Category: திண்டுக்கல்

புரட்சியாளர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா! பல்வேறு மாவட்டங்களில் கழகம் மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா! பல்வேறு மாவட்டங்களில் கழகம் மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரியாதை செலுத்தப்பட்டு சமத்துவநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு 14.04.2024 அன்று காலை 9 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். மடிப்பாக்கம் பகுதிக் கழக சார்பில் ஆதம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கழகத் தோழர்கள் – ஆதரவாளர்கள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஈரோடு : புரட்சியாளர் அம்பேத்கர் அவரது 134வது பிறந்த நாளை முன்னிட்டு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அம்பேத்கர்...

கழகத்தின் தெருமுனைக் கூட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு! சேலம், திண்டுக்கல், சென்னையில் முழுவீச்சில் பரப்புரை!

கழகத்தின் தெருமுனைக் கூட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு! சேலம், திண்டுக்கல், சென்னையில் முழுவீச்சில் பரப்புரை!

சென்னை : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரைக் கூட்டங்கள் வட சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை, சைதாப்பேட்டை கங்கையம்மன் கோயில் தெரு, சேத்துப்பட்டு அம்பேத்கர் திடல், மங்களாபுரம், ஓட்டேரி அஞ்சு லைட், ஜாயின்ட் அலுவலகம், அயன்புரம் உள்ளிட்ட இடங்களில் பிப்ரவரி 20 முதல் பிப்ரவரி 24 வரை நடைபெற்றது. உமாபதி – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி மற்றும் ஈரோடு பேரன்புவின் ராப் இசை பாடல்களுடன் ஒவ்வொரு கூட்டமும் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், அருண் கோமதி, பெரியார் நம்பி, மக்கள் அதிகாரம் காமராஜ், துணைவேந்தன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். மேற்கண்ட கூட்டங்களை வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி, ஏசு குமார், ராஜன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். திண்டுக்கல் : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!...

பரப்புரையில் பம்பரமாய்ச் சுழலும் திண்டுக்கல் – சென்னை மாவட்டங்கள்

பரப்புரையில் பம்பரமாய்ச் சுழலும் திண்டுக்கல் – சென்னை மாவட்டங்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரை இயக்கம் 11.02.2024 அன்று நெய்காரபட்டி, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம் புதூர், பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், வயலூர், மிடாப்பாடி, குமாரபாளையம், குருவன்வலசு, தாழையூத்து, சின்னக்கலையம்புத்தூர், மானூர், நரிக்கல்பட்டி, மேல்கரைப்பட்டி, கீரனூர், தொப்பம்பட்டி, வாகரை, புளியம்பட்டி, அமரபூண்டி, விருப்பாச்சி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, மாட்டுப்பாதை, கணக்கன்பட்டி, பொருளூர், கள்ளிமந்தயம், கொ.கீரனூர், I.வாடிப்பட்டி, சக்கம்பட்டி, சிந்தலப்பட்டி, அம்பிளிக்கை, இடையகோட்டை, மார்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, வெரியப்பூர், கேதையறும்பு, லெக்கயன்கோட்டை, அத்திக்கோம்பை, தும்பிச்சம்பட்டி, ஒட்டன்சத்திரம் இரயில் நிலையம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம், மூலச்சத்திரம், ஸ்ரீராமபுரம், கன்னிவாடி, தருமத்துப்பட்டி, ஆத்தூர், சித்தயன்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் பத்து நாட்களாக தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. புளியம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தை கவனித்த பெரியார் தொண்டர் ஒருவர் மாலை ஒன்றை வாங்கி பெரியார் படத்திற்கு மாலை அணிவித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது....

நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் எழுச்சியோடு தொடங்கியது கழகத்தின் பரப்புரை

நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் எழுச்சியோடு தொடங்கியது கழகத்தின் பரப்புரை

பிப்ரவரி 2-ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற கழகத் தலைமைக் குழுவில், “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” என்ற முழக்கத்தோடு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் கழகத்தின் பரப்புரைக் கூட்டங்கள் பொதுமக்களின் வரவேற்போடு எழுச்சியோடு தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னை: சென்னை மாவட்டத்தின் முதல் பரப்புரைக் கூட்டம் 10.02.2024 அன்று வேளச்சேரி காந்தி சாலையில் பொதுக்கூட்டமாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் எட்வின் பிரபாகரன் தலைமை தாங்கினார். இரண்யா வரவேற்புரையாற்றினார். பாடகர் கோவன் பங்கேற்ற ம.க.இ.க கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகளுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. கழகத் தோழர் பேரன்பு ராப் பாடல்கள் பாடினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் இரா.உமா, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் ஆகியோர் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் பேராபத்துக்களை மக்களிடம் விளக்கிப் பேசினர். திராவிட முன்னேற்றக்...

