Category: சென்னை

‘நான் கருஞ்சட்டைக்காரன்’

‘நான் கருஞ்சட்டைக்காரன்’

நான் கருஞ்சட்டைக்காரன்’ பொங்கல் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் 13.1.2013 அன்று சென்னை மாவட்டக் கழக சார்பில் நடந்த தமிழர் திருநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. இளைஞரணித் தலைவர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுப் போட்டியில் வெற்றியடைந்தவர்களுக்கு பரிசுகளை வழங்கியதோடு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள்’ நூலை வெளியிட்டார். அவர் நிகழ்த்திய உரை: “நான் இங்கு வெள்ளை சட்டை அணிந்து வந்துள்ளேன். ஆனால், எனக்கு கருப்பு சட்டை அணிவது தான் மிகவும் பிடித்த ஒன்று. நான் நிறத்திற்காகக் கூறவில்லை; கருத்திற்காக கூறுகிறேன். அதை உணர்ந்து தான் அன்போடு என்னை உரிமையோடு இந்த தமிழர் திருநாள் நிகழ்ச்சிக்கு அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் அழைத்திருந் தார்கள். நானும் அதே எண்ணத்தோடு தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களோடு இந்த பொங்கல் திருநாளை கொண்டாடு வதற்காக இங்கு வந்திருக்கிறேன்....

டிசம்.24 பெரியார் நினைவு நாள் : தோழர்கள் ஊர்வலம்

டிசம்.24 பெரியார் நினைவு நாள் : தோழர்கள் ஊர்வலம்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் சார்பாக பெரியாரின் 49 ஆவது நினைவு நாளை ஒட்டி, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 9 மணி யளவில் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தியாகராயர் நகர் பெரியார் சிலை, எம்.ஜி.ஆர். நகர், ஆலந்தூர், வன்னியம்பதி, மயிலாப்பூர் சென்மேரிஸ் பாலம், சுப்பராயன் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பெரியார் சிலை, உருவபடங்களுக்கு தோழர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். ஒவ்வொரு பகுதியிலும் பெரியார் நினைவு மற்றும் கொள்கை முழக் கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்வுகள் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடை பெற்றது. தலைமைக் கழக பொறுப் பாளர்கள், மாவட்டம், பகுதி கழக பொறுப்பாளர்கள் மற்றும் சென்னை கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். சேலம்: சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் 49ஆவது நினைவு நாள் 24-12-2022 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்டச்...

அம்பேத்கர் நினைவு நாள்: கழக சார்பில் சிலைகளுக்கு மாலை

அம்பேத்கர் நினைவு நாள்: கழக சார்பில் சிலைகளுக்கு மாலை

அம்பேத்கர் நினைவுநாளை யொட்டி கழக சார்பில் பல்வேறு இடங்களில் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சென்னை : புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி, மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் அடையாறு அம்பேத்கர் மணிமண்டபத்தில் காலை 9:30 மணியளவில், இரண்யா  கொள்கை முழக்கங்களை எழுப்பி  மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு, கிருத்திகா மாலை அணிவித்தார். இறுதியாக, இராயப்பேட்டை வி.எம். தெரு படிப்பகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர்  படத்திற்கு தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மாலை அணிவித்தார். தலைமைக் கழகப் பொறுப் பாளர்கள், மாவட்டப் பொறுப் பாளர்கள், பகுதி கழகப் பொறுப் பாளர்கள் உட்பட கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர். விழுப்புரம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் 66ஆவது நினைவு நாளை யொட்டி விழுப்புரம் அரசு மருத்து வமனை எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அனிவித்து கொள்கை முழக்கம் உறுதியேற்பு...

வயலூர் முருகன் கோவிலில் பார்ப்பனர்கள் அடாவடி; கழகம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வயலூர் முருகன் கோவிலில் பார்ப்பனர்கள் அடாவடி; கழகம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வயலூர் முருகன் கோவிலில், அனைத்து ஜாதி அர்ச்சகர் பணி நியமன ஆணை பெற்ற அர்ச்சகர்களை கருவரைக்குள் நுழைய விடாமல் தடுக்கும் பார்ப்பன அர்ச்சகர்களைக் கண்டித்தும், மதுரை உயர்நீதிமன்றத்தில் அனைத்து ஜாதி அர்ச்சகருக்கு எதிராக பார்ப்பன அர்ச்சகரின் மகன் தொடர்ந்த வழக்கில் நியாயமான தீர்ப்பை கோரியும், சிம்சன் பெரியார் சிலை அருகில், 23.11.2022 மாலை 3:30 மணியளவில் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களுக்குப் பேடியளித்த மாவட்ட செயலாளர் இரா.உமாபதி கூறுகையில், “பெரியாரின் நெஞ்சில் தந்தை முள்ளான, அனைத்து  ஜாதி அர்ச்சகர் சட்டத்திற்கு பணி நியமனத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியது 2000 ஆண்டு கருவரைத் தீண்டாமையை உடைத்தது. இருந்தாலும், சில இடங்களில் பார்ப்பன அர்ச்சகர்கள் அனைத்து ஜாதி அர்ச்சர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். மேலும், பார்ப்பன அர்ச்சகரின் மகன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வழக்கே நியாமானது இல்லை. நாளை...

கழகம் முன்னெடுத்த சட்ட எரிப்பு நாள் நிகழ்வுகள் சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் உறுதி ஏற்பு

கழகம் முன்னெடுத்த சட்ட எரிப்பு நாள் நிகழ்வுகள் சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் உறுதி ஏற்பு

  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நவம்பர் 26 அன்று நடைபெற்ற சட்ட எரிப்பு நாள் பொதுக் கூட்டங்கள் வீர வணக்க நிகழ்வுகளின் தொகுப்பு. சென்னை : திராவிடர் இயக்கத்தின் மிக முக்கிய போராட்டமான ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை தோழர்கள் கொளுத்தி இந்திய ஒன்றியத்தை திரும்பி பார்க்க வைத்தப் போராட்டம் ‘சட்ட எரிப்புப் போராட்டம்’ ஆகும். இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில், பதாகைகள் சட்ட எரிப்பு போராளிகளை நினைவுகூரும் வகையிலும், வீரவணக்கம் செலுத்தும் வகையிலும் அமைக்கப்பட் டிருந்தது.  26.11.2022 அன்று காலை 8 மணியளவில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின்பு சட்ட எரிப்பு நாள் குறித்து உரையாற்றினார். முன்னதாக, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி  ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ வாசிக்க கழகத் தோழர்கள் உறுதியெடுத்தனர். ஜலகண்டாபுரம் : 26.11.2022 மாலை 6.00 மணியளவில் ஜலகண்டாபுரம் பேருந்து...

வள்ளலார் வரலாறு திரும்புகிறது

வள்ளலார் வரலாறு திரும்புகிறது

சிதம்பரத்துக்கு அருகில் உள்ள மருதூர் கிராமத்தில் 1823 அக்டோபரில்  கருணீகர் (கணக்குப் பிள்ளை) மரபில் பிறந்தவர் இராமலிங்கனார். அவர் முதலில் பாடிய ‘பாமாலை’யில் “பெருநெறி பிடித் தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்று எழுதினார். உருவ வழிபாடு, வேதம், ஆகமங்களைக் கடுமையாக எதிர்த்தார். 1872 ஜன. 25இல் வடலூரில் உருவ வழிபாடு இல்லாமல் ஒளியை மட்டுமே வணங்கும் ‘ஞான சபை’யைத் தொடங்கினார். இது எல்லா மதங்களுக்கும் பொதுவானது என்று அறிவித்தார். தில்லை நடராசன் பக்தராக இருந்தவர் தான்; அங்கே வழிபடச் சென்றபோது தீட்சதர்கள் அனுமதிக்கவில்லை. சினமடைந்த அவர், “இந்தக் கோயிலுக்கு எதிராக ஒரு தலத்தை உண்டாக்கி அங்கே நடராசனை அழைத்துக் கொள்ளப் போகிறேன்” என்று அறிவித்தார். (ஆதாரம்: 1904இல் பு. பாலசுந்தர நாயகர் எழுதிய “இராமலிங்க பிள்ளை பாடல்) 50 ஆண்டுகாலம் வாழ்ந்த வள்ளலார், கடைசி 10 ஆண்டு காலத்தில் தனது சைவம், முருகன், ஆகம பக்திகளைத் துறந்தார்....

