விநாயகன் ஊர்வலம்: கோவை, சென்னை கழக சார்பில் காவல்துறையிடம் மனு

கோவையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், உயர்நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றக் கோரி கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.08.22 திங்கள் காலை கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடக்கும் ஊர்வலங்கள் மற்றும் சிலை அமைப்பது ஆகியவை குறித்து தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற கோரியும், சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்ட் ஆஃப் பாரிஸ், சுட்ட களிமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது என்ற அரசாணையை சரியாக பின்பற்ற கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலை வைக்கப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் கோஷங்கள் போடுவதை வீடியோ பதிவு செய்வோம் நீங்கள் யாரேனும் விதிமுறை மீறல் சிலையை பார்த்தால் ஆதாரம் அனுப்புங்கள் அதற்கும் நடவடிக்கை எடுப்போம்.

அரசு ஆணையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநகர தலைவர் தோழர் நேருதாஸ் தலைமையில் கழகத் தோழர்கள் நிர்மல்குமார், கிருட்டிணன், வெங்கட், மாதவன் சங்கர், இயல், துளசி ஆகியோர் கலந்து கொண்டனர்..

சென்னையில் : சென்னையில் 18.08.2022 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், விநாயகர் சிலைகளை நீதிமன்றத்தின் உத்தரவுகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி வைக்கவும், அதில் அரசியல் கட்சிகள் தலையீடு இல்லாமலும், பிளாஸ்ட் ஆஃப் பாரிஸ், சுட்ட களிமண் ஆகியவைகளை நீர் நிலைகளில் கரைக்க கூடாது போன்ற வழிமுறைகளை முறையாக பின்பற்றக் கோரி, சென்னை காவல் ஆணையர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய இடங்களில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் தலைமையில்  மனு அளிக்கப்பட்டது.உடன்,சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, மயிலை சுகுமார், இராவணன், மனோகர், கோபி ஆகியோர் உடனிருந்தனர்.

 

பெரியார் முழக்கம் 25082022 இதழ்

You may also like...