களைகட்டிய பொங்கல் நிகழ்ச்சிகள் சென்னையில் மேயர் பிரியாராஜன் பங்கேற்பு

களைகட்டிய பொங்கல் நிகழ்ச்சிகள் சென்னையில் மேயர் பிரியாராஜன் பங்கேற்பு

திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 24-ஆம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் 07.01.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை திமுக இளைஞரணி மேற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் 13.01.2024, சனிக்கிழமை நடைபெற்றது. “மாணவக் கலைஞர்கள் குழுவின்” பறையிசை – ஒயிலாட்டம் – மரக்கால் ஆட்டம் – தீச்சிலம்பம் – மயிலாட்டம் – மாடாட்டம் – புலி ஆட்டம், Dude’z in Madras குழுவின் ராப் இசை, U Won Dance Crewe பகுதி மாணவிகளின் நடனம், கானா சுதாகர்‌ – புரட்சிமணியின் மக்களிசை சங்கமம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரிசளிப்பு விழாவுக்கு மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமை தாங்கினார். இராஜேசு வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் வணக்கத்துக்குரிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, 119வது வார்டு மாமன்ற...

சென்னை, திண்டுக்கல்லில் கலந்துரையாடல் கூட்டங்கள்

சென்னை, திண்டுக்கல்லில் கலந்துரையாடல் கூட்டங்கள்

திருவல்லிக்கேணி : கழக திருவல்லிக்கேணி பகுதிக் கலந்துரையாடல் கூட்டம் 27.01.2024 அன்று இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில்  பகுதிச் செயலாளர் ப.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடந்து முடிந்த 24ஆம் ஆண்டு பொங்கல் விழா வரவு – செலவு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் பகுதி கழக செயல்வீரர்களுக்கு பயிலரங்கம், வருகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 27.01.2024 அன்று மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடுத்தகட்டப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். பின்னர் பழனி அ.கலையம்புத்தூர் ஊராட்சி வண்டிவாய்க்காலில் அமைந்துள்ள தந்தை பெரியார் படிப்பகத்தை பார்வையிட்டனர். இதில் மாக்சிம் கார்க்கி, ராஜா, பெரியார், நாச்சிமுத்து, கபாலி, சங்கர், ஆயுதன், உஷாராணி, இம்ரான்...

கொலைகார சாமியாரை  கைது செய்யக் கோரி கழகம் புகார் மனு

கொலைகார சாமியாரை கைது செய்யக் கோரி கழகம் புகார் மனு

சென்னை : “டெங்கு, மலேரியா, காலரா போன்று சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று பேசிய மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி நிர்ணயித்த அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ ஆச்சாரியாவை கைது செய்து சிறையில் அடைக்க கோரி கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் இராயப்பேட்டை காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, சனாதன சக்திகளின் கனவு தமிழ்நாட்டில் ஒருபோதும் பலிக்காது, சனாதனத்திற்கு எதிரான கருத்தில் உறுதியாக நிற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் துணை நிற்கும் என்று கூறினார். கோவை : கோவை மாநகரக் கழக சார்பில் காட்டூர் காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கழக அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் திண்டுக்கல் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது....

ஆளுநரே திரும்பி போ திண்டுக்கல் மாவட்ட கழகம் கருப்புகொடி

ஆளுநரே திரும்பி போ திண்டுக்கல் மாவட்ட கழகம் கருப்புகொடி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை மதர்தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் அவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் 10க்கும் மேற்பட்ட இயக்கத் தோழர்கள் ஒன்றாக இணைந்து பல்கலைக்கழகம் அருகே கருப்புக் கொடிகாட்டி போராட முயன்ற நிலையில் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து பழனி அழைத்து வரப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். தொடர்ந்து தமிழக கவர்னர் R.N.ரவியே திரும்பிப்போ சனாதானத்தின் மறு உருவமே வராதே உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பெரியார்முழக்கம் 07092023