வைதீக சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய கருத்தரங்கம் வள்ளலார் ‘ஜோதி’யில் கலந்தாரா?

வைதீக சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய கருத்தரங்கம் வள்ளலார் ‘ஜோதி’யில் கலந்தாரா?

‘வைதீகத்தை எதிர்த்த வள்ளலார்’ எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கம், அக்டோபர் 22, மாலை சென்னை அன்பகத்தில் சிறப்புடன் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரை யாற்றினார். முன்னதாக வைதீக எதிர்ப்புப் புரட்சிகரப் பாடல் களுடன் பாடகர் கோவன் குழுவினர் நடத்திய கலை நிகழ்ச்சி அரங்கை சூடேற்றியது. “இந்த அரங்கில் தலைசிறந்த ஆளுமைகள், துடிப்பு மிக்க இளைஞர்கள், பெண்கள் என்று அரங்கத்தில் கூடியிருப்பதைப் பார்க்கும்போது மிகுந்த நம்பிக்கை யும் எழுச்சியும் உருவாகிறது” என்று  கோவன் குறிப்பிட்டார். மு.வெ. சத்தியவேல் முருகனார் ‘ஆகமங்களும் அர்ச்சகர்களும்’ எனும் தலைப்பிலும், பேராசிரியர் வீ. அரசு, ‘வள்ளலாரின் இறுதிப் பத்தாண்டுகள்’ எனும் தலைப்பிலும், பேராசிரியர் கருணானந்தன், ‘வள்ளலார் வைதீக எதிர்ப்பு’ எனும் தலைப்பிலும், நிறைவாக கொளத்தூர் மணி, ‘வள்ளாருக்குப் பிறகு பார்ப்பனியம், வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சபையில் உருவ வழிபாட்டைத் தொடங்கி,...

வள்ளலார் வைதீக எதிர்ப்பு கருத்தரங்கம்: சென்னை மாவட்டக் கழகம் முடிவு

வள்ளலார் வைதீக எதிர்ப்பு கருத்தரங்கம்: சென்னை மாவட்டக் கழகம் முடிவு

  சமகால அரசியல் சூழல் குறித்த விவாதம் பெரியார் முழக்கம் சந்தா 1000 இலக்காக வைத்து சேர்ப்பது சென்னை மாவட்ட கழகத்தின் எதிர்கால திட்டங்கள், ஆகியவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வட சென்னை, திருவல்லிக் கேணி, மயிலை, அடையாறு, திருவான்மியூர், நங்கநல்லூர், எம்.ஜி.ஆர். நகர், சூலை, ராமாபுரம் ஆகிய பகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார். முன்னதாக, கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்,  “தமிழ்நாட்டில் பார்ப்பனிய மதவாதம் காலூன்று வதற்கு எப்படி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றன என்பதை விளக்கினார். கட்சிகளை உடைத்தல்; ஊடகங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்; தமிழ்நாட்டில் இரண்டா வது இடத்தில் பா.ஜ.க. இருப்பது போன்ற பிம்பங்களைக் கட்ட மைத்தல்; இந்த செயல் திட்டங் களுக்காகப் பணத்தை பெருமளவு செலவு செய்தல் போன்ற விரிவான  தகவல்களைப் பகிர்ந்து கொண் டார். உண்மைக்கு மாறான பா.ஜ.க.வின் பரப்புரைகளை நாம் எப்படி சந்திக்க வேண்டும் என்பது பற்றியும்...

பெண்களையும், சூத்திரர்களையும் அவமதிக்கும் மனுசாஸ்திரம்

பெண்களையும், சூத்திரர்களையும் அவமதிக்கும் மனுசாஸ்திரம்

பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தகப்பனாரின் கட்டுப்பாட்டிலும் திருமணமான பிறகு கணவனின் கட்டுப்பாட்டிலும் கணவன் இறந்த பிறகு, பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமே தவிர, பெண்கள், தாங்கள் விரும்புகிறபடி (சுயமாக சிந்தித்து) ஒரு போதும் இருக்கக் கூடாது.” (மனு சாஸ்திரம் அத்தியாயம் 5, சுலோகம் 148.) கணவன் துராசாரமுள்ளவனாக “(ஒழுக்கக்கேடுகள் உள்ளவனாக) இருந்தாலும் அன்னிய ஸ்திரீலோலனாக (வேறு பெண்களோடு உறவு வைத்துக் கொள்ள துடிப்பவன்) இருந்தாலும், பதிவிரதைகளான பெண் என்பவள், அந்தக் கணவனை தெய்வத்தைப்போல் வணங்க வேண்டும்.” (மனு சாஸ்திரம், அத்.5, சுலோகம் 154) பெண்கள் துரோகிகள் ; பெண்களைக் கொல்லுவது பாவமில்லை. படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.   (அத்தியாயம் 9 ; ஸ்லோகம் 17) பெண்களையும், பிராமணர் அல்லாதவரையும் கொல்லுவது பாவமில்லை. (அத்தியாயம் 11; ஸ்லோகம் 65) சூத்திரர்கள் அனைவரும் பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள். சூத்திரர் என்போர் ஏழு...

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு பொதுக் கூட்டம்

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு பொதுக் கூட்டம்

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் மூட நம்பிக்கை நாள் ஒழிப்புப் பொதுக் கூட்டம் செப்டம்பர் 24, அன்று மாலை 7 மணியளவில் மேடவாக்கம் அரசுப் பள்ளிப் பேருந்து நிறுத்தம் அருகே நடந்தது. பொது மக்கள் பெரும் கூட்டமாகக் கூடும் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்துக்கு கருத்துகளைக் கேட்க ஏராளமான பொது மக்களும் கொள்கை ஆதரவாளர்களும் திரண்டிருந்தனர். நிலவழகன் தலைமையில் (மக்கள் தமிழகம்) நடந்த கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வன்னியரசு (வி.சி.க.), வந்தியத்தேவன் (ம.தி.மு.க.), பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொழிலன் மற்றும் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் உரையாற்றினர். கூட்ட நிகழ்வுகளை வழக்கறிஞர் பாவேந்தன் (தமிழக மக்கள் முன்னணி) ஒருங்கிணைத்தார். பெரியார் முழக்கம் 29092022 இதழ்    

கொட்டும் மழையில் பெண்கள் ஆர்ப்பாட்டம் “இந்து”ப் பெண்களை இழிவுபடுத்தும் மனுசாஸ்திரத்தை தடை செய்

கொட்டும் மழையில் பெண்கள் ஆர்ப்பாட்டம் “இந்து”ப் பெண்களை இழிவுபடுத்தும் மனுசாஸ்திரத்தை தடை செய்

ஆர்ப்பாட்டத்தில்….. ஆ. ராசாவுக்கு பெண்கள் துணை நிற்போம்! குற்றம் என்ன? குற்றம் என்ன? ஆ. ராசா செய்த குற்றம் என்ன? ஆதரிப்போம்; ஆதரிப்போம்; ஆ. ராசாவின் கருத்துகளை ஆதரிப்போம்! துணை நிற்போம்; துணை நிற்போம்; ஆ. ராசாவுக்கு துணை நிற்போம்! – என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. “இந்து”ப் பெண்களை இழிவுபடுத்தும் மனு சாஸ்திரத்தை தடை செய் என்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னையில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியார் இறுதி உரை நிகழ்த்திய தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை முன்பு 26.09.2022 அன்று மாலை 3.30 மணியளவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பெருமளவில் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வழி நடத்தினர். பேராசிரியர் சரசுவதி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். ‘உங்களை எல்லாம் சூத்திரர்களாக விட்டு விட்டு சாகப் போகிறேனே’ என்று பெரியார் தனது இறுதி உரையில் சமூகக் கவலையோடு பேசிய இடத்தில் ‘சூத்திரர்களாக்கும்’ மனு தர்ம...

