மேட்டூர் – சேலம் – சென்னை – கோவை – திருப்பூரில் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டங்கள்

சேலம் மேற்கு மாவட்ட திவிகவின் சார்பில் கழகத்தின் 11ம் ஆண்டு துவக்க நாளில் தெருமுனைக் கூட்டங்கள் 12.08.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையத்தில் பறை முழக்கம்,மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் கொள்கைப் பாடல்களுடன் துவங்கியது.

முதலாவதாக வழக்கறிஞர் கண்ணகி “பெரியாரின் தேவை, பெண்ணுரிமை” ஆகியவை குறித்து உரை நிகழ்த்தினார். அடுத்து கழகத்தின் பரப்புரைச் செய லாளர் பால்.பிரபாகரன்,  “திராவிடர் விடுதலைக் கழகம் கடந்து வந்த பாதைகளையும், தமிழக உரிமை களுக்காக கழகம் செய்த போராட்டங்கள், பரப்புரைகள் மற்றும் ஒன்றிய பிஜேபி அரசினால் நாம் எவ்வாரெல்லாம் வஞ்சிக்கப்படுகிறோம்” என்பதை பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார்.

கொளத்தூர் பேருந்து நிலையத்தில் திரளான பொதுமக்கள் உரையை கேட்டனர். பொது மக்களுக்கு திராவிடர் விடுதலைக்கத்தின் கடந்த 10 ஆண்டு கால பரப்புரை, போராட்டங்கள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை விளக்கி துண்டறிக்கை வழங்கப்பட்டது.

நிறைவாக கொளத்தூர் நகர செயலாளர்  அறிவுச்செல்வன் நன்றியுரை கூற தெருமுனைக் கூட்டம் 11 மணியளவில் கொளத்தூரில் நிறை வடைந்தது. அனைவருக்கும் கொளத்தூர் நகர கழகம் தேநீர் ஏற்பாடு செய்திருந்தனர்.

2ஆவது தெருமுனைக் கூட்டமாக மேட்டூர் ஆர்.எஸ். பகுதியில் காலை 11.30 மணிக்கு பறை இசை மற்றும் கொள்கைப் பாடல்களோடு தொடங்கியது.

முதலில் அறிவுமதி, பெரியார் தனது 94 வயதிலும் மூத்திர சட்டியை தூக்கிக் கொண்டு இந்த மக்களுக் காக பாடுபட்டு பெற்றுக் கொடுத்த கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவை குறித்தும் பெண் விடுதலைக்காக தந்தை பெரியார் ஆற்றிய பணி களையும் நினைவு கூர்ந்தார். அடுத்து கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் சிறப்புரை நிகழ்த்தினார்.

நிறைவாக மாணவரணி நாகராஜ் நன்றி கூற தெருமுனைக் கூட்டம் ஆர்.எஸ். பகுதியில் நிறை வடைந்தது. ஆர்.எஸ். படிப்பகத்தில் தோழர்களுக்கு மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது.

3ஆவது நிகழ்வாக மேச்சேரி பேருந்து நிலையத்தில் மாலை 3.00 மணிக்கு பறை இசை, பாடல்களுடன் தெருமுனைக் கூட்டம் தொடங்கி யது. சுதா தமது உரையில் “திராவிடர் விடுதலைக் கழக 10 ஆண்டு கால பணிகளையும், ஒன்றிய பிஜேபி அரசின் அவலங்களையும்” பொதுமக்களிடையே எடுத்து கூறினார். அடுத்து பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் சிறப்புரை யாற்றினார். மாலை 4  மணிக்கு  தெருமுனைக் கூட்டம் நிறைவடைந்தது.

4 ஆவது தெருமுனைக் கூட்டமாக மாலை 4.30 மணிக்கு நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் பறை இசை, பாடல்களுடன் தொடங்கியது.

முதலாவதாக ஆனந்தி “திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணிகள் குறித்தும்,பெரியார் கொள்கை யின் தேவைகள் குறித்தும்” பேசினார். அடுத்ததாக நங்கவள்ளி அன்பு “ஒன்றிய பி.ஜே.பி. அரசின் அவலங்களை குறித்து” பேசினார். நிறைவாக பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன்  நிறைவுரை நிகழ்த்தினார்  ஐஸ்வர்யா நன்றியுரையுடன் தெரு முனைக் கூட்டம் நிறைவடைந்தது. கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது.

