கழகம் முன்னெடுத்த பொங்கல் விழாக்கள்

மயிலைப்பகுதி 8ம் ஆண்டு தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா பரிசளிப்பு – கலை நிகழ்ச்சிகள் 15.01.2024 அன்று சுப்பராயன் சாலை பெரியார் படிப்பகம் முன்பு நடைபெற்றது.

நடனம் – சிலம்பாட்டம் – குத்துச்சண்டை – மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தென்சென்னை மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் சரவணன், விசிக 126வது வட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, மயிலாப்பூர் கிழக்கு பகுதிச் செயலாளர் முரளி, மயிலாப்பூர் மேற்கு பகுதிச் செயலாளர் நந்தனம் கி.மதி ஆகியோர் பரிசளித்து சிறப்பு செய்தனர்..

Arun Ace Dance குழு, ஆசான் ஆதி கேசவன் சிலம்பம் குழு, VS Boxing Club குழு மற்றும் SS மயிலாட்டம் குழுவினருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர்.

மயிலைப் பகுதி பொங்கல் விழாக்குழு மயிலைப்பகுதி : தி.இராவணன், க.சுகுமாறன், ம.மனோகர், அ.சிவா, ஜா.உமாபதி, அ.பார்த்திபன், சீ.பிரவீன்குமார்.

வட சென்னை : தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சேத்துப்பட்டு வைத்தியநாதன் தெருவில் விளையாட்டு போட்டிகள் – பரிசளிப்பு விழா –  கலை நிகழ்ச்சிகள் 15.01.2024 அன்று நடைபெற்றது.

விழாவில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, சேத்துப்பட்டு இராசேந்திரன், டேவிட் பெரியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். விழாவை வடசென்னை வேலு ஒருங்கிணைத்தார்.

திருப்பூர் : திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 14ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா 21.01.2024 ஞாயிறு அன்று மாஸ்கோ நகரில் நடைபெற்றது.

விழாவிற்கு மாநகரக் கழகச் செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். விழாவினை கழகப் பொருளாளர் துரைசாமி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அப்பகுதி வாழ் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

மாலை பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிஷா பாடல்களை பாடினார். யாழ் இசையின் சிலம்பாட்டம், நிமிர்வு கலை குழுவினரின் பறை இசை ஆகியவை நடைபெற்றது.

மாநகர அமைப்பாளர் முத்து வரவேற்புரையாற்றினார், மாவட்டத் தலைவர் முகில்ராசு, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, நவீன மனிதர்கள் குழு பாரதி சுப்புராயன், கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் கருத்துரையாற்றினர்.

விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு கழக அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈஸ்வரன் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்..

நிகழ்வுகளில் பங்கேற்ற மருத்துவ  மாணவர் இளம் பாரதி, தொல்லியல் மாணவர் கனல்மதி, வழக்கறிஞர் மாணவர் கௌதம் ஆகியோருக்கு புத்தகம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிறைவாக சங்கீதா நன்றியுரை நிகழ்த்தினார்.

மாவட்டத் தலைவர் முகில்ராசு, மாவட்டச் செயலாளர் நீதிராசன், தெற்கு பகுதிச் செயலாளர், ராமசாமி, மாநகரத் தலைவர் தனபால்  மாநகர அமைப்பாளர் முத்து, 15.வேலம்பாளையம் அமைப்பாளர் மாரிமுத்து, கோமதி, அய்யப்பன், ராஜ்குமார், நாகராஜ், அய்யா ராமசாமி, சிரிஜா, இரமேசு, கணபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெரியார் முழக்கம் 25012024 இதழ்

You may also like...