எழுச்சியுடன் நடந்த சனாதன எதிர்ப்புக் கூட்டம்

எழுச்சியுடன் நடந்த சனாதன எதிர்ப்புக் கூட்டம்

“சனாதனத்தை வேரறுப்போம்” பொதுக் கூட்டம், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலை பி.எம்.தர்கா அருகில், 17.09.2022 அன்று  மாலை 6 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. முன்னதாக, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். பெரியார் படிப்பகத்தில் இருந்து பொதுக்கூட்ட மேடை வரை பறை இசை முழங்க ஊர்வலமாக தோழர்கள் சென்றனர். தொடர்ந்து, அண்மையில் மறைந்த திமுக பகுதி முன்னாள் அவைத் தலைவர், பகுத்தறிவாளர் க.வே செழியனின் படம் பொதுக் கூட்ட மேடையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியால் திறக்கப்பட்டது. பின், முடிவெய்திய லெனின் சுப்பையா அவர்களின் வழித் தோன்றல்களான புதுவை ‘விடுதலைக் குரல்’ இசைக் குழுவின் கருத்தாழமிக்க சாதி இந்துத்துவ எதிர்ப்பு இசை  நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த லெனின் சுப்பையா இணையர் நிகழ்வில் பங்கேற்றார். அவருக்கு ஆடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. 24 அர்ச்சகர்களும் பணி ஏற்று...

ஓராண்டு பணி முடித்த அர்ச்சகர்களுக்கு பெரியார் பிறந்த நாள் விழாவில் பாராட்டு

ஓராண்டு பணி முடித்த அர்ச்சகர்களுக்கு பெரியார் பிறந்த நாள் விழாவில் பாராட்டு

பயிற்சிக் காலத்தில் பயிற்சி அளிக்க வந்த ஆசிரியரை பார்ப்பனர்கள் தாக்கினர். பணி நியமனமாகி ஓராண்டுக்குப் பிறகும் பல கோயில்களில் பூஜை செய்ய பார்ப்பனர்கள் அனுமதிப்பது இல்லை. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குறைக்கப்பட்ட வயது வரம்பை 45ஆக உயர்த்தி ஆணையிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின். ஆகமக் கோயில் ஒன்றில் 2000 ஆண்டு வரலாற்றில் பார்பபனரல்லாத அர்ச்சகர் ஒருவர் முதன்முதலாகக் கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றியுள்ளார். அர்ச்சகர் பயிற்சியின் போதும் பணி நியமனத்துக்குப் பிறகும் பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் அவமதிப்புக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாவதை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் வா. ரங்கநாதன் விவரித்தபோது கூட்டத்தினர் உணர்வு மயமாயினர். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பெரியார் பிறந்த நாளான செப்.17 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் பார்ப்பனரல்லாத அனைத்து ‘இந்து’ அர்ச்சகர்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்று வா. ரங்கநாதன் நிகழ்த்திய உரை. பார்ப்பன அர்ச்சகர்கள், பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியைச்...

சென்னையில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம்: “சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்”

சென்னையில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம்: “சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்”

“சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்” என்ற தலைப்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம், 17.09.2022 சனிக்கிழமை அன்று சென்னை, இராயப்பேட்டை, இலாயிட்ஸ் சாலை, பி.எம்.தர்கா அருகில் நடைபெறவுள்ளது. கூட்டத்திற்கு, இரண்யா தலைமை வகிக்கிறார். கிருத்திகா வரவேற்று பேச வுள்ளார். தோழர்கள் தேன்மொழி, இரம்யா, யாழினி முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத்தின்பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தி ஆகியோர் உரையாற்றவுள்ளனர். புதுவை விடுதலை கலைக் குழுவினரின் எழுச்சி இசையோடு நிகழ்வு கள் நடக்கும். இறுதியாக இசை இனியாள் நன்றி கூறுவார்.   பெரியார் முழக்கம் 08092022 இதழ்

பெரியார் பிறந்த நாள் கூட்டம் : சென்னை கழகத்தின் பணி

பெரியார் பிறந்த நாள் கூட்டம் : சென்னை கழகத்தின் பணி

“சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்” என்ற தலைப்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் பொதுக் கூட்டம், 17.09.2022 சனிக்கிழமை அன்று சென்னை, இராயப்பேட்டை, இலாயிட்ஸ் சாலை, பி.எம்.தர்கா அருகில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, ஆதம் மார்கெட், அய்ஸ் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக வீதி வீதியாக கடை வசூல் சென்னை கழகத் தோழர் களால் தூண்டறிக்கை கொடுக்கப்பட்டு கடை வசூல் செய்யப்பட்டு வருகிறது. வணிகர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். மேலும், கூட்டத்திற்கு திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை சுற்றிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுவரெழுத்து எழுதப்பட் டுள்ளது.  தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் சுவரெழுத்துப் பணிகளை மேற்கொண்டார். பெரியார் முழக்கம் 08092022 இதழ்

“முழக்கம்” கட்டுரைகள் குறித்து  கலந்துரையாடல்

“முழக்கம்” கட்டுரைகள் குறித்து கலந்துரையாடல்

நிகழும் அரசியல் சூழல் குறித்த விவாதமும், முழக்கத்தில் வந்த கட்டுரைகளும் மற்றும் தற்போது சமூகத்தில் எழும் விவாதமாக இலவசம் தவறா? மற்றும் இவையெல்லாம் இலவசமா? என்றும் விவாதிக்கப்பட்டது. சென்னை மாவட்டத் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களின் பங்கெடுப் பில் நிகழ்வு ஒருக்கிணைக்கப்பட்டு நடத்தப் பட்டது. (இந்திய ஒன்றிய பொருளாதாரம் குறித்தும் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் இலவச என்று சொல்லக்கூடிய விலையில்லா பொருட்கள் மற்றும் மாநிலங்களைப் பற்றி வந்த தோழர்களின் பார்வையும் சமூக மாற்றத்தையும் கலந்தாலோசிக்கப்பட்டது.) பெரியார் முழக்கம் 01092022 இதழ்

சனாதனத்தை வீழ்த்துவோம் – பெரியார் பிறந்தநாள் தோழர்கள் தயாராகிறார்கள்

சனாதனத்தை வீழ்த்துவோம் – பெரியார் பிறந்தநாள் தோழர்கள் தயாராகிறார்கள்

கோவை மாநகர  திராவிடர் விடுதலைக் கழக  கலந்துரையாடல் கூட்டம் 27.8.2022 மாலை 4மணி முதல் 6.30 வரை  வழக்கறிஞர்  கார்கி  அலுவலகத்தில்  நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எதிர்வரும் செப் – 17 பெரியார் 144ஆவது பிறந்தநாளில் காலை 9 மணிக்கு கோவை காந்திபுரம் பெரியார் சிலைக்கு மாநகர தலைவர் நேருதாசு தலைமையில்  மாலை அணிவித்து   துண்டறிக்கை வழங்குவதெனவும் தொடர்ந்து சித்தாபுதூர், ரத்தினபுரி ஆறு முக்கு, பீளமேடு, காந்தி நகர், சவுரிபாளையம், உக்கடம், டுழு தோட்டம், பனைமரத்தூர், சூலூர், வடபுதூர், அன்னூர், மேட்டுப்பாளையம்  பகுதிகளில்  படத்திறப்பு விழா நடத்துவது. 2 .        செப் – 17 பெரியார் பிறந்தநாள் முடிந்த பிறகு கோவை மாவட்டத்திற்குட்பட்ட நகர கிராமப் பகுதிகளில்  தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது. பெரியார் பிறந்தநாள் விழா சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம் சுவரொட்டிகள்  800 அச்சடித்து கோவை மாவட்டத்தில் ஒட்டுவது. சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம் துண்டறிக்கை...

விநாயகன் ஊர்வலம்: கோவை, சென்னை கழக சார்பில் காவல்துறையிடம் மனு

விநாயகன் ஊர்வலம்: கோவை, சென்னை கழக சார்பில் காவல்துறையிடம் மனு

கோவையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றக் கோரி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.08.22 திங்கள் காலை கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடக்கும் ஊர்வலங்கள் மற்றும் சிலை அமைப்பது ஆகியவை குறித்து தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற கோரியும், சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்ட் ஆஃப் பாரிஸ், சுட்ட களிமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது என்ற அரசாணையை சரியாக பின்பற்ற கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலை வைக்கப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் கோஷங்கள் போடுவதை வீடியோ பதிவு செய்வோம் நீங்கள் யாரேனும் விதிமுறை மீறல் சிலையை பார்த்தால் ஆதாரம் அனுப்புங்கள் அதற்கும் நடவடிக்கை எடுப்போம்....

