கொலைகார சாமியாரை கைது செய்யக் கோரி கழகம் புகார் மனு

சென்னை : “டெங்கு, மலேரியா, காலரா போன்று சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று பேசிய மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி நிர்ணயித்த அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ ஆச்சாரியாவை கைது செய்து சிறையில் அடைக்க கோரி கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் இராயப்பேட்டை காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, சனாதன சக்திகளின் கனவு தமிழ்நாட்டில் ஒருபோதும் பலிக்காது, சனாதனத்திற்கு எதிரான கருத்தில் உறுதியாக நிற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் துணை நிற்கும் என்று கூறினார்.

கோவை : கோவை மாநகரக் கழக சார்பில் காட்டூர் காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கழக அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் திண்டுக்கல் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

திருப்பூர் : 06.09.2023 அன்று கழகப் பொருளாளர் துரைசாமி, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், மாவட்டத் தலைவர் முகில் இராசு, தோழமை அமைப்புத் தோழர்கள் ஆகியோர் மாநகரக் காவல் துறையினர் இடத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

சேலம் : தாரமங்கலம் ஒன்றியக் கழகம் சார்பில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைக்கு 10 கோடி என கொலை மிரட்டல் விடுத்த உத்திரபிரதேச சாமியார் பரம்ஹன்ஸ ஆச்சார்யாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 09.09.2023 சனிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் தாரமங்கலம் அண்ணா சிலை அருகில்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கே.ஆர்.தோப்பூர். அஜித்குமார் தலைமை வகித்தார்.

சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் க.சக்திவேல், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் கு.சூரியகுமார், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் பொ. கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சி. தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.ஆர்.தோப்பூர் கண்ணன் தொடக்கவுரையாற்றினர்.

தலைமைக்குழு உறுப்பினர் அ.சக்திவேல், தலைமைக்குழு உறுப் பினர் காவை ஈசுவரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு, சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் மாவட்ட அமைப்பாளர் பாலு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவா, விசிக கொளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சேட்டு குமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சேலம் மாவட்ட துணை தலைவர் சந்தோஷ்குமார், ஆத்தூர் மகேந்திரன், இளம்பிள்ளை கோ.திவ்யா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன் அவர்களுக்கு பரம்ஹன்ஸ ஆச்சார்யா வேட மணிந்து கைவிலங்கு போட்டு செருப்பு மாலை அணிவிக்கபட்டு, தோழர்கள் சாமியார் பாரம்ஹன்ஸ ஆச்சார்யா வின் படத்தை கிழித்தும், தீயிட்டு கொளுத்தியும் எதிர்ப்பை பதிவு செய்தனர். நிறைவாக குடந்தை பாலன் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 14092023

You may also like...