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

காலை சிற்றுண்டி வழங்குவதன் காரணமாக பள்ளிக் கழிவறைகள் நிரம்பி வழிகின்றன என்ற வர்ணாசிரம திமிரோடு தலைப்பு செய்தி வெளியிட்ட தினமலம் நாளேட்டை கழகத் தோழர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். சென்னை : பள்ளி மாணவர்களுக்கு “காலை சிற்றுண்டி” திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட சனாதன வெறி பிடித்த தினமலரை கண்டித்து தினமலம் நாளிதழ் எரிப்பு போராட்டம் இன்று 01.09.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தினமலம் நாளேடு அலுவலகம் அருகே இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தினமலம் நாளிதழை தீயிட்டு கொளுத்தி தினமலம் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க வளர்மதி, தமிழ்நாடு மாணவர் கழக இரண்யா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கரு.அண்ணாமலை, சேத்துப்பட்டு இராசேந்திரன், மயிலை...

மக்கள் ஆதரவோடு தெருமுனைக் கூட்டங்கள்

மக்கள் ஆதரவோடு தெருமுனைக் கூட்டங்கள்

சென்னை : சென்னை மாவட்டக் கழக சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டங்கள் 28.08.2023 திங்கள் அன்று சிந்தாதிரிப்பேட்டை, சாமி நாயக்கன் தெருவில் மாலை 5 மணிக்கும், மாலை 7:30 மணியளவில் கலவைத் தெருவிலும் நடைபெற்றது. அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தமிழ்நாடு மாணவர் கழகம் தேன்மொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன் ஆகியோர் உரையாற்றினர். 29.08.2023 செவ்வாய் மாலை 6 மணிக்கு தரமணி நூறடி சாலையிலும், அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு பெருங்குடி நூறாடி சாலையில் நடைப்பெற்றது. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, பெரியார் நம்பி, இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், இரண்யா ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்கள்.. கூட்டத்தில் பங்கேற்ற கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கருத்துரையாற்றிய தோழர்களுக்கு நூல்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்....

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் திண்டுக்கல் 40 கூட்டங்களை நிறைவு செய்தது

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் திண்டுக்கல் 40 கூட்டங்களை நிறைவு செய்தது

சென்னை : சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பாக 21.08.2023 திங்கள் மாலை 5 மணிக்கு கோடம்பாக்கம் மார்கெட் அருகிலும், மாலை 7 மணிக்கு தர்மாபுரம் மாரியம்மன் கோவில் அருகிலும், 23.08.2023 செவ்வாய் மாலை 5 மணிக்கு, மடுவாங்கரை புதியத் தெருவிலும் இரவு 7:30 மணிக்கு, பழைய பூந்தமல்லி சாலை, கங்கை அம்மன் கோவில் அருகிலும், 23.08.2023 புதன்கிழமை மாலை 5 மணிக்கு ஜாபர்கான்பேட்டை, கங்கையம்மன் கோயில் அருகிலும், மாலை 7 மணி ஜோன்ஸ் சாலை சாரதி நகர் சந்திப்பிலும், 24.08.2023 வியாழன் அன்று மாலை 5.30 மணிக்கு ஜோன்ஸ் சாலை கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெருவிலும், மாலை 7.30 மணிக்கு சைதாப்பேட்டை, குயவர் வீதியிலும், 25/08/2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகிலும், மாலை 7.30 மணிக்கு அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகிலும், 26.08.2023 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையிலும்,...

பட்டியல் தயாரிப்பு ; வழிகாட்டுகிறது திண்டுக்கல் மாவட்டம்

பட்டியல் தயாரிப்பு ; வழிகாட்டுகிறது திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 9.7.2023 அன்றுகாலை 10 மணியளவில் பழனியில் உள்ள பூம்புகார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை வகித்தார், மாவட்ட அமைப்பாளர் மருத மூர்த்தி முன்னிலை வகித்தார். கழகப் பொருளாளர் திருப்பூர்.துரைசாமி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் செயற்குழு உறுப்பினர் இரா.உமாபதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் “வைக்கம் போர் இன்னும் முடியவில்லை” என்கிற தலைப்பில் சேகரிக்கப்பட்ட ஜாதித் தீண்டாமை குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியலை தலைமைக் குழு உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர்.பட்டியல் தயாரிப்புக்கு தனிப் படிவங்களை அச்சிட்டு நூறு கிராமங்களுக்கு மேள் நேரில் சென்று தீண்டாமைக் கொடுமைகளை திரட்டியுள்ளனர். 1. எது திராவிடம்? எது சனாதனம்? என்னும் தலைப்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 50 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது. 2 ஐம்பது புரட்சிபெரியார் முழக்கம் இதழுக்கு ஒரு மாதத்திற்குள் சந்தா சேர்த்து...