கழக சார்பில் காவல்துறையிடம் மனு: “கிடுகு” (சங்கிகளின் கூட்டம்) திரைப்படத்தை வெளியிட தடை போட வேண்டும்

கழக சார்பில் காவல்துறையிடம் மனு: “கிடுகு” (சங்கிகளின் கூட்டம்) திரைப்படத்தை வெளியிட தடை போட வேண்டும்

ஜாதி, மத மோதல்களை உருவாக்க முயற்சிக்கும் ‘கிடுகு’ திரைப்படத் தயாரிப்பாளர் ராமலட்சுமி, இயக்குனர் வீரமுருகன் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 22.08.22 திங்கள் காலை சென்னை காவல் ஆணையர்  அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. கிடுகு (சங்கிகளின்கூட்டம்) எனும் பெயரில் ஒரு திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. ராமலட்சுமி என்பவர் தயாரிப்பில் வீரமுருகன் என்பவர் இயக்கத்தில்  இத்திரைப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. இதில் சில காட்சிகளில் தமிழ்நாட்டு அரசின் திராவிட மாடல் குறித்து பொய்யான தகவல்களைக் கூறி அவதூறு பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை உயர்த்திக் காட்டும்படியான காட்சிகளும் குறிப்பிட்ட மதங்கள் மீது வெறுப்பு ஏற்படுத்தும் வகையிலும், ‘ராமசாமி நாயக்கருக்கு’ எதுக்கு சிலை என்று வன்முறையை தூண்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்று ஒருவர் ஆவேசமாகப் பேசி, தமிழ் மண்ணை காவி...

மேட்டூர் – சேலம் – சென்னை – கோவை – திருப்பூரில் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டங்கள்

மேட்டூர் – சேலம் – சென்னை – கோவை – திருப்பூரில் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டங்கள்

சேலம் மேற்கு மாவட்ட திவிகவின் சார்பில் கழகத்தின் 11ம் ஆண்டு துவக்க நாளில் தெருமுனைக் கூட்டங்கள் 12.08.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையத்தில் பறை முழக்கம்,மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் கொள்கைப் பாடல்களுடன் துவங்கியது. முதலாவதாக வழக்கறிஞர் கண்ணகி “பெரியாரின் தேவை, பெண்ணுரிமை” ஆகியவை குறித்து உரை நிகழ்த்தினார். அடுத்து கழகத்தின் பரப்புரைச் செய லாளர் பால்.பிரபாகரன்,  “திராவிடர் விடுதலைக் கழகம் கடந்து வந்த பாதைகளையும், தமிழக உரிமை களுக்காக கழகம் செய்த போராட்டங்கள், பரப்புரைகள் மற்றும் ஒன்றிய பிஜேபி அரசினால் நாம் எவ்வாரெல்லாம் வஞ்சிக்கப்படுகிறோம்” என்பதை பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார். கொளத்தூர் பேருந்து நிலையத்தில் திரளான பொதுமக்கள் உரையை கேட்டனர். பொது மக்களுக்கு திராவிடர் விடுதலைக்கத்தின் கடந்த 10 ஆண்டு கால பரப்புரை, போராட்டங்கள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை விளக்கி துண்டறிக்கை வழங்கப்பட்டது. நிறைவாக கொளத்தூர் நகர செயலாளர்  அறிவுச்செல்வன் நன்றியுரை கூற தெருமுனைக் கூட்டம் 11...

‘பீமா கோரே கான் – எல்கர் பரிஷத் வழக்கு: சிறைப்படும் நீதி’ நூல் வெளியீடு

‘பீமா கோரே கான் – எல்கர் பரிஷத் வழக்கு: சிறைப்படும் நீதி’ நூல் வெளியீடு

‘பீமா கோரே கான் – எல்கர் பரிஷத் வழக்கு: சிறைப்படும் நீதி’ நூல் வெளியீட்டு நிகழ்வு, 11.06.2022 மாலை 5.30 மணியளவில் சென்னை தியாகராயர் அரங்கத்தில் நடை பெற்றது. பீமா கோரே கான் அரசியல் சிறைப்பட்டோர் விடுதலைக் குழு ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு பேராசிரியர் சரசுவதி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் து. ராசா நிகழ்வில் பங்கேற்று நூலை வெளியிட்டுப் பேசினார். தமிழ்நாடு சிறுபான்மை நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு குடியரசு கட்சித் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செ.கு. தமிழரசன், வன்னி அரசு (வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர்) மற்றும் தி.வி.க. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர்கள் கருணானந்தம், அ. மார்க்ஸ், சிவக்குமார், நெல்லை முபாராக் (எஸ்.டி.பி.அய்), நாகூர் மீரான் (பி.எஃப்.அய்.), வழக்கறிஞர் ப.பா. மோகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றுப் பேசினர். முன்னதாக விரட்டுக் கலையைச் சார்ந்த...

தோழர்தமிழரசு நினைவேந்தல்

தோழர்தமிழரசு நினைவேந்தல்

பெரியார் தொண்டர், கழக களப்பணியாளர் கோ.தமிழரசு இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு 11.06.22 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது. மயிலாப்பூர் பெரியார் படிப்பகத்தில் அறிவரசுவின் நினைவுகள் பகிரப்பட்டு கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டு அறிவரசு  படத்திற்கு கழகத் தோழர் இரண்யா மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து 9:30 மணியளவில் இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், அறிவரசு படத்திற்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வுகளில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், மாவட்டத் தலைவர் வேழ வேந்தன், மாவட்ட செயலாளர் இரா.உமாபதி உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 16062022 இதழ்

மருத்துவர்கள் தமிழரசி-அ.கிருபாகரன் ஜாதி மறுப்பு மணவிழா

மருத்துவர்கள் தமிழரசி-அ.கிருபாகரன் ஜாதி மறுப்பு மணவிழா

கழகத் தோழர் சி.சிகாமணி – ச.மோகனம்பாள் இணையரின் மகள் மருத்துவர் சி.தமிழரசி – மருத்துவர் அ.கிருபாகரன் ஆகியோரது இணையேற்பு நிகழ்வு 08.06.2022 அன்று மாலை 7 மணியளவில், வேப்பேரி ரித்திங்டன் சாலையில் உள்ள லுஆஊஹ கட்டடத்தில் நடைபெற்றது. புத்தர் கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, கோவன் தலைமையில் மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்விற்கு, மக்கள் அதிகாரம் ப.வினோத் வரவேற்பு கூறினார். சேத்துப்பட்டு க.இராசேந்திரன் முன்னிலை வகித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று வாழ்க்கை இணையேற்பை நடத்தி வைத்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்,  முனைவர் தொல்.திருமாவளவன், கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர், சமூகநீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு தலைமை செயலக ளுஊ/ளுகூ நலச்சங்கம் மீனலோசனி, ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன்,...

சென்னை கழகத்தினர் முயற்சி வெற்றி; தெருக்களில் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படுகின்றன

சென்னை கழகத்தினர் முயற்சி வெற்றி; தெருக்களில் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படுகின்றன

சென்னை மயிலாப்பூர் கழகத் தோழர்கள், தெருக்களில் ஜாதிப் பெயர்களை நீக்கக்கோரி கடந்த ஏப்.6ஆம் தேதி மாநகராட்சி அதிகாரிகளிடம்  கோரிக்கை மனுவை வழங்கியதைத்  தொடர்ந்து நகரம் முழுதும் ஜாதிப்பெயைர நீக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களின் பெயர்ப் பலகைகளை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன்படி ரூ.8.43 கோடி செலவில் தெருக்களின் பெயர் பலகைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்தப் பெயர் பலகைகளில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் பணியுடன் சேர்த்து தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 171-வது வார்டில் உள்ள சாலையின் பெயரை சென்னை...