5ஆவது நிகழ்வாக மேட்டூர் சின்ன பார்க் திடலில் மாலை 6 மணிக்கு தெருமுனைக் கூட்டம் பறை இசை மற்றும் பாடல்களுடன்  தொடங்கியது. முதலாவதாக தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல்  உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் “திராவிடர் விடுதலைக் கழகம் கடந்து வந்த பாதைகள்” பற்றி கூறினார். அடுத்து தேன்மொழி தனது உரையில் “1953இல் அன்றைய முதல்வர் இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தைப் போல தற்போதுள்ள ஒன்றிய பி.ஜே.பி. அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது என்றும் அதனை எதிர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்” என்றும் கூறினார்.

நிறைவாக பால்.பிரபாகரன் “திராவிடர் விடுதலைக்கழகம் கடந்து வந்த பாதைகள் பற்றியும், இந்து அறநிலையத் துறையில் பெண்களையும் பணியில் அமர்த்த திராவிடர் விடுதலைக்கழகம் எடுத்த முயற்சிகளையும் அதில் வெற்றி கண்டு தற்போது அறநிலையத் துறையில் பெண்கள் பணியில் இருப்பதற்கு திராவிடர் விடுதலைக் கழகம் தான் காரணம்” என்பதை குறிப்பிட்டு பேசினார்.

இரவு 8.30 மணியளவில் மேட்டூர் நகர பொருளாளர் முத்துக்குமார்  நன்றியுரை கூற தெருமுனைக் கூட்டம் நிறைவடைந்தது.

சேலம் மாவட்டம் முழுவதும் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய வேண்டும் ஏன்? என்பதை விளக்கி 3000 துண்டறிக்கைகள் பொது மக்களிடம் விநியோகிக்கப்பட்டது. மேட்டூர், நங்கவள்ளி ஆகிய பகுதிகள் முழுவதும் 200 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. நடைபெற்ற 5 தெருமுனைக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட பொறுப்பாளர்களும், தோழர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

சென்னை : திராவிடர் விடுதலைக் கழகத்தின்  11 ஆம் ஆண்டு தொடக்க நிகழ்வு காலை 9 மணியளவில், வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு, இரண்யா, இரம்யா, ஆதித்யா ஆகியோர்  மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து, பெரியார் சிந்தனைப் பலகைகள், வி.எம் தெரு, சைவ முத்தையா தெரு, பாலாஜி நகர், அஜந்தா பேருந்து நிறுத்தம்,இராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட 5 இடங்களில் திறக்கப்பட்டன.

மயிலாப்பூர் லஸ் கார்னர், விசாலாட்சி தோட்டம், மந்தைவெளி இரயில் நிலையம் ஆகிய இடங்களில் கழக கொடிகள் ஏற்றப்பட்டன. பொதுமக்களுக்கு இனிப்புகளை தோழர்கள் வழங்கினர்.

இறுதியாக, கழகத் தலைமை அலுவலகத்தில், தோழர்களின் ஒன்று கூடல் நிகழ்வு தொடங்கி நடை பெற்றது. கழகத்தின் பத்து ஆண்டுகால பயணம், தொடர்ந்து கழகத்தின் வேலைத் திட்டங்கள், பெரியார் கொள்கைகளை மக்களிடத்தில் எடுத்து செல்வது குறித்து விரிவாக கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். தொடர்ந்து, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், நாத்திகன், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி ஆகியோர் கருத்துகளை தெரிவித்தனர். நிகழ்வை மாவட்ட செயலாளர் உமாபதி ஒருங்கிணைத்தார்.

கோவை : திராவிடர் விடுதலைக் கழகம் 11-ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு கோவை மாவட்ட கழகத்தின் சார்பில் காந்திபுரம் பெரியார் சிலைக்கு மாவட்ட அமைப்பாளர் கிருட்டிணன் தலைமையில் மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. நேருதாஸ் உறுதிமொழி வாசித்தார். மாவட்ட செயலாளர் யாழ் வெள்ளிங்கிரி சிறப்புரையாற்றினார்.