கொடைக்கானலில் ஆளுநருக்குக் கழகம் கருப்புக் கொடி

கொடைக்கானலில் ஆளுநருக்குக் கழகம் கருப்புக் கொடி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானலுக்கு வருகை தந்ததை ஒட்டி அவருக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகச் செயல்படுவதையும், சட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதைக் கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டன. பின்னர் கழகத் தோழர்கள் மருதமூர்த்தி, பெரியார், மாக்சிம் கார்கி, ராஜா, கபாலி, ஆயுதன், வீரா, ஜீவா, துர்க்கைராஜ், சிவா, முருகன் உள்ளிட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுக்கப்பட்டனர். பெரியார் முழக்கம் 18052023 இதழ்

கழகம் எடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

கழகம் எடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

வேலூர்: புரட்சியாளர் அம்பேத்கர் 132ஆவது பிறந்தநாள் விழா வேலூர் மாவட்டக் கழக சார்பில் மாவட்டச் செயலாளர் சிவா தலைமையில் குடியேற்றம், கொண்டசமுத்திரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர்  விடுதலைக் கழகம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இணைந்து மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்பு அனைவரும் ஜாதி ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். நண்பகல் 12 மணிக்கு வேலூர் மாநகரில் விசிக ஒருங்கிணைத்த “ஜனநாயகம் காப்போம்! சனாதனத்தை வேரறுப்போம்!”பேரணியில் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். நண்பகல் 2 மணிக்கு ராமாலையில் திராவிட் மற்றும் பகுதித் தோழர்கள் ஒருங்கிணைப்பில் அம்பேத்கருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் சிறப்பு உணவு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு  வேலூர் மாவட்டம் புட்டவாரபள்ளி கிராமத்தில் அமல்ராஜ், ஒருங்கிணைப்பில் பொதுமக்களோடு இணைந்து அம்பேத்கர்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.   இரவு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது....

‘திராவிட மாடல்’ பரப்புரைப் பயணத்துக்குத் தோழர்கள் தயாராகிறார்கள்

‘திராவிட மாடல்’ பரப்புரைப் பயணத்துக்குத் தோழர்கள் தயாராகிறார்கள்

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ மண்டல மாநாடு ஒட்டி மாவட்ட கழகங்களின் கலந்துரையாடல்களை நடத்தி தோழர்கள் பயணத்துக்கு திட்டமிட்டு வருகிறார்கள். சென்னை : கடந்த ஏப்ரல் 02, 03 ஆகிய நாட்களில், ஈரோட்டில் நடைபெற்ற தலைமைக்குழு, செயலவையில், மண்டலம் வாரியாக மாநாடு நடத்துவது என்றும், மாநாட்டிற்கு முன்னதாக 15 தெருமுனைக் கூட்டங்கள் மாவட்டம் வாரியாக நடத்த வேண்டும் என்றும், முடிவுகள் எடுக்கப்பட்டன. செயலவை முடிவுகளின் படி, சென்னை மாவட்டம் சார்பாக மாநாடு மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது பற்றி சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல், 05.04.2022 செவ்வாய் கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை இராயப்பேட்டை வி.எம் தெரு பெரியார் படிப்பகத்தில், மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன் ஆகியோர் உட்பட மாவட்ட, பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். சேலம் – தருமபுரி...

ஆயக்குடியில் பெரியாரியல் கொள்கை விளக்கக் கூட்டம்

ஆயக்குடியில் பெரியாரியல் கொள்கை விளக்கக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியாரியல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் 11-3 – 2022 அன்று புது ஆயக்குடி அரிசி ஆலை பகுதியில் உள்ள வ.பழனிச்சாமி நினைவுத் திடலில் மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு புது ஆயக்குடி பகுதி தோழர் வே.சங்கர் தலைமை வகித்தார். ஒட்டன்சந்திரம் தங்கவேல் முன்னிலை வகித்தார். நிகழ்வின்தொடக்கமாக ஆயக்குடி பகுதி பொறுப்பாளர் சு.அழகர்சாமி மந்திரமா? -தந்திரமா?அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்தி, சாமியார்கள் செய்வது மந்திரமல்ல மக்களை ஏமாற்றும் தந்திரமே என்று செய்து காட்டினார். அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட தோழர் சண்முகம், தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தொழில் முனைவோர் மோடியின் ஆட்சியில் சந்திக்கும் இடர்களை குறித்து விளக்கினார். தொடர்ந்து உரையாற்றிய கழக பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகள் படும் வேதனைகளையும், விளக்கினார். அடுத்து உரையாற்றிய அமைப்புச்...