நமக்கான அடையாளம் : ‘திராவிட மாடல்’ கலை நிகழ்வு – கருத்துச் செறிவுடன் சென்னையில் முதல் மண்டல மாநாடு

நமக்கான அடையாளம் : ‘திராவிட மாடல்’ கலை நிகழ்வு – கருத்துச் செறிவுடன் சென்னையில் முதல் மண்டல மாநாடு

கழக செயல் வீரர் தோழர் பத்ரி நாராயணன் 18ஆவது நினைவு நாளையொட்டி, 30.04.2022 காலை 9 மணியளவில், பத்ரி நாராயணன் நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் நினைவு கூறல் நிகழ்வு நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பங்கேற்று பத்ரி நாராயணனின் சமரசம் இல்லாத இயக்கப் பணிகளை நினைவு கூர்ந்தனர். இறுதியில் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அதன்பின் பத்ரி நாராயணன் படிப்பகம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. திராவிட மாடல் முதல் மண்டல மாநாடு 30.04.2022 அன்று மாலை 5 மணியளவில் இராயப்பேட்டை வி.எம். தெரு பெரியார் படிப்பகம் அருகில், தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தொடங்கி நடைபெற்றது. நிகழ்விற்கு, வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜி வரவேற்பு கூறினார். மயிலை சுகுமார், முனு சாமி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்....

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ கழகப் பரப்புரை இயக்கங்கள் தொடங்கின

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ கழகப் பரப்புரை இயக்கங்கள் தொடங்கின

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை இயக்கங்கள் தொடங்கி எழுச்சி நடைபோட்டு வருகின்றது. சென்னை : முதல் நாள் தெருமுனைக் கூட்டம் : மாநில உரிமையைப் பறிக்கும், கல்வி உரிமையைத் தடுக்கும், மதவெறியைத் திணிக்கும் பாஜகவை எதிர்த்து, தமிழ்நாடு அரசின் ‘திராவிட மாடல்’-அய் ஆதரித்து, நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” மண்டல மாநாட்டை விளக்கி, தெருமுனைப் பிரச்சாரம், சென்னை இராயப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதிகளில், (19.04.2022 மாலை 5:30 மணிக்கு மீர்சாகிப் பேட்டை மார்கெட் பகுதியில் 119ஆவது வட்ட கவுன்சிலர் திமுக கமலா செழியன் தொடங்கி வைத்தார். அடுத்ததாக அய்ஸ்ஹவூஸ்ஷேக் தாவூத் தெரு, இறுதியாக அய்ஸ்ஹவூஸ்கிருஷ்ணாம்பேட்டை பள்ளி ஆகிய மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட செயலாளர் உமாபதி, பிரகாசு, ஜெய பிரகாசு, தேன்மொழி ஆகியோர் மக்களிடம்  ‘திராவிட மாடல்’-அய் ஏன் ஆதரிக்க வேண்டும்...

‘திராவிட மாடல்’ பரப்புரைப் பயணத்துக்குத் தோழர்கள் தயாராகிறார்கள்

‘திராவிட மாடல்’ பரப்புரைப் பயணத்துக்குத் தோழர்கள் தயாராகிறார்கள்

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ மண்டல மாநாடு ஒட்டி மாவட்ட கழகங்களின் கலந்துரையாடல்களை நடத்தி தோழர்கள் பயணத்துக்கு திட்டமிட்டு வருகிறார்கள். சென்னை : கடந்த ஏப்ரல் 02, 03 ஆகிய நாட்களில், ஈரோட்டில் நடைபெற்ற தலைமைக்குழு, செயலவையில், மண்டலம் வாரியாக மாநாடு நடத்துவது என்றும், மாநாட்டிற்கு முன்னதாக 15 தெருமுனைக் கூட்டங்கள் மாவட்டம் வாரியாக நடத்த வேண்டும் என்றும், முடிவுகள் எடுக்கப்பட்டன. செயலவை முடிவுகளின் படி, சென்னை மாவட்டம் சார்பாக மாநாடு மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது பற்றி சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல், 05.04.2022 செவ்வாய் கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை இராயப்பேட்டை வி.எம் தெரு பெரியார் படிப்பகத்தில், மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன் ஆகியோர் உட்பட மாவட்ட, பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். சேலம் – தருமபுரி...

ஃபாரூக் நினைவு நாளில் கொளத்தூர் மணி பேச்சு (2) ‘மத அடிப்படை வாதம்’ வளருவது சமூக அமைதியை சீர்குலைத்து விடும்

ஃபாரூக் நினைவு நாளில் கொளத்தூர் மணி பேச்சு (2) ‘மத அடிப்படை வாதம்’ வளருவது சமூக அமைதியை சீர்குலைத்து விடும்

ஃபாரூக் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் சிந்தனை அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் தலைமை உரை. (சென்ற இதழ்  தொடர்ச்சி) ஃபாரூக் கொலையில் இருந்து நாம் பார்த்தோம். அதில் பல பேர் கண்டனம் தெரிவித்தார்கள். சென்னையில் ஒரு கண்டனக் கூட்டத்தை சில இஸ்லாமியர்கள் நல்லெண்ணத்தோடு முயற்சி எடுத்து நடத்தினார்கள்.  கோவையில் நடக்கும் என்றார்கள். கோவையில் யாரும் இப்படி கண்டனக் கூட்டம் நடத்தவில்லை. அந்த வருத்தம் எங்களுக்கு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது ஒருபுறம் இருந்தாலும், எந்த ஒன்றும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது அல்ல; விமர்சனத் திற்கு அப்பாற்பட்டது அல்ல; பெரியாரையும் சேர்த்துத் தான் சொல்கிறோம். இஸ்லாமியர்கள் ஒரு வேளை இங்கே கேள்வி கேட்க வந்திருந்தாலும் நீங்கள் கேளுங்கள். நிகழ்ச்சி முடிந்த பின், உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும். நீங்கள் பேசுங்கள், உங்களுக்கு உரிய விளக்கம் கொடுக்கப் படும். அதில் ஒன்றும் எங்களுக்கு தயக்கமே கிடையாது. ஒருவேளை எங்கள் கருத்து தவறாக...

கருத்துச் செறிவுடன் நடந்த ஃபாரூக் நினைவு சிந்தனை அரங்கம்

கருத்துச் செறிவுடன் நடந்த ஃபாரூக் நினைவு சிந்தனை அரங்கம்

இஸ்லாமிய மத அடிப்படை வாதத்திற்குப் பலியான மனிதநேயன் ஃபாருக் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின், சிந்தனை அரங்கம் 19.03.2022 சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்வை தலைமையேற்று வழிநடத்தினார். ‘இஸ்லாத்தில் நாத்திகர்கள்’ என்ற தலைப்பில் இந்திய முற்போக்காளர்கள் கூட்டமைப்பு – ஜின்னா மாச்சு, ‘அறிவியலுக்கு முரணான கிருஸ்துவம்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கூடம் – நாத்திக வசந்தன், ‘இந்து மதமும் – பெண்களும்’ என்ற தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை கொள்கை பரப்பு செயலாளர் இரா. உமா, ‘இஸ்லாமும் பெண்களும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் பீர் முகமது, முன்னாள் முஸ்லீம் அமைப்பைச் சார்ந்த உமர் – ஹிஜாப், இஸ்லாத்தில் பெண்களின் அவலங்களைப் பற்றியும் உரையாற்றினர். இறுதியாக ‘மானுடத்துக்கு மதம் தேவையா?’ என்ற தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். நிகழ்விற்கு ஃபாருக் நண்பர் மணிவண்ணன் நன்றி கூறினார்....

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் தில்லை தீட்சதர்களை கைது செய்க!

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் தில்லை தீட்சதர்களை கைது செய்க!

தில்லை சிற்றம்பல மேடையில் தலித் ‘பெண்’ வழிபாட்டு உரிமையைத் தடுத்து நிறுத்திய தீட்சதர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. தீட்சதர்களை சட்டப்படி கைது செய்யக் கோரியும், நடராசன் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வற்புறுத்தியும்  சென்னையில் மார்ச் 11, 2022 பகல் 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய பலரும் எங்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை; ஆனால் நம்பிக்கை யாளர்கள் உரிமைகளைத் தடைப்படுத்துவதை மனித உரிமைக் கண்ணோட்டத்தில் கண்டிக்கிறோம் என்று குறிப்பிட்டனர். மனித உரிமைகளுக்கு எதிராக நம்பிக்கைகள் திணிக்கப்படும்போது அதை கண்டிக்கிறோம். தில்லையில் தலித் பெண் சிற்றம்பல மேடையில் வழிபடுவது அவரது மனித உரிமை; அதைத் தடுப்பது தீண்டாமைக் குற்றம்; மனித உரிமைக்கு எதிரானது; தமிழில் பாடுவது மனித உரிமை; அதைத் தடுப்பது மனித உரிமைக்கு எதிரானது; ஹிஜாப் அணிவதும் அணிய விரும்பாததும் அவர்கள் மனித உரிமை; அதைத்...