பின்னர் சௌரிபாளையம் பகுதி கழகத்தின் சார்பாக சௌரிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் கழக கொடியேற்று விழா சிவராசு தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பா.இராம சந்திரன்  கொடி யேற்றினார்,  விஷ்ணு உறுதிமொழி வாசித்தார். இதில் மணிகண்டன் திமுக,  நந்தகோபால் காங்கிரஸ் ஆகிய தோழமை கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பங்கேற்ற தோழர்கள் : சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார், வெங்கட், புரட்சி தமிழன் ஆனந்த், சக்கரவர்த்தி, மணி, சபரிகிரி, மகிழ்வன், ராஜீ, நடராஜ், அரிதாசு, சதிசுகுமார், ஜின்னா, அமிலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

திருப்பூரில் : திராவிடர் விடுதலை கழகத்தின் 11 ஆவது ஆண்டு துவக்க நாள் நிகழ்வுகள் கொடி யேற்றம் மற்றும் கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் பரப்புரை பயணமாக திருப்பூர் மாவட்ட திவிக சார்பில் 12.08.2022 வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

முதல் நிகழ்வாக வீரபாண்டி பிரிவில் உள்ள பெரியார் படிப்பகம் அருகில் மாலை 03.00 மணியளவில் கழகத்தின் கொடி கழக தெற்குப் பகுதி அமைப்பாளர் தோழர் இராமசாமி தலைமையில் ஏற்றப்பட்டு பரப்புரை பயணம் துவங்கியது.

முதல் பரப்புரை மாலை 04.00 மணியளவில் செங்கப்பள்ளியில் நடைபெற்றது.திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து தலைமையில் பறை இசையுடன் நிகழ்வு தொடங்கியது.

பரப்புரையில் கழக இணையதள பொறுப்பாளர் பரிமளராசன்,தோழர் திலகவதி,தலைமைக் குழு உறுப்பினர் பன்னீர் செல்வம்,மாணவர் கழக பொறுப்பாளர் மகிழவன் ஆகியோர் உரையாற்றினர்.

கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி நிறைவுரையாற்றினார். முடிவில் தோழர் சரஸ்வதி நன்றியுரையாற்றினார்.

இரண்டாவதாக  குன்னத்தூரில் மாலை 05.00 மணியளவில் குன்னத்தூர் பேருந்து நிலையம் முன்பு மாநகரச் செயலாளர் மாதவன் தலைமையில் பறை யிசையுடன் தொடங்கி பரப்புரை நடைபெற்றது. மாணவர் கழக பொறுப்பாளர் மகிழவன் “மாநில உரிமைகளில் கல்வி வேலை வாய்ப்புகளில ஒன்றிய பாஜக அரசால் மறுக்கப்பட்ட செய்திகளை” விரிவாக எடுத்துரைத்தார்.

அடுத்து பேசிய இணைய தள பொறுப்பாளர் பரிமளராசன் “தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட திராவிடர் இயக்கத்தால் எப்படியெல்லாம் எந்த எந்த காலங்களில் வளர்ச்சியடைந்தது” என்பதை எடுத்துரைத்தார்.

கழகப் பொருளாளர் துரைசாமி”தமிழகத்தில் ஒன்றிய அரசின் மூலமாக எப்படியெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்” என்பதை எடுத்துரைத்தார்.  அய்யப்பன் நன்றியுரையுடன் குன்னத்தூரில பரப்புரை நிறைவடைந்தது. பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் முன்பு இப்பரப்புரை நடைபெற்றது.

இறுதியாக மாலை 07.00 மணிக்கு பெருமா நல்லூரில் நால் ரோடு சந்திப்பு பேருந்து நிறுத்தம் அருகில் மாநகரத் தலைவர் தனபால் தலைமையில் பறையிசையுடன் பரப்புரை தொடங்கியது. வசந்தி துவக்க உரையாற்றினார்கள்.