கழகப் பொறுப்பாளர்கள் இரண்டாம் கட்டப் பயணம்:  தோழர்களுடன் சந்திப்பு

கழகப் பொறுப்பாளர்கள் இரண்டாம் கட்டப் பயணம்: தோழர்களுடன் சந்திப்பு

இரண்டாம் கட்டப் பயணமாக, 23,24, 25.11.2021 ஆகிய தேதிகளில், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், திருப்பூர் அய்யப்பன் ஆகியோர், மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களிடத்தில் கலந்துரையாடினர். திண்டுக்கல் : 23.11.2021 காலை 11 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகில் உள்ள வேலன் விடுதியில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி, பெரியார் செல்வம் உள்ளிட்ட மாவட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். நிகழ்கால அரசியல் செயல்பாடுகள், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், எதிர்வரும் காலங்களில் இயக்க செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. மதிய உணவு பழனி கழக தோழர்களால் வழங்கப்பட்டது. மடத்துக்குளம் : மாலை 4 மணியளவில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மோகன் இல்லத்தில் தோழர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்பகுதியைச் சார்ந்த சிவானந்தம், இராசேந்திரன், கணக்கன் மற்றும் மடத்துக்குளம் மோகன் இணையர் ஜோதி ஆகியோர்...

மணப்பாறையில் கழகக் கூட்டம்: கொளத்தூர் மணி சிறப்புரை

மணப்பாறையில் கழகக் கூட்டம்: கொளத்தூர் மணி சிறப்புரை

மணப்பாறையில் திராவிடர் விடுதலைக் கழகம், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ‘திராவிடத்தை ஆதரிப்போம்’ விளக்கப் பொதுக்கூட்டம் 3.2.2021 அன்று மாலை 6 மணியளவில் மணப்பாறை தந்தை பெரியார் சிலை அருகில் பெரியார் பெருந்தொண்டர் டைலர் சேகர் நினைவு திடலில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒன்றிய அமைப்பாளர் வீ.தனபால் வரவேற்புரையாற்றினார்.  மணவை சீரா. ஆனந்தன் (ஒன்றிய பொருளாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), சந்துரு (வழக்கறிஞர் திராவிடர் விடுதலைக் கழகம், திருச்சி, மாதம்பட்டி), கார்த்திகேயன் (மணப்பாறை நகர அமைப்பாளர்), விஜயகுமார் (கடவூர் பகுதி பொறுப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம்), விஜயா மோகன் (கடவூர் ஒன்றிய அமைப்பாளர்) ஆகியோர்  முன்னிலை வகித்தார்கள். பகுத்தறிவு பாடல்களை பெரியார் பிஞ்சுகள் யாழிசை, யாழினி பாடினார்கள். ‘மந்திரமா? தந்திரமா?’ அறிவியல் விளக்க நிகழ்ச்சியை துரை தாமோதரன் (பெரம்பலூர் மாவட்ட செயலாளர், திவிக)  நடத்தினார். பெரியார் பெருந்தொண்டர்கள் அய்யா திருமால், டெய்லர் சேகர் ஆகியோர் படங்களை கழகத் தலைவர் கொளத்தூர்...

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது. வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது. பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம்...

திண்டுக்கல்லில் 20 ஆண்டுகளாக அரசு ஒப்புதலுக்காக முடக்கிக் கிடக்கும் வள்ளுவர் சிலை

திண்டுக்கல்லில் 20 ஆண்டுகளாக அரசு ஒப்புதலுக்காக முடக்கிக் கிடக்கும் வள்ளுவர் சிலை

திருவள்ளுவர் இலக்கியப் பேரவை மற்றும் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பில், திண்டுக்கல்லில் அரசின் ஆணையிருந்தும் 20 ஆண்டுகளாகத் திறக்க முடியாமல் முடங்கியிருக்கும் திருவள்ளுவர் சிலையை உடனே நிறுவிட அரசின் ஒப்புதலை வேண்டி, 13.12.2019 அன்று காலை 10 மணியளவில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் பெரியார் சரவணன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), கோவை இராமகிருட்டிணன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), குடந்தை அரசன் (விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி)   உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26122019 இதழ்