‘நீட்’ எதிர்ப்பு மசோதாவைக் கிடப்பில் போடாதே; ஆளுநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

‘நீட்’ எதிர்ப்பு மசோதாவைக் கிடப்பில் போடாதே; ஆளுநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ‘நீட் விலக்கு’ மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்தும், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரியும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை திரும்ப பெறக்கோரியும், சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம், 28.02.2022 அன்று காலை 11:30 மணியளவில் பனகல் மாளிகை அருகில் நடைபெற்றது. முற்றுகைப் போராட்டம் திராவிடர் தமிழர்கட்சி சார்பில் நடைபெற்றது. திராவிடர் தமிழர்கட்சித் தலைவர் வெண்மனி முற்றுகைப் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். நிகழ்வில், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தார். விடுதலை இராசேந்திரன் “ஆளுநர் எவ்வளவு நாள் இந்த மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறாரோ அவ்வளவு நாள் வரை இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். இதற்கு முன் ஆளுநராக இருந்தவர், அதிமுக அனுப்பிய நீட்விலக்கு மசோதாவை நீண்ட நாட்கள் கிடப்பில் வைத்திருந்தார். பின், நீதிமன்றம் தலையிட்டது. அதற்குப் பிறகு, இந்த மசோதாவிற்கு...

மாட்டிக்கிட்டாரு; அய்யரு மாட்டிக்கிட்டாரு : வி.பி.சிங் மீண்டும் பாடச் சொன்ன தலித் சுப்பையா பாட்டு

மாட்டிக்கிட்டாரு; அய்யரு மாட்டிக்கிட்டாரு : வி.பி.சிங் மீண்டும் பாடச் சொன்ன தலித் சுப்பையா பாட்டு

‘மாட்டிக்கிட்டாரு, அய்யரு மாட்டிக்கிட்டாரு’ என்ற பாடலை காஞ்சி ஜெயேந்திரன், சங்கர்ராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதையொட்டி தலித் சுப்பையா எழுதினார். இந்தப் பாடல் பிறந்த வரலாற்றை அவரது குழுவில் இடம் பெற்றிருந்த கார்த்திக் சென்னையில் நடந்த படத்திறப்பு நிகழ்வில் விளக்கினார். “2004ஆம் ஆண்டு எங்கள் குழு டெல்லிக்குப் பயணமானது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அப்போது டெல்லியில் இரட்டை வாக்குரிமை, தனியார் துறை இடஒதுக்கீடு சுய நிர்ணய உரிமைகள் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 நாள் மாநாடு நடத்தினார். அம்மாநாட்டுக்கு நாங்கள் நிகழ்ச்சி நடத்தப் போனோம். பயணத்தில் சங்கராச்சாரி கைது பற்றிய செய்தி கிடைத்தது. உடனே இந்த ஜெயேந்திரனுக்கு ஒரு பாடல் எழுத வேண்டுமே என்று சுப்பையா கூறினார். அது குறித்து சிந்தனையில் மூழ்கினார். டெல்லிக்குப் போனவுடன் ஓர் இரவு முழுதும் கண் விழித்து, ‘மாட்டிகிட்டாரு; அய்யர் மாட்டிகிட்டாரு’ என்ற பாடலை எழுதி மெட்டும் போட்டார். அடுத்த நாள்...

நன்கொடை

நன்கொடை

தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி பிறந்தநாள் நிகழ்வில், 17.2.2022 அன்று ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு 50 சந்தாக்களுக்கான தொகை ரூ.12500/-ஐ கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம், திருவல்லிக்கேணி பகுதி தோழர்கள் வழங்கினர். பெரியார் முழக்கம் 24022022 இதழ்

விடை பெற்றார்; லெனின் சுப்பையா – உருக்கமும் உணர்வுமாய் நடந்த நினைவேந்தல்

விடை பெற்றார்; லெனின் சுப்பையா – உருக்கமும் உணர்வுமாய் நடந்த நினைவேந்தல்

மக்களிடம் ஜாதி, மதம் பார்ப்பனியத்துக்கு எதிரான பாடல்களை எழுதியும் இசையமைத்தும் தனது ‘விடுதலைக் குரல்’ கலைக்குழு வழியாக போரிசைப் பாடல்களை பாடி வந்த தலித் சுப்பையா, பிப். 16, 2022 அன்று புதுச்சேரியில் முடிவெய்தினார். இறுதி காலத்தில் தலித் சுப்பையா எனும் பெயரை லெனின் சுப்பையா என்று மாற்றிக் கொண்டார். ஜாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளான தலித் ஏழைக் குடும்பத்தில் மதுரை மாவட்டத்தில் பிறந்த அவர், தடைகளைத் தகர்த்து, கல்வி பயின்று, 1980களில் புதுச்சேரிக்கு குடியேறினார். தொடக்கக் காலத்தில் மார்க்சிய சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். அம்பேத்கர் நூற்றாண்டில் அம்பேத்கரிய பெரியாரிய சிந்தனைகளோடு புரட்சிப் பாடகரானார். பல நூறு பாடல்களை எழுதி, அவரே இசை அமைத்தார். தலித் சுப்பையா என்று தன்னை அடையாளப்படுத்தினார். பாடல் வரிகளில் அலங்காரங்கள் அழகுச் சொற்களைத் தவிர்த்து, வரலாறு களையும் சிந்தனைகளையும் பொதித்து வைத்தார். தனது இசை நிகழ்ச்சி மேடைகளை சிந்தனை மேடைகளாக்கினார்.  பெரியார் திராவிடர் கழகம், பிறகு திராவிடர்...

கழகத் தலைவரை இழிவுபடுத்திய தமிழச்சி, சாரதா, தாமரை டிவி மீது அவதூறு வழக்கு !

கழகத் தலைவரை இழிவுபடுத்திய தமிழச்சி, சாரதா, தாமரை டிவி மீது அவதூறு வழக்கு !

.கழகத் தலைவரை இழிவுபடுத்திய தமிழச்சி, சாரதா, தாமரை டிவி மீது அவதூறு வழக்கு ! திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மீது அவதூறுகளை பரப்பி முகநூல், யூ டியூப் போன்றவைகளில் நேரலையாக பதிவிட்ட தமிழச்சி, சாரதா, தாமரை தொலைக்காட்சி மற்றும் யூ டியூப் மீது இந்திய தண்டனைச் சட்டம் 190 (i) (a) மற்றும் 200 ஆகிய பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கை, திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி பதிவு செய்துள்ளார். வழக்கை வழக்கறிஞர் திருமூர்த்தி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பெருநகர நீதிபதி முன்பு பதிவு செய்துள்ளார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம்,சில தனி நபர்கள் மீதான பாலியல் முறைகேடு குறித்து தான் புகார் அளித்ததாகவும், அந்தப் புகாரை கொளத்தூர் மணி விசாரிக்கவில்லை என்று கூறி அவர் குற்றவாளியை தப்பிக்க வைக்க முயற்சிப்பதாக தமிழச்சி என்பவர் எழும்பூர் நீதிமன்ற வாயிலில்...

காதலர் நாளில் குடும்ப விழா – மகிழ்வு கொண்டாட்டம் – ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருதுகள்

காதலர் நாளில் குடும்ப விழா – மகிழ்வு கொண்டாட்டம் – ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருதுகள்

காதலர் நாளை ஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருதுகள் வழங்கி குடும்ப விழாவாகக் கொண்டாடியது திராவிடர் விடுதலைக் கழகம். பிப். 14, காதலர் நாளையொட்டி ஜாதி மறுப்பு திருமணம் புரிந்த 14 இணையர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவை சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் மகிழ்ச்சி குதூகலமாக நடத்தியது. மாலை 5.30 மணியளவில் இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் காதலைப் போற்றும் திரையிசைப் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புத்தக வாசிப்பு கவிதை அரங்கேற்ற நிகழ்வுகள் நடந்தன. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கழகத் தோழர் ஜெயப் பிரகாஷ் ‘ஜாதியை மறுத்துப் பார்’ என்ற  அவரது கவிதையை வாசித்தார். தோழர் இரண்யா, “எது கலாச்சாரம்?” என்ற தலைப்பில் தமிழ்ச்செல்வன் எழுதிய நூலிலிருந்து சில பகுதிகளையும் தேன்மொழி, பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ நூலிலிருந்து பெரியார் தனது உறவுப் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்ததை விவரித்து பெண்களின் மறுமண...

