சென்னை மாவட்டக் கழகத்துக்கு திருவல்லிக்கேணி பகுதி தோழர்கள் ‘ஸ்கார்பியோ’ கார் பரிசளிப்பு

சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி கழகத் தோழர்கள் மாவட்டக் கழகப் பயன்பாட்டுக்கு ஸ்கார்பியோ கார் ஒன்றை வாங்கி (2009ஆம் ஆண்டு மாடல்) கழகத்துக்கு அளித்துள்ளனர்.

சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதியிடம் அவரது பிறந்த நாளான பிப். 17 அன்று இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், உமாபதியிடம் வழங்கினார். கழகப் பணிகளுக்கு இந்த கார் பயன்படும்.

தனது பிறந்த நாளையொட்டி தோழர்கள் வழங்கிய ரூ.2500/- நன்கொடையை கழக ஏட்டுக்கு பொதுச் செயலாளரிடம் வழங்கினார் இரா. உமாபதி.

பெரியார் முழக்கம் 02032023 இதழ்

 

You may also like...