திண்டுக்கல்லில் இராவணன்  படத்திறப்பு

திண்டுக்கல்லில் இராவணன் படத்திறப்பு

முடிவெய்திய கழகத்தின் பெரியாரியப் பணியாளர் இராவணன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 15.12.2019 அன்று காலை 10 மணியளவில் திண்டுக்கல், தலைமை அஞ்சலகம் அருகில் உள்ள வாழ்க வளமுடன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை மாநில அமைப்புச் செயலாளர் புலேந்திரன் தலைமை தாங்கினார். ஆனந்த் முனி ராசன், மரிய திவாகரன், கி. இரவிச்சந்திரன், கோபி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க, பெரியார் நம்பி வரவேற்புரையாற்றினார். இராவணன் படத்தைத் திறந்து கழகத் தலைவர் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மீ.த. பாண்டியன், துரை சம்பத் (த.பெ.தி.க.), பொள்ளாச்சி விஜயராகவன், உள்ளிட்ட அமைப்பு களைச் சேர்ந்த தோழர்கள் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர். பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக நிகழ்வு ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 19122019 இதழ்

தலைமை நிலையத்தில் இராவணன் படத்திறப்பு

தலைமை நிலையத்தில் இராவணன் படத்திறப்பு

30.11.19 அன்று மாலை 6 மணிக்கு  திவிக தலைமை அலுவல கத்தில், முடிவெய்திய முழு நேரப் பெரியாரிய தொண்டர் இராவணன் அவர்களின் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர்மணி திறந்து வைத்தார். தோழர் இராவண னுடனான நட்பு குறித்தும் அவர் பெரியார் கொள்கைக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்தும் தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள். இந்த மரணம் நமக்கு என்ன உணர்த்துகிறது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? என்றும் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது அவரைப் போல் கொள்கையை முன்னெடுத்து செல்வதிலேயே உள்ளது என்றும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார்கள். மனிதி அமைப்பைச் சார்ந்த செல்வி, இராவணன் குடியிருந்த இல்லத்தின் உரிமையாளர் கவிதா, ஊடகவியலாளர், பாலிமர் ரமேஷ், மாவட்ட செயலாளர் இரா. உமாபதி ஆகியோர் உரையாற்றினர். அய்யனார் தலைமை தாங்கினார். பெரியார் முழக்கம் 12122019 இதழ்

ஒட்டன் சத்திரத்தில் திராவிட விழுதுகள் நடத்திய  ‘பெரியாரியல் பயிற்சி வகுப்பு’

ஒட்டன் சத்திரத்தில் திராவிட விழுதுகள் நடத்திய ‘பெரியாரியல் பயிற்சி வகுப்பு’

18-11-2018 ஞாயிறு அன்று காலை 10-00 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 4-00 மணிவரை ஒட்டன்சத்திரம், பேருந்து நிலையம் அருகி லுள்ள இராம லிங்கசாமிகள் மடத் தின் அரங்கில், ஒட்டன் சத்திரம் திராவிட விழுதுகள் அமைப்பின் சார்பாக பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் பங்கேற்க பல் வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்களும், தோழர்களும், மாணவர்களும் 30 பெண்களும் ஆக 80 பேர் கலந்துகொண்டனர். வீ. அரிஸ்டாட்டில் வரவேற்புரையாற்ற, பேரா. மதியழகன் நோக்க உரையாற்றினார். ‘ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு’ என்ற தலைப்பில் பணிநிறைவு பெற்ற கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் மு.செந்தமிழ்ச்செல்வன் எளிய எடுத்துக்காட்டுகளைக் கூறி விளக்கியதோடு, இன்று இட ஒதுக்கீடு சந்திக்கும் நெருக்கடிகளையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார். அடுத்ததாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெரியாரியல் – காலத்தின் தேவை என்ற தலைப்பில் கருத்துகளை முன்வைத்தார்.  நண்பகல் உணவுக்குப் பின்னர் 2-30 மணியளவில் பிற்பகல் அமர்வு தொடங்கியது....

கழக ஏடுகளுக்கு சந்தா  சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

டிசம்பர் 24ஆம் தேதி திருச்சி கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகி வரும் கழகத் தோழர்கள் கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கத்திலும் முனைப்போடு  செயல்பட்டு வருகிறார்கள். மாவட்டக் கழகத் தோழர்களுடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். முதல் கட்டமாக பயணம் நவம்பர் 21ஆம் தேதி காலை ஈரோடு வடக்கு மாவட்டம் கோபியில் காலை 11.30 மணியளவில் கழகத் தோழர் நிவாஸ் இல்லத்தில் நடந்தது. ஈரோடு வடக்கு மாவட்டமான கோபியில் 7 ஒன்றியங்களில் கழக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. கல்வி உரிமை பரப்புரைப் பயணத்தைத் தொடர்ந்து ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத் தோழர்கள் பரப்புரைக்காக வாங்கியுள்ள வாகனத்தைப் பயன்படுத்தி கிராமம் கிராமமாக பரப்புரையை தொடர் நிகழ்வாக நடத்தி வருவது...

