அடைமழையாகப் பரப்புரைக் கூட்டங்கள் 2024 – கழகத்தின் களப்பணிகள்
ஜனவரி: சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வட சென்னை, திருப்பூரில் கழக சார்பில் பொங்கல் விழாக்கள் நடந்தன. திருவல்லிக்கேணி விழாவில் சென்னை மேயர் பிரியா சிறப்பு விருந்தினர். திருப்பூர் மாநகர கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையர் குடும்ப விழாவை இந்திய அரசியலும் பார்ப்பனியமும் என்ற கருத்தரங்கமாக நடத்தினர். சிறப்புரை : கொளத்தூர் மணி. பிப்ரவரி: ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் சர்வாதிகாரத்தை எதிர்த்துக் கழகம் தொடர் கூட்டங்களை நடத்தியது. சென்னை, சேலம், திண்டுக்கல், திருச்சி மற்றும் ஈரோடு தெற்கு பகுதிகளில் கூட்டங்கள் நடந்தன. பிப்ரவரி 03: மதுரை மாவட்டக் கழக சார்பில் ஜாதி மறுப்பு இணையர்களுக்குப் பாராட்டு விழா. பிப்ரவரி 15: திண்டுக்கல், திருப்பூர், சென்னை மாவட்டங்களில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” “சமூக ஒற்றுமையைக் காப்போம்” தொடர் பரப்புரைக் கூட்டங்கள் நடந்தன. மேட்டூரில் பரப்புரைக் கூட்டத்துக்கு ஜலகண்டபுரம் காவல்துறை அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்று கூட்டங்கள் நடந்தன....