அடுத்து உரையாற்றிய மாணவர் கழக பொறுப்பாளர் மகிழவன் “ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் பற்றியும் பெரியார் அதனை எதிர்த்து அத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர விடாமல் தடுத்ததையும்,கல்வி வள்ளல் காமராசரின் கல்விப் பணி, தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வை” ஆகியவை குறித்து விரிவாகப் பேசினார்.

அடுத்து உரையாற்றிய இணையதள பொறுப்பாளர் பரிமளராசன் அவர்கள் “யார் இந்துக்கள், யார் இந்துவவாதிகள், மக்களின் மத நம்பிக்கையை பயன்படுத்தி அவர்களை தவறாக திசை திருப்பி விட்டு அதே மக்களின் உரிமைகளை எப்படி பறிக்கிறார்கள் என்பதையும், சனாதன வாதிகள் சாதி, மத பிளவுகளை உண்டாக்கி அதை வைத்து எப்படி ஏமாற்றுகின்றார்கள் என்பதையும் மறுக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைகள் பற்றியும் திராவிடர் இயக்கத்தின் சாதனைகள்” பற்றியும் விரிவான உரையாற்றினார்.

கழகப் பொருளாளர் துரைசாமி விவசாயிகள் நிறைந்துள்ள பரப்புரை பகுதியில் “ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரத் திட்டமிடும் புதிய வேளாண்மை சட்டத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும்,சனாதனவாதிகள்  மனுசாஸ்திரப்படி மக்களை எப்படியெல்லாம்  பிரித்து இழிவுபடுத்தப் படுகிறார்கள்” என்பதை விளக்கி உரையாற்றி னார்கள்.

இறுதியாக அந்த பகுதியை சேர்ந்த திமுகவின் முன்னாள் மாவட்டப் பிரதிநிதி அண்ணாதுரை, திருப்பூர் மாவட்ட மதிமுக தொழிற்சங்க செயலாளர் குமார்கழகத்தின் பரப்புரையை பார்த்து பாராட்டி பரப்புரையில் ஈடுபட்ட தோழர்கள் அனைவருக்கும் இரவு உணவு வழங்கி சிறப்பு செய்தனர்.

பரப்புரை நடைபெற்ற இடங்களில் கூடியிருந்த பொதுமக்கள் கடைகள் ஆகியவற்றில் துண்டறிக்கை வழங்கப்பட்டு நிதி உதவி பெறப்பட்டது. மூன்று இடங்கள் சேர்த்து மொத்தம் 2610 ரூபாய்களை  பொதுமக்கள் நன்கொடையாக அளித்தனர். தோழர்கள் முத்து லட்சுமி, ஸ்ரீசா, மாரிமுத்து, வசந்தி, ரஞ்சனி, சரஸ்வதி ஆகியோர் துண்டறிக்கை வழங்கி பொது மக்களிடம் வசூல் செய்தனர்.

கழகத்தின் திருப்பூர் தெற்குப் பகுதி அமைப்பாளர் தோழர் இராமசாமி அவர்கள் 1000 ரூபாய், குன்னத்தூரில் கழக ஆதரவாளர்கள் சிவா அவர்கள் 500 ரூபாய் நன்கொடையும்,தோழர் சீனிவாசன் அவர்கள் பரப்புரை குழுவினர் அனைவருக்கும் தேனீர் வழங்கியும் சிறப்புச் செய்தார்.

பரப்புரையில் கலந்து கொண்ட தோழர்கள். :  கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம், இணையதள பொறுப்பாளர் பரிமளராசன், மாநகரச் செயலாளர் மாதவன், மாநகரத் தலைவர் தனபால், மாநகர அமைப்பாளர் முத்து, மாணவர் கழக பொறுப்பாளர் மகிழவன், அய்யப்பன், சரஸ்வதி, முத்து லட்சுமி, வசந்தி, திலகவதி, ஸ்ரீசா, மாரிமுத்து, கவுசல்யா, ரஞ்சனி, மதன், சிறுவர்கள் வெற்றி, ரித்திஷ்சாய் மற்றும் பறை இசைக் கலைஞர்கள்.   ட

பெரியார் முழக்கம் 18082022 இதழ்

You may also like...