மணப்பாறையில் கழகப் பொதுக்கூட்டம் ! 10082017

கழகத் தலைவர் சிறப்புரையாற்றினார் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக, சமூகநீதி சமத்துவப் பரப்புரைப் பயணத்தின் மதுரை அணி சார்பாக, மணப்பாறையில் பெரியார் சிலை அருகில் 10.08.2017 மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் தோழர் காவை. இளவரசுவின் “மந்திரமல்ல தந்திரமே” நிகழ்ச்சி நடைபெற்றது.. நிகழ்வில் தோழர்.தனபால் தலைமை வகித்தார். தோழர்கள் அறிவுச்செல்வன்,விஜயமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.சி.க ஒன்றிய துணைச்செயலாளர் தோழர்.சீ.ரா ஆனந்தன் வரவேற்புரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகத்தின் தோழர். பாவலர் பசுலுதீன், ஆதிதிராவிடர் நலப்பேரவையின் தலைவர் தோழர்.மணிவண்ணன், மாவட்ட திராவிடர் கழக துணைத்தலைவர் 90 வயது கடந்த மூத்த பெரியார் தொண்டர்.தோழர் திருமால், CPI யின் நகரச் செயலாளர் ஜனசக்தி உசேன், திராவிடர் கழக நகரச் செயலாளர் CMS ரமேஷ், தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளர் தோழர்.துரை.காசிநாதன் ஆகியோர் உரையாற்றினர்.. 90 வயது கடந்த மூத்த பெரியார் பெருந்தொண்டர் அய்யா திருமால் அவர்களுக்கு கழகத்தலைவர் தோழர்.கொளத்தூர்மணி நினைவுப்பரிசு...

இரமேசு பெரியார் – அல்லி வாழ்க்கை இணையேற்பு விழா சித்தையன் கோட்டை 11092016

11-9-2016 ஜாதி ஒழிப்புப் போராளி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் தோழர்கள் அல்லி – இரமேசு பெரியார் ஆகியோரது வாழ்க்கைத் துணை ஒப்பந்தவிழா, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், வே.மதிமாறன்,  மக்கள் மன்றம் மகேஸ்   புத்தர் கலைக்குழு மணிமாறன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர் இரமேசு பெரியார், ஒப்பந்தவிழாவில் பெரியாரின் உடையாகிய கருப்பு சட்டை லுங்கியுடன் இருந்தார். மாலைகள் அணிவதற்கு முன்னர் இருவரும் ஒருவருக்கொருவர் பறையை அணிவித்துக் கொண்டனர். விழா முடிவில் மாட்டுக் கறி உணவு வழங்கப்பட்டது. தங்கள் திருமணம் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில்தான் நடைபெறவேண்டும் என்பதிலும், மாட்டுக்கறி உணவு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்த தோழர்கள் அல்லி- இரமேசு பெரியார்  இருவரும் வெவ்வேறு பிற்படுத்தப்பட்ட  ஜாதிகளைச் சேர்ந்த பெற்றோரின் பிள்ளைகள் ஆவர். தோழர் இரமேசு பெரியார் மக்கள்...

பிரியாவிடை ! கண்ணீர் மல்க பிரிந்து செல்லும் குழந்தைகள் !

பிரியாவிடை ! கண்ணீர் மல்க பிரிந்து செல்லும் குழந்தைகள் ! ”குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் – 2016” தமிழ்நாடு அறிவியல் மன்றம் 20.05.2016 முதல் 24.05.2016 முடிய 5 நாட்கள் திண்டுக்கல்,ஐ.சி.எம். ஹவுசில் நடத்திய ”குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் – 2016” ல் பங்கேற்ற குழந்தைகள் முகாம் நிறைவுற்று தத்தமது இல்லம் திரும்பும் போது கண்ணீர் மல்க சக நண்பர்களுக்கு பிரியாவிடை கொடுத்த நெகிழ்ச்சியான நிகழ்வு. 42 குழந்தைகள் பங்கேற்புடன் இம்முகாம் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்சியுடனும் நடைபெற்றது.  

