சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டங்கள் சென்னை மாவட்டக் கழகம் சார்பாக இரண்டாவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது பின்வருமாறு :-

ஜுலை 15-ஆம் தேதியன்று ராயப்பேட்டை இலாயிட்ஸ் காலனி மற்றும் வி.எம்.தெருவிலும், ஜுலை 17-ஆம் தேதியன்று இராயபேட்டை பகுதிகளில் உள்ள கொலைகாரப்பேட்டை மற்றும் ராயப்பேட்டை பெருமாள் கோயில் வீதியிலும், ஜுலை 18-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் NKT பள்ளி அருகில் மற்றும் திருவல்லிக்கேணி பி.வி.நாயக்கன் சாலையிலும், ஜுலை 19-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் இஸ்ஸபா தெரு மற்றும் ஷேக் தாவூத் தெருவிலும் ஜூலை 20-ஆம் தேதியன்று மீசார்பேட்டை மார்கெட் மற்றும் ஜாம் பஜார் சிட்டிபாபு சாலையிலும், ஜுலை 21-ஆம் தேதியன்று திருவல்லிக்கேணி மாணிக்கவாசகம் தெரு மற்றும் தேவராஜ் தெருவிலும் ஜுலை 22-ஆம் தேதியன்று ஆயிரம் விளக்கு மாடர்ன் பள்ளி அருகில் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை அருகிலுள்ள மக்கிஸ் கார்டனிலும் நடைபெற்றது.

நாத்திகன் – உமாபதி குழுவின் அரசியல் நய்யாண்டி நிகழ்ச்சியுடன் ஒவ்வொரு கூட்டமும் தொடங்கியது. பாடகர் ஜெய்பீம் அறிவுமானனின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கூட்டங்களில் தலைமை நிலையச் செயலாளர் தபசி.குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி,அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் வ.அரங்கநாதன், விசிக பகுதிப் பொறுப்பாளர் விடுதலைச் செழியன், சேத்துப்பட்டு இராசேந்திரன், எட்வின் பிரபாகரன், ஜெயபிரகாசு, அன்னூர் விஷ்ணு, திருப்பூர் பிரசாந்த், தேன்மொழி ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.

கூட்டத்தின் இடையே கழகத் தோழர்கள் கடைவீதி வசூல் மேற்கொண்ட பொதுமக்கள் தங்களது ஆதரவை தெரிவித்து தாராளமாக நன்கொடையளித்தனர். இதில் மொத்தம் 20,700/- நன்கொடை திரட்டப்பட்டது.

நாளுக்கு நாள் கூட்டத்திற்கு பெருகும் மக்கள் ஆதரவை கண் கூடாக பார்க்க முடிகிறது, நேரில் வந்து வாழ்த்திச் செல்கிறார்கள், தாராளமாக நிதியுதவி வழங்குகிறார்கள், இது தோழர்களுக்கு புதிய உத்வேகத்தை தருகிறது. 200 தெருமுனைக் கூட்டங்களை அறிவித்து, இதுவரை 24 கூட்டங்களை சென்னை மாவட்டக் கழகம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலம் : கொளத்தூர் ஒன்றியம், காவலாண்டியூர் கிளைக் கழக சார்பில் ஜுலை 22-23 ஆகிய தேதிகளில் கண்ணாமூச்சி உப்பு கல்லூர் மற்றும் நெடுஞ்செழியன் நகரில் எது சனாதனம் ? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது.

சென்னப்பன் வரவேற்புரையாற்ற தொடங்கியது. கண்ணையன், மாரி தலைமை தாங்க சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார், கண்ணாமூச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர், கே.எஸ்.சண்முகம் முன்னிலை வகித்தனர்.

சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு பகுத்தறிவு பாடல்களை பாடினார், காவை இளவரசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை தொடர்ந்து தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன், சித்துசாமி, தமிழ்நாடு மாணவர் கழக திருப்பூர் மகிழவன், மேட்டூர் சுகந்தன், சேட்டுகுமார் கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் வி.சி.க. ஆகியோர் சிறப்புரையாற்றினர். அபிமன்யு நன்றி கூறினார்.

பொன்னுசாமி, கொளத்தூர் விஜி, காவை சசிகுமார், இளவரசன், சந்திரன், பச்சியப்பன், தங்கராசு, கொளத்தூர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கண்ணாமூச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சேகர் ஏற்பாடு செய்தார்.

