கரைபுரளும் உற்சாகம்; விளிம்புநிலை மக்களின் எளிய நன்கொடைகள் முழு வீச்சில் மாநாட்டுப் பணிகள்

ஏப். 29, 30 தேதிகளில் கழக மாநாட்டுப் பணிகளில் கழகச் செயல் வீரர்கள் முழு வீச்சில் களத்தில் இறங்கியுள்ளனர்.

கோவை : கோவை மாவட்டக் கழகத்தினர் ஏப்ரல் 8-ஆம் தேதி மாலை 5 மணியளவில் வ.உ.சி மைதானத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டலக்குழுத் தலைவர் கதிர்வேல், மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் நா.மாலதி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.ஆ.ரவி, வடவள்ளி சண்முகசுந்தரம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார்கள்.

கலந்து கொண்டோர்: தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார், கிருட்டிணன், வெங்கட், மாதவன் சங்கர், துளசி, நிலா.

ஏப்ரல் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது.

பொள்ளாச்சி : கழக மாநாட்டு விளக்க தெருமுனைக் கூட்டம் ஏப்ரல் 8, 9 ஆகிய தேதிகளில் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாவட்டச் செயலாளர் யாழ். வெள்ளிங்கிரி தலைமையில் நடைப்பெற்றது. பெரியாரியலாளர் விசயராகவன் தெருமுனைக் கூட்டத்தை தொடங்கி வைத்தார். பாடகர் கண்ணையன் புரட்சிகரப் பாடல்களை பாடினார்.

இதில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்புச் செயலாளர் காசு.நாகராசன், மக்கள் விடுதலை முன்னணித் தலைவர் மாரிமுத்து,  தமிழ்ப் புலிகள் கட்சி வானூகன் மாநாட்டை விளக்கி சிறப்புரை யாற்றினர். சபரிகிரி, ஆனந்த், வினோதினி, அரிதாசு, பிரபாகரன், நடராஜன், பிரபு, கணேசு, வெங்கட், கிருபா, மணி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

சென்னை: ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், த.பெ.தி.க. தலைவர் ஆனூர் ஜெகதீசன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வாலாசா வல்லவன், ஆதிதமிழர் பேரவைத் தலைவர் அதியமான், த.பெ.தி.க. துணைத் தலைவர் மூத்த வழக்கறிஞர் துரைசாமி, தலைமை நிலையச் செயலாளர் வழக்கறிஞர் இளங்கோவன், உயர்நீதிமன்ற கழக வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோரை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், சேத்துப்பட்டு இராசேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் வழங்கினார்கள்.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு! விளக்கக் கூட்டம், ஏப்ரல் 13, வியாழன் மாலை 5 மணிக்கு அயனாவரத்தில், சேத்துப்பட்டு இராசேந்திரன் தலைமையில் நடைபெறுகிறது.

திமு கழகப் பொதுக்குழு உறுப்பினர் சைதை மா. அன்பரசன், கழக தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி மற்றும் சி.மணிவண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

மயிலைப் பகுதி சார்பில் துண்டறிக்கை மற்றும் கடைவீதி வசூல், ஏப்ரல் 5, 6ஆம்  தேதிகளில் திருவான்மியூர் பகுதி கடைவீதிகளில் நடைபெற்றது.

திருவல்லிக்கேணி பகுதிக் கழகம் சார்பாக துண்டறிக்கை மற்றும் கடைவீதி வசூல், ஏப்ரல் 3-ஆம் தேதி மாலை 7 மணியளவில், ஆதாம் மார்கெட்  பகுதி கடைவீதிகளில் நடைபெற்றது.

ஏப்ரல் 4 ஆம் தேதி வேளச்சேரி பேருந்து நிலையப் பகுதிகளிலும் நடைபெற்றது.

ஏப்ரல் 6 ஆம் தேதி சேப்பாக்கத்தில், ஏப்ரல் 7ஆம் தேதி மாலை 7 மணியளவில் தரமணியில் உள்ள கடைவீதிகளிலும் நன்கொடை திரட்டும் பணிகளை மேற்கொண்டனர்.

கிண்டி, மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் உள்ள 8 இடங்களில் கழகத் தோழர்கள் சுவரெழுத்துப் பணியை மேற்கொண்டனர்.

பங்கேற்றோர் : திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் அருண், பகுதி அமைப்பாளர் இராஜேஷ், எட்வின் பிரபாகரன், மாணிக்கம், குமார், ப்ரீத்தி, ரம்யா, விஜயகாந்த், சரண், யாழினி, வீரா, சூர்யா.

மயிலைப் பகுதி: மயிலைப் பகுதித் தலைவர் இராவணன், மனோகர், ஓவியா, இளவரசன், அஜித், பிரவின், கார்த்திக், பார்த்திபன், உமாபதி, சிவா.

சேலம் : சேலம் மாவட்டக் கழக சார்பில் மாநாட்டு நன்கொடை திரட்டும் பணி, ஏப்ரல் 3 ஆம் தேதி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் கோவிந்தராஜ், மேட்டூர் நகர தலைவர் மார்ட்டின் ஆகியோர் தலைமையில் காலை 11:30 மணிக்கு நடைபெற்றது மேட்டூர் நகரத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் மாநாட்டு நிதி வழங்கி பெரும் ஆதரவு தெரிவித்தனர். ரூ. 49,610 நன்கொடை திரட்டப்பட்டது.