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்திய ”குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் – 2016 ”

திண்டுக்கல்,ஐ.சி.எம். ஹவுசில் 20.05.2016 முதல் 24.05.2016 முடிய 5 நாட்கள் நடைபெற்ற குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் 42 குழந்தைகள் பங்கேற்புடன் சிறப்புடன் நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் கருத்துக்கள் பகிரப்பட்ட இப்பழகு முகாமில் ”விமர்சன சிந்தனை மற்றும் பாலின சமத்துவம்” குறித்து தோழர் பூங்குழலி கருத்துரைத்தார். கதை சொல்லல் மற்றும் கதை உருவாக்கல் ஆகியவற்றை தோழர்கள் கோவை வெங்கட்,திருப்பூர் சதீஸ்குமார் ஆகியோர் நிகழ்த்தினர். ”நாடகம் மற்றும் திறன் வளத்தல் ”குறித்த கருத்துக்களை தோழர் சந்திரமோகன் அவர்களும்,”இளம் பருவத்தினருக்கான சவால்கள்” வகுப்பினை தோழர் நீலாவதி அவர்களும், ”வாசிப்பும்,விமர்சனமும்” வகுப்பினை தோழர் சிவகாமி அவர்களும் வழி நடத்தினர். சமூக சிற்பிகள் அறிமுகத்தினை தமிழ்செல்வன் அவர்களும், மீளாய்வுகளை மணிமாறன் அவர்களும் நெறிப்படுத்தினர்.ஓவிய வகுப்புகளுக்கு சிகரன்,பாடல் வகுப்புகளுக்கு யாழினி ஆகியோரும் பொறுப்பேற்று நடத்தினர். சித்தன்னவாசல் புதுக்கோட்டை அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு குழந்தைகள் சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டனர். அறிவிற்கும் மன வளர்ச்சிக்குமான செய்திகளும்,கொண்டாட்டமும் நிறைந்த இம்முகாம் இனிதே நிறைவடைந்தது. இறுதி...

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ”குழந்தைகள் பழகு,மகிழ்வு முகாம் !”

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ”குழந்தைகள் பழகு,மகிழ்வு முகாம் !”

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் ”குழந்தைகள் பழகு, மகிழ்வு முகாம் !” 10 முதல் 15 வயதுவரை உள்ள குழந்தைகள் இருபாலரும். தேதி : 20.05.2016 முதல் 24.05.2016 முடிய 5 நாட்கள். இடம் : திண்டுக்கல். ♫ திறன் வளர்த்தல் ♫ பாலின சமத்துவம் ♫ படைப்பாற்றல் வளர்த்தல் (ஓவியம்,இசை,நாடகம்) ♫ திறனாய்ந்து வாசித்தல் ♫ ‘கதை சொல்லி’யோடு ஒருநாள் ♫ குழுவிவாதம் ♫ சமூக விஞ்ஞானிகள் ஓர் அறிமுகம் ♫ சித்தன்னவாசல் சுற்றுலா மற்றும் பல நிகழ்வுகளுடன்…………. குறைந்த பட்ச பங்களிப்பு : ரூ 1000/= (ரூபாய் ஒரு ஆயிரம் மட்டும்) வாய்ப்புள்ள தோழர்கள் முழுதொகையான 1500 /= (ரூபாய் ஒரு ஆயிரத்து ஐநூறு மட்டும்) ரூபாயை பங்களிக்கலாம். ”முன் பதிவு அவசியம்” தொடர்புக்கு : ஆசிரியர் தோழர் சிவகாமி – 9842448175 ஆசிரியர் தோழர் சிவக்குமார் – 9688856151

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – பழனி புகைப்படங்கள்

பழனியில் ஆர்ப்பாட்டம் ! பழனி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அய்தராபாத் மத்திய பல்கலைக் கழக மாணவர் “ரோகித் வெமுலா” மரணத்துக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் (01-02-2016) பழனி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் திருமூர்த்தி தலைமை தாங்கினார். தோழர்கள் ஆனந்த்,கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்கள் திருச்செல்வம்,காளிமுத்து,சிவமணி கண்டன உரையாற்றினர். இறுதியில் தோழர் குட்டி நன்றியுரை ஆற்றினார். பார்ப்பன “துரோணாச்சாரி”களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள் ?”ஏகலைவன்”களாக இனியும் இருக்கமாட்டோம் ! என முழக்கங்கள் எழுப்பட்டன.