணைத்து களமிறங்கியிருப்பது மகத்தான திருப்பம். தமிழ்நாட்டின் ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை மதவெறி எதிர்ப்பு, சமூகநீதிப் போராட்டக் களம், இளைஞர்களிடம் வந்து சேர்ந்து விட்டது.அவர்களால்தான் அதை சாதித்துக் காட்டவும் முடியும். தமிழ் நாட்டில் ஜாதி ஒழிப்புக்கு எதிர்நீச்சல் போட்டு களம் இறங்கியிருக்கும் பெண் போராளிகளை ஒரே மேடையில் பங்கேற்கவிருக்கும் நிகழ்வினை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது – இது காலத்தின் தேவை! அக். 7ஆம் தேதி மாலை சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே நிகழவிருக்கும் இந்த சங்கமம், ஜாதி ஒழிப்பு பெண்ணுரிமைக்கான போராட்டக் களத்துக்கு அறைகூவல் விடுக்கும் ஒரு திருப்பு முனையான நிகழ்வு. ‘ஜாதியற்றவளின் குரல்’ நூலாசிரியர் ‘மஞ்சள்’ நாடகத்துக்கு கூர்மையான உரையாடல்களைத் தீட்டியவருமான – – போராளி ஜெயராணி ‘கக்கூஸ்’ ஆவணப் படத்தை உருவாக்கி, மலம்...

ஜாதி ஒழிப்பு போராளி அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம் பெரம்பூர் 23042017

“ஜாதி ஒழிப்புப் போராளி” டாக்டர்.B.R.அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம்… கருத்துரை : தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக ‘அம்பேத்கரை திசை திருப்பும் சதி’ எழுத்தாளர். வே.மதிமாறன் ‘அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு தத்துவம்’ நாள் : 23.04.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடம் : தாய் ராம்பாய் பவன், 37, சடையப்ப தாஸ் தெரு, பெரம்பூர் பெரம்பூர் மேம்பாலம் அருகில். அம்பேத்கரின் அறிய வேண்டிய சிந்தனைகள்…… ஆழமான புரிதலுக்கு அனைவரையும் அழைக்கிறோம்……. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்குள்ளான மக்களுக்கு சென்னை மாவட்ட கழகம் நிதியுதவி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்குள்ளான மக்களுக்கு சென்னை மாவட்ட கழகம் நிதியுதவி

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடந்த மாணவர்கள் எழுச்சியை அடக்கும் பொருட்டு தமிழக காவல்துறையின் காட்டுமிராண்டி தன தாக்குதலுக்கு ஆளான நடுக்குப்பம், ரூதர்புரம், மாட்டாங்குப்பம் பகுதி தலித் மக்களுக்கு அனைத்திந்திய மாணவர் அமைப்பு சார்பாக பொருளுதவியும், நிதியுதவியும் மாணவர் அமைப்பு நிர்வாகி தோழர் அன்பு தலைமையில், பேராசிரியர் ராமு. மணிவண்ணன் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் பேராசிரியர் ராமு. மணிவண்ணன் மற்றும் தமிழ்நாடு மாணவர் அமைப்பு சென்னை மாவட்ட செயலாளர் தோழர். ஜெயபிரகாஷ், திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் தோழர். இரா. உமாபதி, திவிக தோழர்.இரா. செந்தில் குமார் (FDL) கலந்துக் கொண்டு உதவிகளை வழங்கினர். மாணவர் அமைப்பை சார்ந்த தோழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை கள ஆய்வு செய்து, அவர்களில் அதிகம் பாதிக்கப் பட்டிருந்த முப்பது குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு பொருளுதவியும், மருத்துவ உதவி தேவைப்பட்ட மூன்று குடும்பத்தினருக்கு பண உதவியும் வழங்கினர். உதவிகள் பெற்ற...

சென்னை மாவட்ட கலந்துரையாடல் 30062016

30062016 அன்று மாலை 5:30 மணிக்கு பொதுச்செயலாளர் தலைமையில் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் துவங்கியது . சென்னை மாவட்ட செயலாளர் தோழர். இரா .உமாபதி உரையை துவங்கி வைக்க , அதைத் தொடர்ந்து மாவட்ட மாணவரணி செயலாளர் ஜெயபிரகாசு தலைமை செயலவையின் தீர்மாணத்தை வாசித்தார். அதை தொடர்ந்து தலைமை நிலைய செயலாளர் தோழர் .தபசி குமரன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தோழர் . அன்பு தனசேகரன், தோழர் அய்யனார், வழக்கறிஞர் தோழர். துரை அருண் போன்ற நிர்வாகிகளும் , மாவட்ட தோழர்களும் அவர்களின் கருத்தை தொடர்ச்சியாக பதித்தனர் . சமஸ்கிருத திணிப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் பற்றியும், பிரச்சார பயணம் பற்றியும் , அடுத்தக்கட்ட மாவட்ட செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர் . நிகழ்வின் முடிவாக பொதுச்செயலாளர் கேள்விகள் அனைத்திற்கும் விளக்கமாக நீண்ட உரையாற்றினார் . அவரின் உரை தோழர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தரும் விதமாக அமைந்தது ....

பா.ஜ.க.வின் கல்யாண ராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு !

பா.ஜ.க.வின் கல்யாண ராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு ! பாஜக பொறுப்பாளர் கல்யாண ராமன் தொடர்ச்சியாக சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும்,கலவரத்தை தூண்டும் விதமாகவும்,பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் விதமாகவும் பேசியும்,சமூக வலை தளங்களில் எழுதி வருவதற்க்காகவும், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை ஒருமையிலும், திவிக தோழர்களை கும்பல்கள் என்றும் முகநூலில் பதிவுசெய்த பாஜக கல்யாண ராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று (10.02.2016) காலை பதினோரு மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அப்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்த திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி அவர்கள் ”இதுபோன்ற நடவடிக்கைகளை கல்யாணராமன் போன்ற பாஜகவினர் தொடர்ந்தால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்’ என தெரிவித்தார்.

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – சென்னை புகைப்படங்கள்

சென்னையில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் நேற்று 01.02.2016 திங்கள் மாலை 3.00 மணியளவில் ரோகித் வெமுலாவின் மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் . ஒத்த கருத்துள்ள அமைப்புகளோடு இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் திவிக வழக்கறிஞர்கள் அருண்,திருமூர்த்தி, ஊடகவியலாளர் தோழர் கவின் மலர், வாலாசா வல்லவன் மா.பெ.பொ.க, குமார் த.பெ.தி.க., தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்கம் அரக்கோணம், வே.மதிமாறன் எழுத்தாளர், SDPI தலைவர் தேஹலான் பாகவி, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தோழர் ம.வேழவேந்தன் நன்றி கூற மாலை ஆறரை மணியளவில் ஆர்ப்பாட்டம் முடிவடைந்தது.