பங்கேற்றோர் : கோவிந்தராஜ், மார்ட்டின், பாஸ்கரன், கிட்டு, குமரப்பா, அம்ஜத்கான், ரத்தினசாமி, சுந்தரம், தேவராசு, முத்துராஜ், தர்மன், திவாகர், மாதையன், விஜய், திவாகர், கீதா, சீனி, விவேக், முரளி, ஜெகதீஷ், நாகராஜ், பெர்னாட், ராமச்சந்திரன், பிரபு, இந்திராணி, அருள், ராஜேந்திரன்,  அன்பு, கொளத்தூர் சுதா, ராமமூர்த்தி, அறிவு செல்வன், சரஸ்வதி, சுரேஷ், மாரி செட்டி உள்ளிட்டோர். பங்கேற்ற தோழர்களுக்கான மதிய உணவை மார்ட்டின்  ஏற்பாடு செய்தார்.

காவலாண்டியூர்: கழக மாநாட்டினை ஒட்டி காவலாண்டியூர்  பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் சத்தியநாதன் ரூ.50,000 – யை கழகத் தலைவரிடம் வழங்கினார்.

ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று காவலாண்டியூர் கிளை சார்பில் சேலத்தில் தனிநபர் நன்கொடை திரட்டும் பணி  நடைபெற்றது.  ரூ.22,500/- நன்கொடை திரட்டப்பட்டது.

பங்கேற்றோர் : கழகத் தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சித்துசாமி, கண்ணையன், கொளத்தூர் விஜி, கொளத்தூர் தீனா உள்ளிட்டோர்.

நங்கவள்ளி : ஏப்ரல் 6 ஆம் தேதி எடப்பாடியில் நங்கவள்ளி ஒன்றியக் கழகச் செயலாளர் இராசேந்திரன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் வியாபார பெருங்குடி மக்களிடத்தில் நன்கொடை திரட்டும் பணி நடைபெற்றது. ரூ.17,620 நன்கொடை திரட்டப்பட்டது.

பங்கேற்றோர் : தேவராஜ், முத்துராஜ், அண்ணாதுரை, ஜெகதீஷ், நாகராஜ், சக்திவேல், சுசி, விவேக், நங்கவள்ளி இந்திராணி, நிறைமதி, பன்னீர்செல்வம், அருள்குமார், ராஜேந்திரன், அன்பு, கொளத்தூர்  ராமமூர்த்தி, அறிவுச்செல்வன், மாரி, சரஸ்வதி, சுதா, கனலி, சங்ககிரி செந்தில்குமார் உள்ளிட்டோர்.

சேலம் கிழக்கு மாவட்டக் கழக சார்பில் ஏப்ரல் 07 ஆம் தேதி குரங்குச்சாவடி பகுதிகளில் மாநாட்டு நன்கொடை ரூ. 21,200 திரட்டப்பட்டது.

இதில் பெரும் தொகையாக தமிழக வாழ்வுரிமை கட்சி சேலம் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழரசன் ஆகியோர் மாநாட்டு நன்கொடையாக ரூ.20,000 வழங்கினார்கள்.

பங்கேற்றோர்: பெரியார் விழுது நிலா, தமிழ், கிருஷ்ணன், தங்கதுரை, பிரபாகரன், அருள் பாண்டியன், திவ்யா, தேவராஜ், இளம்பிள்ளை ரவி, வெள்ளார் சிவா ஆகியோர்.

ஏப்ரல் 08 ஆம் தேதி உக்கம்பருத்திக்காடு கிளைக் கழக சார்பில் திரட்டப்பட்ட தொகை ரூ.1,00,000  தொகையை கிளைக்கழகத் தலைவர் சுப்பிரமணியம் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார்.

செல்வேந்திரன், சுரேஷ், கொளத்தூர் விஜி, இராமமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஏப்ரல் 8 ஆம் தேதி தாரமங்கலம், குரங்குசாவடி ஆகிய பகுதிகளில் நன்கொடை திரட்டும் பணி நடைபெற்றது. ரூ.9000 திரட்டப்பட்டது.

பங்கேற்றோர் : காவை ஈசுவரன், கிருஷ்ணன், தங்கதுரை, திவ்யா, தேவராஜ், அருள் பாண்டியன், நிலா, சேகர், செல்வமணி உள்ளிட்டோர்.

ஈரோடு : ஏப்ரல் 3.4,5 ஆகிய தேதிகளில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமையில் ஈரோட்டில் நன்கொடை திரட்டும் பணி நடைபெற்றது. மூன்று நாளில் ரூ. 34,160 நன்கொடை திரட்டப்பட்டது.

பங்கேற்றோர் : ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் செல்வராசு, மாவட்டச் செயலாளர் எழிலன், சி.எம்.முருகேசன், சிவகுமார் ஆசிரியர், குமார், நங்கவள்ளி கிருஷ்ணன், இளம்பிள்ளை திவ்யா, பெரியார் விழுது நிலா,சுதர்சன், ஆனந்தி, காவை விக்னேஷ், தங்கதுரை, சந்திரசேகர், திருப்பூர் சங்கீதா, சேலம் தேவராஜ், ஹரி, முத்துராஜ், விருதுநகர் செந்தில், பிரபாகரன், இளம்பிள்ளை சேகர், அஜித்குமார், மு. சு. தோப்பூர், கிருஷ்ணன், மணிமேகலை உள்ளிட்டோர்.

திருப்பூர் : கழக மாநில மாநாட்டை ஒட்டி திருப்பூர் மாவட்டக் கழகத்தினர் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேசு குமார், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராசு, திமுக செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.மணி, சிவபாலன் மற்றும் மேங்கோ பழனிச்சாமி ஆகியோரை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார்கள்.

திமுக செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.மணி ரூ.5000 நன்கொடை வழங்கினார்.

பெரியார் முழக்கம் 13042023 இதழ்

You may also like...