சனாதனத்தை வீழ்த்துவோம் – பெரியார் பிறந்தநாள் தோழர்கள் தயாராகிறார்கள்

கோவை மாநகர  திராவிடர் விடுதலைக் கழக  கலந்துரையாடல் கூட்டம் 27.8.2022 மாலை 4மணி முதல் 6.30 வரை  வழக்கறிஞர்  கார்கி  அலுவலகத்தில்  நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  1. எதிர்வரும் செப் – 17 பெரியார் 144ஆவது பிறந்தநாளில் காலை 9 மணிக்கு கோவை காந்திபுரம் பெரியார் சிலைக்கு மாநகர தலைவர் நேருதாசு தலைமையில்  மாலை அணிவித்து   துண்டறிக்கை வழங்குவதெனவும் தொடர்ந்து சித்தாபுதூர், ரத்தினபுரி ஆறு முக்கு, பீளமேடு, காந்தி நகர், சவுரிபாளையம், உக்கடம், டுழு தோட்டம், பனைமரத்தூர், சூலூர், வடபுதூர், அன்னூர், மேட்டுப்பாளையம்  பகுதிகளில்  படத்திறப்பு விழா நடத்துவது.

2 .        செப் – 17 பெரியார் பிறந்தநாள் முடிந்த பிறகு கோவை மாவட்டத்திற்குட்பட்ட நகர கிராமப் பகுதிகளில்  தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது.

  1. பெரியார் பிறந்தநாள் விழா சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம் சுவரொட்டிகள்  800 அச்சடித்து கோவை மாவட்டத்தில் ஒட்டுவது.
  2. சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம் துண்டறிக்கை 1000 அடித்து பொதுமக்களிடம் வழங்கி பிரச்சாரம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.

கலந்து கொண்ட தோழர்கள் : சூலூர் பன்னீர்செல்வம், நேரு தாசு, நிர்மல் குமார், கிருஷ்ணன், வெங்கட், மாதவன் சங்கர்,  புரட்சித் தமிழன், சதீஷ்குமார், பொங்கலூர் கார்த்தி, மருதாசலம், விஷ்ணு, இராமகிருஷ்ணன், எழிலரசன்.

கலந்துரையாடல் கூட்டம் நடத்திட அலுவலகம் கொடுத்து உதவிய வழக்கறிஞர் கார்கிக்கும் தோழர்கள் அனைவருக்கும் புரட்சித் தமிழன் தேநீர் வழங்கினார்.

சேலம் : சேலம் மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் 28-08-2022 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் பெருமளவில் தோழர்கள் கலந்து கொண்டு தாங்களின் சிறப்பான கருத்துகளை எடுத்துரைத்தார்கள். கூட்டத்தை மாவட்ட செயலாளர் டேவிட்  தொடங்கி வைத்தார்.

தோழர்களின் கருத்தின் குறிப்புகள்:  1. இனிவரும் காலங்களில் கமிட்டி கூட்டங்கள் தோழர்களின் இல்லங்களில் நடத்தலாம்.  2. ஓராண்டுக்கான பயணத்திற்கான கொள்கை வகுத்தல்.  3. நகரத்திற்கான அலுவலகம் தேவை. 4. பெரியார் பிறந்தநாள் விழாவிற்கு வரும் தோழர்களுக்கு காலை சிற்றுண்டி அளிப்பது. 5. வாகன பேரணிக்கு தோழர்கள் தங்களுடன் மற்றுமொருவரை அழைத்து வருவது. 6. விரைவில் பொதுக்கூட்டம் நடத்துவது. 7. பொருளாதார கட்டமைப்புக்கு தேவையான மாத சந்தா வாய்ப்புள்ள தோழர்களிடம் பெறுதல். 8.        புதிய தோழர்களை இணைத்தல்; 9. படிப்பகாங்கள் திறப்பது. 10. நகர பகுதிகளில் கொடி ஏற்றுதல்  11.  நகர பகுதிகளில் பெரியார் விழிப்புணர்வு போர்டு புதிதாக வைப்பது பழையதை சரி செய்வது.  12. இதுவரை தெருமுனை கூட்டம் நடத்தாத இடங்களில் கூட்டங்கள் நடத்துவது. 13. பள்ளி கல்லூரி மாணவ மாணவியரிடம் பெரியார் கொள்கைகளை கொண்டு சேர்ப்பது. 14. சேலம் மாவட்டம அளவில் குடும்ப விழா நடத்துவது. 15.      பயிற்சி வகுப்புகள் நடத்துவது. 16. இணையாதள வானொலி ஆரம்பிப்பது. 17. பெரியார் குறித்து தோழர்களின் கருத்துகளை வானெலியில் ஒலிபரப்பு செய்வது. 18. பேச்சு கவிதை ஓவியப்போட்டிகள் நடத்துவது. 19.  DVK IT WING சேலம் நகரம் ஆரம்பிப்பது. 20. பெரியார் பிறந்தநாள் அன்று ஆட்டோவில் பிரச்சாரம் செய்வது. 21. பெரியார் மூகமுடி அணிவது. 22. இயக்கத்திற்கு தேவையான Speaker and MIC வழங்குவது. 23. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வராத தோழர்களுக்கு வரச் செய்வது ஆகியவை கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தினை வெற்றி முருகன் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இறுதியில் நன்றி கூறினார்.   கலந்துரையாடல் காலை 11.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணிக்கு முடிந்தது. தொடங்கியது முதலே இடைவேளையின்றி  கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

சென்னை : திருவல்லிக்கேணி பகுதி கலந்துரையாடல், 19.08.2022 மாலை 6 மணிக்கு, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் ப.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில், சமூகநீதி நாள், விநாயகர் சிலை ஊர்வலம் எதிர்ப்பு, பகுதி கழகத்தின் அடுத்தகட்ட செயல்பாடு உள்ளிட்டவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம், இலாயிட்ஸ் சாலையில் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.  பெரியார் பிறந்தநாளிற்கு, திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சுவரெழுத்துக்கள் எழுதுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பொதுக்கூட்டத்திற்கு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, திமுக தலைமைக் கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் இராஜிவ் காந்தி உள்ளட்டவர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. கலந்துரையாடலில், மாவட்ட செயலாளர் உமாபதி, மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ், பகுதி தோழர் மோகன் உட்பட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 01092022 இதழ்

You may also like...