முற்றுகை; இரயில் மறியல்; ஆர்ப்பாட்டங்கள் ஆளுநருக்கு எதிராகக் கழகம் போர்க்கோலம்

முற்றுகை; இரயில் மறியல்; ஆர்ப்பாட்டங்கள் ஆளுநருக்கு எதிராகக் கழகம் போர்க்கோலம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட’ நீட் விலக்கு’ மசோதாவை, திருப்பி அனுப்பிய,  ஆளுநரைக் கண்டித்தும், ஆளுநரை பதவி விலகக் கோரியும், கழக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை : 04.02.2022 அன்று மாலை 4 மணியளவில் சென்னை சின்னமலை இராஜீவ் காந்தி சிலை அருகில், ஆளுநர் மாளிகை செல்லும் வழியில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை இராசேந்திரன் : ஆர்ப்பாட்டத்தில், கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செய்தியாளர் களிடத்தில், “நீதிபதி ஏ.கே இராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஒரு குழுவை நியமித்து அந்தக் குழு நீட் தேர்வு குறித்து, பல மருத்துவர்களை, சமூகவியலாளர்களைக் கொண்டு ஆய்வு நடத்தி இந்த தேர்வு கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானது என்று பரிந்துரை வழங்கியுள்ளது. ஆனால் ஆளுநர் கூறுகிறார், ‘இந்த நீட் தேர்வை இரத்து செய்தால், ஏழை எளிய மாணவர்களும், கிராமப்புற...

ஆளுனர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

ஆளுனர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

தமிழ் நாடு ஆளுனர் மாளிகை முற்றுகைப் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று 04.02.2022 வெள்ளி மாலை 4.00 மணிக்கு சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தோழர் உமாபதி அவர்கள் தலைமையில் நடை பெற்றது. கழகப் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் ‘நீட்’ விலக்கு மசோதாவை ஏற்காத ஆளுனரின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை கண்டித்து உரையாற்றினார். இளந்தமிழகம் அமைப்பின் தோழர் செந்தில்,கழக தலைமைக் குழு உறுப்பினர் தோழர் அன்பு தனசேகர், தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன், சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தோழர் வேழவேந்தன் மற்றும் கழக நிர்வாகிகள்,தோழர்கள் ஏராளமாக பங்கேற்றனர்.

‘நீட்’ எதிர்ப்புப் போராட்டம்: கழகத் தோழர்கள் 12 பேர் மீதான வழக்கை இரத்து செய்தது உயர்நீதிமன்றம்

‘நீட்’ எதிர்ப்புப் போராட்டம்: கழகத் தோழர்கள் 12 பேர் மீதான வழக்கை இரத்து செய்தது உயர்நீதிமன்றம்

‘நீட்’ தேர்வில் வெற்றி பெறாத நிலையில் அனிதா உயிர்ப் பலி தந்ததைத் தொடர்ந்து ‘நீட்’ இரத்து கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னையில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 2017இல் நடந்தது. தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் உமாபதி உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறை பொது அமைதியைக் குலைத்ததாக வழக்கைப் பதிவு செய்தது. போராட்டம் – சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைப்படித்தான் நடந்தது; சட்டம் ஒழுங்கு சீர்குலைவோ, பொது மக்களுக்கு இடையூறோ ஏதும் நிகழவில்லை என்று கழக சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி வாதிட்டார். நீதிபதி சதீஸ்குமார், வழக்கறிஞர் வாதத்தை ஏற்று 12 தோழர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை இரத்து செய்தார். பெரியார் முழக்கம் 03022022 இதழ்

கோ.இளவரசன்  நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு !

கோ.இளவரசன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு !

கடந்த 05.01.2022 அன்று மறைந்த கழகத் தோழர் கோ. இளவரசன்  நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 20.01.2022 அன்று சென்னை சேத்துப்பட்டு கோ. இளவரசன் இல்லத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் படத்தை திறந்து வைத்து, நினைவேந்தல் உரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள், இந்திய குடியரசுக் கட்சி, மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு கோ. இளவரசனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இளவரசன் தனது மரணத்தின்போது எந்த சடங்குகளும் இடம் பெறக் கூடாது என்று தமது துணைவியாரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 54 வயதில் துணைவரை இழந்த அவரது இணையர், உறவினர் எதிர்ப்புகளைப் புறந்தள்ளி எவ்வித சடங்குகளும் இன்றி இறுதி நிகழ்வுகளை கழகத் தோழர்களின் ஆதரவுடன் நடத்திக் காட்டினார். மறைவுச் செய்தி அறிந்த சென்னை மாவட்டக் கழகத் தோழர் களுடன் விரைந்து சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். துணைவர் படத் திறப்பு நிகழ்விலும்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு வரலாற்றுப் பதிவுகளை நினைவூட்டும் கழக ஏட்டின் தலையங்கங்கள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு வரலாற்றுப் பதிவுகளை நினைவூட்டும் கழக ஏட்டின் தலையங்கங்கள்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் தலையங்கங்கள் வரலாற்று ரீதியான பதிவுகளையும் கழக நிலைப்பாடுகளையும் நினைவூட்டுகின்றன என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். டிசம். 24, 2021 அன்று சென்னையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமையேற்று, கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது: திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் கட்டியமைக்கப் பட்டது. அப்போது, ‘பெரியார் காலத்து தமிழ் நாட்டை உருவாக்குவோம்’ என்பதைத் தான் இலட்சியமாக வைத்து தொடங்கினோம். பகுத்தறிவை முதன்மையாகக் கொள்ளாமல், ஜாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்டு, கலந்து பேசி இந்த இயக்கத்தைத் தொடங்கினோம். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார், பெரியாரின் சுயமரியாதை இயக்க காலத்து சிக்கல்கள் வேறு, தற்போது சமுதாயத்தில் நிலவும் சிக்கல்கள் வேறு’ என்று அதுபோல  பெரியார் காலத்தில் மரண தண்டனை சிக்கல்கள் இல்லை. சுற்றுச் சூழல்...

பெரியார் பெரும் தொண்டர் வே.ஆனைமுத்து படத்திறப்பு -நினைவலைகள் வெளியீடு

பெரியார் பெரும் தொண்டர் வே.ஆனைமுத்து படத்திறப்பு -நினைவலைகள் வெளியீடு

பெரியாரிய பெரும் தொண்டர், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி நிறுவனர் வே.ஆனைமுத்து நினைவலைகள் வெளியீடு, படத்திறப்பு, கருத்தரங்கம், 02.01.2021 அன்று சென்னை நிருபர் சங்கத்தில் மாலை 3:30 மணியளவில் நடைபெற்றது. நிகழ்விற்கு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வாலாசா வல்லவன் தலைமை வகித்தார். முதல் நிகழ்வாக, வே. ஆனைமுத்து உருவப் படத்தை, முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் மு.நாகநாதன் திறந்து வைத்து வே. ஆனைமுத்து அவர்களுடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பின், நாடாளுமன்ற உறுப்பினர், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா நினைவு மலர் வெளியிட, திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பெற்றுக்கொண்டார். மலரை வெளியிட்டு உரையாற்றிய ஆ.இராசா, ‘காவியை வீழ்த்த அனைத்து கருப்புச் சட்டைகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்’ என்று உரையாற்றினார். இரண்டாவது அமர்வில், வே.ஆனைமுத்துவின் நினைவேந்தல் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் துரை...