நங்கவள்ளி கிளைக் கழகத்தின் சார்பில் 23.07.2023 ஞாயிறு அன்று முதல் கூட்டம் இருப்பாளி பேருந்து நிறுத்தத்திலும், 2-வது கூட்டம் சித்தூர் பேருந்து நிறுத்தத்திலும், 3-வது கூட்டம் பூலாம்பட்டி பேருந்து நிலையத்திலும் நடைபெற்றது.

நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் பொ.கிருஷ்ணன் தலைமை வகித்தார், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை, மேட்டூர் நகர செயலாளர் குமரப்பா, நங்கவள்ளி நகர செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ஆத்தூர் மகேந்திரன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்வு நடைபெற்றது.

வனவாசி நகர செயலாளர் பழ.உமாசங்கர், இளம்பிள்ளை திவ்யா, சுகந்தன் பிரபாகரன், திருப்பூர் மகிழவன், திராவிட தமிழர் கட்சி மாநில அமைப்பு செயலாளர் செல்வ முருகேசன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ராமலிங்கம், ஆம் ஆத்மி கட்சி எடப்பாடி சட்டமன்ற தொகுதி தலைவர் மா.குமரேசன், திராவிட தமிழர் எழுச்சி கழகம் தமிழ்மணி, திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர், ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இளம்பிள்ளை கோபி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். எடப்பாடி குமார் நன்றியுரை கூறினார். கடை வசூல் மூலம் ரூ.1530/- சித்தூரில் திரட்டப்பட்டது.

நங்கவள்ளி அருள்குமார், தோழர் சந்திரசேகரன், RS பகுதி தோழர் நாகராஜ், இளம்பிள்ளை பகுதி தோழர் சேகர், இருப்பாளி பகுதி முரளி, ஜலகண்டபுரம் கோபால், மேட்டூர் பகுதி தோழர் முத்துராஜ், தங்கமாபுரிபட்டினம் ராமச்சந்திரன், வெள்ளார் சிவா ஆகியோர் கலந்துகொண்டனர்.

7-வது மற்றும் 8-வது தெருமுனை கூட்டம் நேற்று ஜுலை 24,மாலை 4 மணிக்கு பால் பண்ணை அருகிலுள்ள சித்தனூரிலும், அடுத்தக் கூட்டம் மாலை 6 மணிக்கு கொல்லப்பட்டி பேருந்து நிறுத்தத்திலும் நடைபெற்றது. தங்கதுரை தலைமைத்தாங்கினார், மணிமாறன் முன்னிலை வகித்தார். முருங்கபட்டி ரமேசு வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து இளம்பிள்ளை மோகன்ராஜ், தமிழ்நாடு மாணவர் கழகம் செல்வா ஆகியோர் உரையாற்றினர். அசோக் நன்றி கூறினார்.

சேகர்,கோபி,திவ்யா,முத்துமாணிக்கம்,தனபதி,மேச்சேரி தமிழரசன், ஆர்.எஸ் பகுதி நாகராஜ், நங்கவள்ளி கிருஷ்ணன், அருள், பிரபாகரன், உமாசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டக் கழகம் சார்பாக 50 தெருமுனை கூட்டங்கள் நடத்துவது என திட்டமிடப்பட்டு அதன் தொடக்க கூட்டம் கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாளான ஜுலை 15-ஆம் தேதியன்று அனுப்பர்பாளையத்தில் நடைபெற்றது. முன்னதாக கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் சிலைக்கு கனல்மதி, மகிழவன் ஆகியோரின் கொள்கை முழுக்கங்களோடு கழகப் பொருளாளர் சு.துரைசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து முதல் கூட்டம் காலை 10.30 மணிக்கு அனுப்பர்பாளையத்தில் தொடங்கியது. திமுக 15 வேலம்பாளையம் பகுதிச் செயலாளர் கோ. ராமதாஸ், திமுக 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு, சிபிஐ 14வது வார்டு உறுப்பினர் செல்வராஜ், 10 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் திமுக அனுசியா தேவி என். சண்முகசுந்தரம், சிபிஎம் நகர செயலாளர் நந்தகோபால் மாவட்டத் தலைவர் முகில் இராசு, மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, தெற்குபகுதி செயலாளர் இராமசாமி, மாநகர தலைவர் வீ.தனபால், மாநகரச் செயலாளர் சி.மாதவன், மாநகர அமைப்பாளர் முத்து, 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் க.மாரிமுத்து திவிக, மகிழவன், இந்திய மாணவர் சங்கம் மணிகண்டன் ஆகியோர் உரையாற்றினார்கள். சரசுவதி நன்றி கூறினார்.