கழகம் முன்னெடுத்த பெரியார் நினைவு நாள் நிகழ்வுகள்

கழகம் முன்னெடுத்த பெரியார் நினைவு நாள் நிகழ்வுகள்

சென்னை : பெரியாரின் 48ஆவது நினைவு நாள் நிகழ்வு 24.12.2021 அன்று காலை 8:30 மணியளவில் சென்னை இராயப்பேட்டை வி.எம். தெரு பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. முதலாவதாக தோழர்கள் கிருத்திகா, லீலா ஆகியோர் பெரியாரின் சிலைக்கு, தோழர்களின் கொள்கை முழக்கங்களுடன் மாலை அணிவித்தனர். அருகில் அமைத்திருந்த பெரியார் நினைவு மேடையில், களப்பணியில் உயர்நீத்த, கண்ணா – குமார் உருவப் படத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். பின் பெரியார் நினைவு நாள் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, சிம்சன், தியாகராயர் நகர், எம்.ஜி.ஆர். நகர், கிண்டி, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில், தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் அய்யனார், அன்பு தனசேகர் ஆகியோர் உட்பட சென்னை கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்....

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

சென்னை மாவட்டத்தின் கலந்துரையாடல் கூட்டம், 11.12.2021 அன்று மாலை 6 மணியளவில், திவிக தலைமையகத்தில், மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலில் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு கூடுதல் சந்தா சேர்ப்பது, கழகத்தின் அடுத்தக் கட்ட பணிகள், வரும் டிசம். 24இல் தந்தை பெரியார் நினைவு நாளில் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் தலையங்கத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வை நடத்துவது போன்றவை குறித்து விரிவாகப் பேசப்பட்டது. கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். நிகழ்வில், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், அன்பு தனசேகர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தோழர்களின் சில கேள்விகளுக்கு பதில் கூறியும், கழகத்தின் செயல்பாடுகள், திராவிடர் இயக்கத்தின் தேவை குறித்தும் விரிவாக உரையாற்றினார். பெரியார் முழக்கம் 16122021 இதழ்

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவிப்பு

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவிப்பு

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், 06.12.2021 அன்று காலை 9 மணியளவில் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மயிலாப்பூர் சுண்ணாம்பு கால்வாயில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அடுத்து, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் படத்திற்கு தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார் மாலை அணிவித்தார். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி, வட சென்னை யேசுகுமார், மயிலை சுகுமார், இராவணன், மனோகர் ஆகியோர் உட்பட சென்னை கழக தோழர்கள் கலந்து கொண்டனர். திருப்பூரில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 65ஆவது நினைவு நாள் நிகழ்வு திருப்பூர் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. 06.12.2021 அன்று காலை 10.00 மணியளவில் திருப்பூரில் அமைந்துள்ள புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கழகத் தோழர்கள்...

சட்ட எரிப்புப் போராட்டம் நடத்திய நவம்பர் 26இல் தோழர்கள் – ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

சட்ட எரிப்புப் போராட்டம் நடத்திய நவம்பர் 26இல் தோழர்கள் – ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

1957 நவம்பர் 26ஆம் நாள் அரசியல் சட்டத்தை அரசியல் நிர்ணயசபை ஏற்ற நாளாகும். அதே சட்டம் மதத்தை அடிப்படை உரிமையாக்கி, அதன் வழியாக ஜாதி இழிவுகளைக் காப்பாற்றுவதற்குப் பாதுகாப்பான பிரிவுகளை உள்ளடக்கியிருந்தது. ஜாதி ஒழிப்புக்குத் தடையாக இருந்த சட்டத்தின் உட்பிரிவுகளான 13(2), 25(1), 26(1), 26(2) மற்றும் 368 பிரிவுகளை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்துக்கு பெரியார் ‘நவம்பர் 27’அய் தான் தேர்வு செய்தார். ஒரு நாட்டின் அரசியல் சட்டப் பிரிவுகளையே 10,000 பேர் தீயிட்டுக் கொளுத்திய போராட்ட வரலாறு பெரியார் இயக்கத் துக்கு மட்டுமே உண்டு. சரியாக போராட்டத்திற்கு 24 நாட்களுக்கு முன் தஞ்சையில் நடந்த சிறப்பு மாநாட் டில் போராட்ட அறிவிப்பை பெரியார் அறிவித்தார். 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தோழர்கள் தண்டிக் கப்பட்டனர். தோழர்கள் எவரும் எதிர் வழக்காட வில்லை. ‘சட்டத்தை எரித்தேன்; தண்டனை ஏற்கத் தயாராக உள்ளேன்’ என்று நீதிமன்றத்தில் வாக்கு மூலம் தந்தனர்....

சூர்யாவுக்கு மிரட்டல் : பா.ம.க. பிரமுகர் மீது நடவடிக்கை கோரி சென்னை, மதுரையில் கழக சார்பில் மனு

சூர்யாவுக்கு மிரட்டல் : பா.ம.க. பிரமுகர் மீது நடவடிக்கை கோரி சென்னை, மதுரையில் கழக சார்பில் மனு

ஜெய்பீம்’ படத் தயாரிப்பாளர் நடிகர் சூர்யாவுக்கு எதிராக வன்முறை மிரட்டல் விடுத்த பா.ம.க. – மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை, மதுரையில் கழகத் தோழர்கள் காவல்துறையில் மனு அளித்தனர். சென்னையில் : ஜாதியை பிரதானமாக வைத்தே இயங்கும் பாமக தரப்பில் அதிக மிரட்டல்கள் ‘ஜெய்பீம்’ படத் தயாரிப்பாளர் நடிகர் சூர்யாவிற்கு வந்து கொண்டே உள்ளன. குறிப்பாக பாமக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, “நடிகர் சூர்யா அவர்களை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு இலட்சம் தருவதாகவும், சூர்யா தரை வழியாக எங்கும் பயணம் செய்யமுடியாது, வான் வழியாக தான் செல்ல முடியும்” என்றும் மிரட்டியுள்ளார். சமூக பதட்டத்தையும், வன்முறையையும் , ஜாதிய மோதலையும், இளைஞர்கள் மத்தியில் ஜாதிய வன்மத்தை விதைக்கும் வகையிலும், திட்டமிட்டு உள் நோக்கத்துடன் பேசியுள்ளார். இதற்கான, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி...

அன்பு தனசேகர் இல்ல மணவிழா : கழக ஏட்டுக்கு ரூ.50,000/- நன்கொடை

அன்பு தனசேகர் இல்ல மணவிழா : கழக ஏட்டுக்கு ரூ.50,000/- நன்கொடை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் -லதா இணையரின் மூத்த மகள் தமிழ்செல்வி – சிறீராம்குமார் மணவிழா வரவேற்பு நிகழ்வு 9.11.2021 அன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி,  தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், பேராசிரியர் சரஸ்வதி, மாணவர் நகலகம் உரிமையாளர் சவுரிராசன், மணிமேகலை, பொள்ளாச்சி மா. உமாபதி, தடா ஓ. சுந்தரம், வருமான வரித் துறை முதன்மை ஆணையர், செல்வகணேஷ், இணை ஆணையர் பி. நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர். தலைமை நிலையச் செயலாளர் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர். சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மணமக்களை நேரில் வந்து வாழ்த்தினார். மணமக்கள் சார்பாக ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு ரூ.50,000/-மும், குழுமூர் அனிதா அறக்கட்டளைக்கு ரூ.10,000/- அளிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 18112021...

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

கடந்த 10.01.2021 அன்று திருமணமான புதிய இணையர்கள் அறிவுமதி-தமிழன்பன், கழக வார ஏடான, ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ 5000-யை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் அண்ணா நினைவு நாள் கருத்தரங்கில் (பிப்.27) வழங்கினர். அதைத் தொடர்ந்து, சென்னை கழகத் தோழர் விஜயனும் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு நன்கொடையாக ரூ 1000 அளித்தார். 17.2.2021 அன்று தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி பிறந்த நாளன்று விரட்டுக் கலைக் குழு ஆனந்த் கழக ஏட்டிற்கு ரூ.2000 நன்கொடை அளித்தார். பெரியார் முழக்கம் 04032021 இதழ்

கழக சார்பில் தலைமை நிலையத்தில் ‘தா.பா.’ படத்திறப்பு

கழக சார்பில் தலைமை நிலையத்தில் ‘தா.பா.’ படத்திறப்பு

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் தா. பாண்டியன் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு தி.வி.க. தலைமை அலுவலகத்தில் 27.2.2021 அன்று நடைபெற்றது. படத்தை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். பெரியார் முழக்கம் 04032021 இதழ்