பல்லடம் நகர அமைப்பாளர் கோவிந்தராசு, அய்யப்பன், பல்லடம் பழனிச்சாமி, அனைமேடு டேவிட், அம்மாபாளையம் மோகன், அம்மாபாளையம் கணேசு, காளியம்மாள், முத்துலட்சுமி, சிரிஜா, கௌசல்யா, சங்கவி, ரூபா, பெரியார் விழுது பிரபன்யா, ஆதன், அனலிகா, இயல், ஆழியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காலை 12.30 மணிக்கு அம்மாபாளையம் பகுதியிலும் , மாலை 4 மணிக்கு பெரியார் சிலை அருகிலும் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி கருத்துரையாற்றினார், மதன், சிரிஜா நன்றி கூறினார்கள். அனுப்பர்பாளையம் இரமேசு, பாபு ஆகியோர் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். கணேசு தேனீர் ஏற்பாடு செய்தார்.

திருச்சி : திருச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில் தெருமுனை கூட்டமானது 22.07.2023 சனி, காலை 10 மணிக்கு மரக்கடை இராமகிருஷ்ணா மேம்பாலம் அருகிலும், அதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு திருச்சி இரயிலடி, காதி கிராப்ட் அருகிலும் நடைபெற்றது.

திருவரங்கம் நகர செயலாளர் அசோக், விராலிமலை ஒன்றியப் பொறுப்பாளர் குமரேசன் ஆகியோர் தலைமை வகித்தனர், திறுவெரும்பூர் ஒன்றிய செயலாளர் மணிகண்டன், திருப்பூர் காட்டன் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திறுவெரும்பூர் ஒன்றிய பொறுப்பாளர் குணாராஜ் தொடக்கவுரையாற்றினார், மாவட்ட கழக அமைப்பாளர் புதியவன், பெரம்பலூர் மாவட்ட கழக தலைவர் தாமோதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருப்பாளர்கள் விடுதலை, வழக்குரைஞர் சந்துரு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

பெரியார் பெருந்தொண்டர் வன கோவிந்தசாமி, வி.சி.க பெரம்பலூர் நாடாளுமன்ற பொருப்பாளர் தமிழாதன், பெரம்பலூர் சுதாகர், சர்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர், மாவட்டச் செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.

ஈரோடு வடக்கு : ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் எது சனாதனம்? எது திராவிடம்? இரண்டாம் நாள் தெருமுனைக் கூட்டம் நம்பியூர் பேருந்து நிலையம் பகுதியிலும், அடுத்த கூட்டம் கோபி ஒன்றியம் அளுக்குளி பகுதியிலும் இரமேசு தலைமையில் பெரியார் விழுது அறிவுக்கனல் பாடலுடன் துவங்கியது. வேலுச்சாமி, நாத்திக சோதி, சுப்பிரமணியம், கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் பரமேசுவரன், பு.இ.மு விசயசங்கர் ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்கள்.

கா.சு.வேலுச்சாமி – தலைமைக் கழகப் பேச்சாளர், நாத்திக ஜோதி – மாவட்ட தலைவர், நிவாஸ், மாவட்ட அமைப்பாளர், எலத்தூர் செல்வகுமார் – மாவட்டச் செயலாளர், கோபி அருளானந்தம், சத்தி முத்து – தமிழ்நாடு அறிவியல் மன்றம், தமிழரசன், சித்தா பழனிச்சாமி, பவானி வினோத், கிருஷ்ணமூர்த்தி, அளுக்குளி தங்கம் திமுக, அலிங்கியம் செந்தில் குமார், கோபி ராவணன், சின்னதம்பி, சண்முகம், நம்பியூர் ரமேஷ், அசோக், ரகுநாதன், சுப்பிரமணியம், அறிவுமதி, அறிவரசன், கோசனம் மயில்சாமி பெரியார் விழுது யாழ் திலிபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஈரோடு தெற்கு : ஈரோடு தெற்கு மாவட்டக் கழக சார்பாக எது சனாதனம்? எது திராவிடம்? மூன்றாவது நாளாக தெருமுனைக் கூட்டம் ஜுலை 23, மாலை 6.30 மணியளவில் சித்தோடு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இளைஞரணி தலைவர் பழனிச்சாமி, செயலாளர் பேரன்பு, விருதுநகர் செந்தில் ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி சிறப்புரையாற்றினார்.

இறுதியாக பெரியார், அம்பேத்கர், திராவிட மாடல், திராவிடர் விடுதலைக் கழகம் கடந்து வந்த பாதை, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய எது சனாதனம்? எது திராவிடம்? ஆகிய காணொளிகள் திரையிடப்பட்டன.
கூட்டத்தில் கிருஷ்ணன், திருமுருகன், இளவரசன், பாரதி, கணேஷ், அழகு, எழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You may also like...